Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த 30 வருடங்களாக புலி;களைத் தோற்கடிக்காதது ஏன்? கோத்தாபயவிடம் சரத் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 30 வருடங்களாக புலி;களைத் தோற்கடிக்காதது ஏன்? கோத்தாபயவிடம் சரத் கேள்வி

24 மே 2011

ஐநா பொதுச் செயலாளர் பான்கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பின்வாசல் வழியாகத் தகவல்களை வழங்கியுள்ள அரசாங்கம்,

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான்கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பின்வாசல் வழியாகத் தகவல்களை வழங்கியுள்ள அரசாங்கம், தற்போது இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்க முயற்சிக்கிறது என இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மேல் நீதிமன்றில் நடைபெற்றது. விசாரணை நிறைவுபெற்ற பின்னர் சிறை திரும்புவதற்கு நீதிமன்றில் இருந்து வெளியில் வந்த சரத் பொன்சேகா, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழுவின் அறிக்கைக்குத் தேவையான தகவல்களைப் பின்வாசல் வழியாக அரசு வழங்கிவிட்டு இப்போது இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்க முயற்சி செய்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவை சுற்றிலும் சிறை அதிகாரிகள் பாதுகாப்பளித்து மறித்து நின்றனர். இதனையும் பொருட்படுத்தாமல் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு தளபதியாலும் புலிகளைப் போரில் தோற்கடித்திருக்க முடியும் என்றால் கடந்த 30 வருடங்களாக அவர்களைத் தோற்கடிக்காதது ஏன்? என இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நீதிமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொடுத்த ஆதரவை எந்த ஒரு இராணுவத் தளபதிக்கு வழங்கி இருந்தாலும் இந்தப் போரை வென்றிருக்க முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்த கருத்துக்கே பொன்சேகா நேற்றுப் பதில் கேள்வி எழுப்பினார்.

இதன் மூலம் கோத்தபாயவின் கருத்துப் பொய்யானது என நிரூபணமாகி உள்ளதாகவும், வெள்ளைக் கொடி வழக்கில் வழங்கிய சாட்சியத்தில் பொன்சேகா தெரிவித்தார்.

1983ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றேன். 1986 ஆம் ஆண்டில் எனது மூத்த மகளைப் பாடசாலையில் சேர்த்தபோது எனது மனைவியிடத்தில் 6ஆயிரம் ரூபா பெற்று பாடசாலை சேர்ப்பதற்கான செலவுகளுக்காகப் பயன்படுத்தினேன்.

எனது இராணுவ வாழ்வில் பணக் கஷ்டம் இருந்தாலும், பிழையான வழிகளில் தேவையான பணத்தைப் பெறவில்லை என இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றேன்.

கடந்த 36 வருடங்களாக இவ்வாறு வாழ்ந்த நான், இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த 4 வருடங்களிலும் கூட பண மோசடியில் ஈடுபடவில்லை. 1986ஆம் ஆண்டில் இராணுவப் பரீட்சை ஒன்றில் முதலாம் இடம்பெற்ற எனக்கு பங்களாதேஷ் செல்ல புலமைப்பரிசில் கிடைத்தது.

இரண்டாவது ஈழப் போரில் அம்பாறை, மட்டக்களப்பு, கல்முனை ஆகிய பகுதிகளுக்குச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமிருந்த பகுதிகளை மீட்டுக்கொண்டோம்.

1986ஆம் ஆண்டின் செப்டெம்பர் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் களமிறங்கினேன். அதன்போது காரைநகர், ஊர்காவற்றுறை, மண்டைதீவு ஆகிய பகுதிகளை புலிகளிடமிருந்து மீட்டோம்.

தற்போதைய பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றும் கோத்தபாய ராஜபக்ஷ அப்பகுதிக்கு கட்டளைத் தளபதியாகவும், நான் சிங்கப் படைப்பிரிவிலும் பணியாற்றினோம்.

மண்டைதீவை மீட்கும் பொறுப்பு அன்று மேஜர் ஜெனரல் கொப்பேகடுவவினால் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு ஊர்காவற்றுறையிலிருந்து மண்டை தீவுக்கு நுழைவாயில் வழியாகச் செல்லாமல், முழுப் படையினரும் களத்தில் இறங்கிப் போராடினர். அதன்போது இராணுவத்தினர் பலர் உயிரிழக்க நேரிட்டது.

அந்த அழிவில் இருந்து காப்பாற்ற எனக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இருந்தும் நான் எனது படைகளுடன் மண்டைதீவு நுழைவாயில் வழியாக உள்நுழைந்து 40 நிமிடங்களில் முழுத்தீவையும் மீட்டெடுத்தேன்.

போராட்டத்தில் விடுதலைப் புலிகள் 60 பேரின் சடலங்களும் 75இற்கும் மேற்பட்ட ஆயுதங்களும் இராணுவத்தால் மீட்கப்பட்டன.

மண்டைதீவு மீட்பின்போதே புலிகளுக்கு பெரும் அடி கொடுக்கப்பட்டது.

2ஆவது ஈழப் போரில் அதிகளவான புலிகள் கொல்லப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எனது இராணுவ சீருடையையும், தாய் நாட்டையும் எந்தச் சந்தர்ப்பத்திலும், எதற்காகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் காட்டிக் கொடுக்கமாட்டேன்.

அதன் பின்னர் கோத்தபாய ராஜபக்ஷவின் படை அணியும், எனது படை அணியும் யாழ்ப்பாணம் சென்று யாழ். குடாநாட்டை மீட்க முயற்சி செய்தோம். அதன் போது இராணுவ வீரர்கள் பலர் பலியானார்கள். கோத்தபாய ராஜபக்ஷ தனிப்பட்ட காரணங்களால் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். 1991ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.

எனக்கும் ஓய்வு பெறச் சந்தர்ப்பம் இருந்தது. ஆனால், எனது மனச்சாட்சி விடவில்லை. நாட்டையும் நினைத்தேன். 2006ஆம் ஆண்டில் 4ஆவது ஈழப் போர் ஆரம்பமானபோது விடுதலைப் புலிகள் நவீனரக ஆயுதங்களைப் பயன்படுத்திப் போராடினர். உலகின் மிகப் பயங்கரவாத இயக்கமாக அவர்கள் பலம் பெற்றிருந்தனர்.

1991ஆம் ஆண்டில் எனக்குப் பதவி உயர்வு கிடைத்தது. அப்படியிருக்க எனது தாய் சுகவீனமுற்று வைத்தியசாலையில் , சேர்க்கப்பட்டிருந்தார். தாயைப் பார்க்க எனக்கு ஒருதடவைதான் சந்தர்ப்பம் கிட்டியது. தாயைப் பார்த்துத் திரும்பிய 48 மணித்தியாலங்களில் எனது தாய் காலமானார் என்ற செய்தி அறியக் கிடைத்தது.

1991ஆம் ஆண்டு ஆனையிறவு இராணுவ முகாமைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றத் திட்டமிட்டனர். அதன் போது முதலாவது படைப்பிரிவில் இரண்டு அதிகாரிகளை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அன்றிருந்த பிரிகேடியர் அதற்கான பொறுப்பை எடுக்க பின்வாங்கிய போது, கட்டளைத் தளபதியாக நான் தெரிவு செய்யப்பட்டேன். 1992ஆம் ஆண்டு மீண்டும் பதவி உயர்வு கிடைத்தது.

எனது திருமணத்தின் பின் கிடைத்த முதலாவது பதவி உயர்வு இதுவாகும். 1992ஆம் ஆண்டில் எனது தந்தை ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாகச் சேர்க்கப்பட்டார்.

அவர் பக்கத்தில் நான் இருந்தேன். அதன்போது வெலிஓயாவுக்கு உடனடியாகச் செல்ல உத்தரவு கிடைத்தது. எனது தந்தையின் உயிர் பிரியும் போதும் எனக்கு அருகில் இருக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. வெலிஓயாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது எனது தந்தை காலமானார் என்ற செய்தி கிடைத்தது. இராணுவத்துக்காகவும், தாய் நாட்டுக்காகவும் இவ்வளவு அர்ப்பணம் செய்துள்ளேன்.

1993ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கான போர் நடைபெற்றது. விடுதலைப் புலிகளுக்கு பால்ராஜ் என்பவர் தலைமை தாங்கினார். ஆனையிறவு முகாமில் இருந்து சுமார் 18 கிலோ மீற்றர் உள்ள கிளாலிப் பகுதியை மீட்பதே எனது நோக்கமாக இருந்தது.

அதிகாலை 5 மணியிலிருந்து போராடினோம். இராணுவத்தினர் 100 பேர் பலியாயினர். 300 பேர் வரை காயமடைந்தனர். விடுதலைப் புலிகளில் 300 பேர் பலியானதோடு, பால்ராஜ் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

அந்த நடவடிக்கையின்போது முதன் முறையாக நான் காயமடைந்தேன். இரண்டு மாதங்களாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றேன். இருந்தும், முழுமையான சுகத்தைப் பெற முன்னரே களத்துக்குச் சென்றுவிட்டேன். 1994ஆம் ஆண்டில், பிரிகேடியர் பதவிக்கு உயர்த்தப்பட்டேன்.

1995ஆம் ஆண்டில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரே மார்க்கத்தின் ஊடாகச்சென்று தாக்குதல் மேற்கொள்ள கலந்துரையாடல் இடம்பெற்றது. அதற்கு நான் எதிர்ப்பு வெளியிட்டேன். இரண்டு முனைகளில் தாக்குதல் நடத்தும்படி யோசனை கூறினேன். இதன்படி சுமார் 30 நாள்களில் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றினோம்.

1997ஆம் ஆண்டில் வவுனியாவில் இருந்து படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 150 கொமாண்டோக்கள் பலியாயினர். 1998ஆம் ஆண்டில் கனகராயன் குளம், மாங்குளம் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினோம். மாங்குளம் நடவடிக் கையில் இரண்டாவது முறையாகக் காயமடைந்தேன். அதன் பின்னர் கிளிநொச்சியை இழந்தோம்.

நான்காவது ஈழப்போரின் பின் யாழ்ப் பாணத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்தோம். அதன் பின்னர் ஜனாதிபதியைச் சந்தித்தோம். அதன்போது சிரேஷ்ட அதிகாரிகளிடம் யுத்தம் எப்போது முடிவுறும் என ஜனாதிபதி கேட்டார். சிலர் 8 வருடங்களாகும் என்றனர். ஆனால் நான் 3 வருடங்களில் முடிவுக்கு கொண்டு வரலாம் என்றேன். அதனை நான்காவது ஈழப்போரில் சாதித்துக் காட்டினேன்.

இந்த வழக்குடன் தொடர்புடைய பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, வேறு எவரை இராணுவத் தளபதியாக நியமித்திருந்தாலும் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்போம் என கூறியுள்ளார். அவ்வாறானால், ஏன் கடந்த 30 வருட காலமாக யுத்தத்தில் வெற்றிபெற முடி யாமல் போனது? பாதுகாப்புச் செயலாளரின் கூற்று பொய்யாகிவிட்டது.

இராணுவ விநியோகப் பிரிவில் நான் சேவை புரிந்தபோது எவ்வித இலாப நோக்கத்துடனும் செயலாற்றவில்லை. அதேபோன்றே இராணுவ டெண்டர் சபைக்கும் நான் தெரிவுசெய்யப்பட்டேன். அதில் கலந்துகொள்ளவில்லை.

2005ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இரண்டு வாரங்களில் பதவி உயர்வு வழங்குவதாகப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்னிடம் கூறினார்.

அதேபோன்றே 2005ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி எனக்கு கடிதம் கிடைத்தது என்றார். இதனையடுத்து வழக்கு விசாரணை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

source:GTN.

பொன்சேகாவும், அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பொறுமையை இழந்துள்ளார் போல தெரிகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.