Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு ஆண்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் ஆட்சி செய்கிறார்

Featured Replies

புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு ஆண்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் ஆட்சி செய்கிறார் என பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.

லக்பிமவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பாகத் தொடர்ந்தும் கூறுகையில், யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்ஸிலுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட 25 பேரில் 13 பேர் டக்ளஸ் தேவானந்தாவால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதேபோன்று யாழ்.பல்கலைக்கழக கவுன்ஸில் கூட்டம் நடைபெறு முன்பாக டக்ளஸினால் ஒரு கவுன்ஸில் கூட்டம் நடாத்தப்படும். பல்கலைக்கழக கவுன்ஸில் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான முடிவுகள் அங்கு எடுக்கப்பட்டு விடும். துணைவேந்தர் தெரிவில் யாரக்கு வாக்களிப்பது போன்றமுடிவுகள் உட்பட எல்லா முடிவுகளும் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விடும். இவ்வாறு தான் பல்கலைக்கழகத்திற்கான விடுதிகள் கட்டுவது தொடர்பான 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான கட்டிட ஒப்பந்தமும் சட்டத்தற்குப் புறம்பான வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதேபோன்று தேவானந்தாவுக்கு வேண்டியவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆப்பதவிகளுக்கான எத்தகைய விண்ணப்பங்களும் பகிரங்கமாகக் கோரப்பட்டதில்லை. அந்நியமனங்களில் எத்தகைய ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படவுமி;ல்லை.

குறிப்பாக அண்மைய கொள்ளைகளுக்கும் கொலைகளுக்கும் ஈபிடிபி உறுப்பினர்களே பொறுப்பு என ஜெனரல் மகிந்த ஹத்ருசிங்க கூறியதன் பின்பு இந்த முறைகேடுகள் தொடர்பாக எங்காவது முறையிட மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

துணைவேந்தரைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது அவருக்கு அவசியமாக உள்ளது. இதனால் எனது நியமனத்தை அவர் விரும்பவில்லை. கிறிஸ்தவனான என்னை துணைவேந்தராக நியமித்தால் இந்துக்கள் கோபம் கொள்வார்கள் என அவர் ஜனாதிபதிக்குச் சொல்லி இருக்கிறார். இதனால் எனக்கு அவர்கள்ஆதரவு தெரிவிப்பதாக முக்கியமான இந்துத் தலைவர்களிடம் அறிக்கை பெற்று வருமாறு கேட்கப்பட்டேன். பெரும்பாலான இந்துக்கள் நான் துiணைவேந்தராக வருவதையே விரும்புகிறார்கள். ஜனாதிபதிக்கு டக்ளஸ்அவ்வாறு சொன்னதன் ஊடாக அவர்களை அவர் அவமானப்படுத்தி இருக்கிறார்.

ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீனத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மூலங்களில்லை. தமிழ் மக்களோடு தொடர்பு கொள்வதென்றால் ஜனாதிபதி தேவானந்தாவை விட்டுவிட்டு தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுடன் அவர் பேச வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கான வாக்களிப்பில் முதல் மூவருள் ஒருவராக நான் தெரி செய்யப்பட்டேன். முன்னதாக இருந்த துணைவெந்தரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஜனாதிபதியால் நானும் எனது மனைவியும் அலரி மாளிகைக்கு தேநீர் விருந்தொன்றுக்கு அழைக்கப்பட்டோம். யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு என்னை நியமிப்பதற்கான நியமனக் கடிதம் மறுநாள் காலை ஜனாதிபதிச் செயலகத்திலிருந்து அனுப்பப்படும் என்ற உறுதிமொழியுடன் நாங்கள் விடைபெற்றோம்.

ஆனால் பின்னர் அவ்வாறு நடைபெறவில்லை. டக்ளஸ்தேவானந்தாவின் எதிர்ப்புக்காரணமாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை மீறி விட்டார்.

globaltamilnews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.