Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொஸ்னிய போர்க்குற்றவாளி கைது

Featured Replies

பொஸ்னிய போர்க்குற்றவாளி சேர்பியாவின் வடபகுதியில் கைது

பொஸ்னியாவில் இடம்பெற்ற படுகொலைகளில் நெருங்கிய தொடர்புடையவரும், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருமான ஜெனரல் Ratko Mladic சேர்பியாவின் வடபகுதியில் இன்று (26.05.11) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த இவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சேர்பிய ஜனாதிபதி Boris Tadic உறுதிப்படுத்தியுள்ளார்.

1995ஆம் ஆண்டு Srebrenicaவில் இடம்பெற்ற மிகப்பெரிய மனிதப்படுகொலையில் இவர் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இதன்போது சுமார் 7,500 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொஸ்னிய போர்க்குற்றங்கள் தொடர்பில் 2008ஆம் ஆண்டு, Radovan Karadzic கைது செய்யப்பட்டதின் பின்னர், அந்நாட்டின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முக்கிய நபர் இவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் தனது பதவிக் காலத்தில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களைப் புரிந்ததாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற விசாரணைகளின் போதும் இவர் போர்க்குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்தார்.2001ஆம் ஆண்டு முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதி Slobodan Milosevic கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர் தலைமறைவாகி இருந்தார். இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலான செய்திகள் வெளிவருவதற்கு முன்னர், இவரைக் கைது செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை சேர்பியா மேற்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான பிரதான சட்டவல்லுனர் Serge Brammertz குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={7A8AF259-C5FE-447F-8413-31417D2C691B}

பொஸ்னியா- சேபியர்களுக்கு எதிராக போர் நடைபெற்றவேளை 8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் என்னும் இராணுவத் தளபதி தற்போது கைதாகியுள்ளார். 1991ம் ஆண்டு முதல், இவர் மீது இன அழிப்புக் குற்றமும், போர் குற்றங்களும் சுமத்தப்பட்டது. 20 ஆண்டுகளாக புலம்பெயர் பொஸ்னியர்கள் இவரைக் கைதுசெய்யவேண்டும் என அழுத்ததைக் கொடுத்து வந்தனர். மெதுவாக ஐரோப்பிய ஒன்றியமும், பின்னர் ஏனைய நாடுகளும் செபனீசியாவில் இளைக்கப்பட்ட கொடுமைகளை ஏற்றுக்கொண்டது. பல நாடுகளில் கடந்த 20 வருடமாக இவர் தேடப்பட்டு வந்தார். அமெரிக்கா தனது புலனாய்வைப் பயன்படுத்தி இவரைத் தேடிவந்தது. ஆனாலும் இவர் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.

ஒரு நகரத்தையே தனது படைகளைக் கொண்டு சூழ்ந்து, அதனை 44 மாதங்களாக சுற்றிவளைத்து, குடி நீர், மின்சாரம், உணவு என்பனவற்றைத் தடைசெய்து, அன் நகரம் மீது ஷெல் தாக்குதலையும் மேற்கொண்டார் ரட்கோ மிலாடிஜ். செபனீட்சியா என்னும் இடத்தில் சுமார் 8,000 பொஸ்னியர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்தில் அதனை உதாரணம் காட்டியே இலங்கைப் பிரச்சனையும் சனல் 4 தொலைக்காட்சியில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந் நிலையில் இன்று சேபியாவில் அருகே உள்ள கிராமம் ஒன்றில், இவரை சேபியப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக இலங்கை கலக்கத்தில் உள்ளது. காரணம் என்னவெண்றால், ரட்கோ மிலாடிஜை சர்வதேசம் தூற்றி வந்தாலும், அவர் கைதுசெய்யப்படமாட்டார் என இலங்கை உட்பட பல நாடுகள் எண்ணி வந்தது. ஆனால் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள ரட்கோ மிலாடிஜ் மீது மரபணுப்பரிசோதனை நடத்தப்படுவதாவும், உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர் நேரடியாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளார் என்றும் பி.பி.சி செய்திச் சேவையூடாக மனிதன் இணையம் அறிகிறது.

manithan.com

பொஸ்னியர்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சுமார் 20 ஆண்டுகள் கழித்தே நீதி கிடைத்திருக்கிறது என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன அழிப்பு நடைபெற்று 20 ஆண்டுகள் ஆணாலும் தமது முன்னெடுப்புகளை இவர்கள் ஒருபோது கைவிட்டதில்லை. அதனை தமிழர்களும் பிந்தொடரவேண்டும். இலங்கையில் பாரிய இன அழிப்பு ஒன்று நடைபெற்று 2 வருடங்களே பூர்த்தியாகியுள்ள நிலையில், பலரும் சோர்ந்துபோய் உள்ளனர். தமிழர்கள் அனைவரும் இதனைப் பார்த்து கற்றுகொள்ளவேண்டியது நிறையவே உள்ளது எனலாம் ! 8000 பேரைக் கொண்றது ஒரு இன அழிப்பாகப் பார்க்கப்படும் இடத்தில் 40,000 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு நோக்கப்படவேண்டும், இல்லையேல் எவ்வாறான அழுத்ததை புலம்பெயர் தமிழர்கள் பிரயோகிக்கவேண்டும் தமிழ் அமைப்புகள் தீர்மானிப்பது நல்லது.

http://www.youtube.com/watch?v=qQ8b1Ezdq7Y&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=RsBSHC7hTr4&feature=player_embedded

Edited by BLUE BIRD

அடுத்தது மகிந்தா..சரத் :):D

  • தொடங்கியவர்

எட்டாயிரம் பேரை கொன்றவர்கள் என்ற குற்றத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதினைந்து வருடங்கள் ஒளித்திருந்தும் கடைசியில் இவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுள்ளார்.

இது எமக்கும் ஒரு ஊக்குவிப்பாக இருத்தல் வேண்டும். நாமும் சிங்கள போர்குற்றவாளிகளை நீதிக்கு முன்னர் நிறுத்துவதன் மூலமே எமது உரிமைகளை வெல்லலாம்.

  • தொடங்கியவர்

பிடிபட்டது ஏன்?

ஆனால் தற்போதைய செர்பிய அரசு இந்த விடயத்தில் ஒரு முடிவெடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது.

உள்நாட்டு அரசியல் நிலவரத்தை குலைக்காமல் இருந்தால் சர்வதேச ரீதியில் செர்பியா தனிமைப்படுத்தப்படுவதை தடுக்கமுடியாது.

அதற்கு மாற்றாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதன் மூலம் செர்பியா சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவதை தடுக்க முடியும்.

குரோஷியாவானது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விரும்பியபோது அதற்கு தடைக்கல்லாக விளங்கிய ராணுவ தளபதி அண்டி கொடோவினாவை பிடித்துக் கொடுத்ததைப்போல, மிலடிச் விடயத்திலும் செர்பியர்கள் அதே அணுகுமுறையை கடைபிடித்திருப்பதாகவே தோன்றுகிறது.

ஒரு தனி நபர், அவர் என்னதான் பெரும்பாலானவர்களின் கதாநாயகனாக இருந்தாலும், அவருக்காக தேசிய நலன்களைத் தியாகம் செய்வது பயனற்றது என்கிற யதார்த்தமே மிலடிச்சின் கைதுக்கு வழிவகுத்திருக்கிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/05/110527_mladic.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.