Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையுடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தா. பாண்டியன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க பல நாடுகளும் முன்வந்துள்ள நிலையில், இந்தியா மட்டும் இன்னும் வாய்த்திறக்கவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசும், மக்களும் ஒன்று திரள வேண்டும். இலங்கை உடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும், சிரமங்களைக் களையவும் ஒரு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றார்.

நக்கீரன்.

வெளிநாட்டு தமிழருக்காக தனியான குழு வேண்டும்

வெளிநாடுகளில் வாழும் தமிழர் விவகாரத்தை அணுக தமிழக அரசுக்கு தனியான குழு வேண்டுமென தமிழக முதல்வரிடம் தா. பாண்டியன் கேட்டுள்ளது, புலம் பெயர் நாடுகளில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்திய தூதரகங்களின் கெடுபிடிகளாலும், சிறீலங்காவின் அனுமதி பெற்றே இந்தியா போக வேண்டிய அவலங்களையும் சந்தித்து வருகிறார்கள். டெல்லியில் இருந்து கிளியரன்ஸ் வரவில்லை என்று இரண்டு வருடங்களுக்கு மேலாக டென்மார்க் இந்தியத் தூதரகம் பலருக்கு வீசா வழங்காமல் தடுத்து வைத்துள்ளது.

சிறீலங்கா அரசு என்ற அரசே நமக்கு வேண்டாம், சிங்கள ஆட்சி நமது ஆட்சியல்ல என்ற தெளிவுடன் வெளிநாடுகளின் குடியுரிமை பெற்ற பல தமிழர்களின் இந்திய வீசா விண்ணப்பம் கூட சிறீலங்கா அனுப்பி உறுதி செய்யப்பட வேண்டிய அவமானகரமான நிலை உள்ளது. இப்படி பல வழிகளில் புலம் பெயர் தமிழர்களை பெரும் அவமானம் செய்து வருகிறது இந்திய வீசா நடைமுறைகள்.

இதைத் தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி கடுகளவும் சிந்தித்துப் பார்க்கவில்லை. ஐங்கரன் மூலம் கலைஞர் ரீவிக்கு காட் விற்ற கலைஞர் புலம் பெயர் மக்கள் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்தார். இந்த இழிநிலையை போக்க வேண்டுமானால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் பிரச்சனைகளை அணுக தமிழக அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் அலைகள் தமிழக முதல்வரிடம் பகிரங்கமாகக் கேட்டிருந்தது. இந்த நிலையில் தா.பாண்டியன் வெளி நாட்டவர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் ஒரு குழு அமைக்க வேண்டுமென இன்று கேட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.

சரியான நடைமுறைகளை எடுக்க, பூரணமான விளக்கங்களை வழங்க, நல்லுறவுடன் பிரயாணங்களை ஏற்பாடு செய்ய இப்படியோர் குழு அவசியம். வீசா நடைமுறையில் திருடர்களைப் பார்ப்பது போன்ற அவமானமான அணுகு முறைகளை நீக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பை இனியும் தமிழக முதல்வர் தட்டிக்கழித்தல் கூடாது.

1. இலங்கை தமிழர்கள் 150 குறோணர் வீசாவுக்கு மேலதிகமாக கட்டி சிறீலங்கா அரசின் குற்றச் செயலலில் நாம் இல்லை என உறுதிப்படுத்த வேண்டிய அவலம் எப்போது நீங்கும்..?

2. டெல்லியில் இருந்து கிளியரன்ஸ் வரவில்லை என்று கூறுவதைத் தவிர வேறெந்த பதிலையும் தராத இந்தியத் தூதரகங்களின் தப்பித நிலை எப்போது மாறும்?

3. சென்னை விமான நிலையத்தில் கமுக்கமாக திருப்பியனுப்பபடும் நிராபராதிகளின் நிலையை விசாரிக்கவோ மறு முறைப்பாடு செய்யவோ முடியவில்லை இதற்கு பொறுப்புள்ள – இலஞ்சம் வேண்டாத குழு அவசியம்.

4. தமிழகத்தில் சொத்துக்களை வேண்டி, தமது எதிர்கால பொருளாதாரத்தை வளர்க்க விரும்புவோர் பல தடைகளை சந்தித்துள்ளனர். கோடான கோடிக்கு முதலிட்ட சிலர் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பப்பட்டுள்ளனர்.

5. இந்தியா மீது நேசம் கொண்ட, யாதொரு குற்றச் செயலும் புரியாத அப்பாவிகள் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக பழிவாங்கப்படுகிறார்கள். தமிழ் மக்களின் நட்புக்கரங்களை முறிக்கும் காரியம் ஈழப் போர் முடிந்த பிறகும் தொடர்கிறது.

6. தொப்புள் கொடி உறவென்பது போலியான வார்த்தையாகவே உள்ளதை அறிய இந்திய வீசாவை விட்டால் வேறு ஆதாரம் எதுவுமே வேண்டாம்.

http://www.alaikal.com/news/?p=72083

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.