Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐஎஸ்ஐயை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் இந்தியா வழக்கு

Featured Replies

ஐஎஸ்ஐயை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் இந்தியா வழக்கு

ஐஎஸ்ஐ அமைப்புக்கு, மும்பை பயங்கரவாத தாக்குதலில் உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வலியுறுத்தி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர இந்தியா முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே மும்பை தீவிரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த ரபி கப்ரியல் மற்றும் அவரது மனைவி ரிபக்காவின் குடும்பத்தினர் ஐஎஸ்ஐ அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிகக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.

தன்னை மனுதாரராக சேர்த்துக் கொண்டு, மும்பை பயங்கரவாத சம்பவத்தில் ஐஎஸ்ஐக்கு உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக சமர்ப்பிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.

மும்பையில் தாக்குதல் நடத்தியது லஷ்கர் இ தொய்பா அமைப்பும், ஐஎஸ்ஐயும்தான். லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு ஐஎஸ்ஐ எந்த வழிகளிலெல்லாம் உதவியது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் ஐஎஸ்ஐ அமைப்பை கோர்ட் தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தால், அதை உடனடியாக அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டு தீவிரவாத அமைப்புகளின் வரிசையில் சேர்க்க வேண்டும். அமெரிக்கா அவ்வாறு செய்தால் ஐரோப்பிய நாடுகளும் அதைப் பின்பற்றும். இதன் மூலம் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியும், அபாயமும் ஏற்படும். ஐஎஸ்ஐ அமைப்பையே கலைக்க வேண்டிய நிலைக்குப் பாகிஸ்தான் தள்ளப்பட நேரிடும்.

தற்போது சிகாகோ கோர்ட்டில் சாட்சியம் அளித்து வரும் பாகிஸ்தானிய அமெரிக்கரான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி, மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஐஎஸ்ஐதான் முக்கியப் பங்கு வகித்ததாக கூறி வருகிறான். ஐஎஸ்ஐ அதிகாரிகள் தனக்குப் பயிற்சி கொடுத்ததாகவும், உளவு பார்க்க ஊக்குவித்ததாகவும், இன்ன பிற உதவிகளையெல்லாம் செய்ததாகவும் அவன் கூறி வருகிறான்.

இவை அனைத்தும் ஐஎஸ்ஐக்கு எதிரான ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட முடியும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

India haa decided to approach New York court to seek declare ISI as terror outifit. Already the family of the Mumbai terrot attack victim Israeli Rabi Gabriel and his wife. India will join the case and fight against ISI and decided to prove ISI's involvement in Mumbai attack.

http://thatstamil.oneindia.in/news/2011/05/30/india-goes-ny-court-prove-isi-terror-outfit-aid0091.html

  • தொடங்கியவர்

ஐஎஸ்ஐயிடம் 50 முறை பயிற்சி பெற்றேன்-ஹெட்லி தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தனக்கு 50 முறை பயிற்சி கொடுத்ததாக தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி கூறியுள்ளான்.

சிகாகோவில் வைத்து கைதானவன் பாகிஸ்தானிய அமெரிக்கரான ஹெட்லி. இவன் மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கியத் தொடர்புடையவன். இவன்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்காக, மும்பைக்கு வந்து தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களை முன்கூட்டியே வேவு பார்த்து தாக்குதலைத் திட்டமிட பேருதவி புரிந்துள்ளான்.

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும்தான் திட்டமிட்டதாகவும், லஷ்கர் இ தொய்பாவுக்காக இவை முழு ஒத்துழைப்பையும், உதவிகளையும் வழங்கியதாகவும் ஹெட்லி கூறியுள்ளான்.

சிகாகோ கோர்ட்டில் தற்போது வாக்குமூலம் அளித்து வருகிறான் ஹெட்லி. அவன் வெளியிட்டு வரும் ஒவ்வொரு தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும் எந்த அளவுக்கு செயல்பட்டன, என்னென்ன சதிச் செயல்களைச் செய்தன என்பதை அம்பலப்படுத்தி வருகிறான் ஹெட்லி.

சிகாகோ கோர்ட்டில் நேற்று அவனிடம் அரசுத் தரப்பு அட்டர்னி சார்லஸ் ஸ்விப்ட் விசாரணை நடத்தினார். அப்போது ஹெட்லி கூறியதாவது:

மும்பை தாக்குதல் சம்பவம் நடந்த இடங்களை எப்படிக் கண்காணிப்பது, எப்படி உளவு பார்ப்பது என்பது தொடர்பாக எனக்கு ஐஎஸ்ஐதான் முழு பயிற்சியையும் அளித்தது. கிட்டத்தட்ட 50 முறை இந்தப் பயிற்சிவகுப்பில் நான் கலந்து கொண்டேன்.

எனக்காகவே சிறப்பு பயிற்சிகளைக் கொடுத்தது ஐஎஸ்ஐ. ஐஎஸ்ஐயைச் சேர்ந்த மேஜர் இக்பால் எனக்கு பயிற்சிகளைக் கொடுத்தார். லாகூர் தெருக்களில் நடந்தபடியும், அங்குள்ள விமான நிலையத்திற்கு அருகே உள்ள 2 மாடி வீடு ஒன்றில் வைத்தும் என இந்த பயிற்சி தரப்பட்டது.

நான் 2006ம் ஆண்டு மேஜர் இக்பாலை சந்தித்தபோது, ராணுவமும், லஷ்கர் இ தொய்பாவும் எனக்கு முன்பு கொடுத்த பயிற்சிகள் குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டார். போதிய பயிற்சி தரப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மிகவும் பூர்வாங்க பயிற்சியையே நீ பெற்றுள்ளாய் என்று கூறிய அவர், எனக்கு நிறைய ஆலோசனைகளையும், குறிப்புகளையும் வழங்கினார். எப்படி வேவு பார்ப்பது என்பது தொடர்பாக நிறைய தகவல்களை அவர் எனக்குக் கொடுத்தார் என்றான் ஹெட்லி.

அமெரிக்க உளவாளியாகவும் இருந்தேன்

இந்த விசாரணையின்போது தான் அமெரிக்க அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உளவாளியாகவும் பணியாற்றியதாக ஒப்புக் கொண்டான் ஹெட்லி.

சிகாகோவில் ஹெட்லி கைதானபோது உடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணா தொடர்பான வழக்கில்தான் தற்போது ஹெட்லி சாட்சியம் அளித்து வருகிறான். ராணாவும், மும்பை தாக்குதல் வழக்கில் ஒரு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை தாக்குதல் வழக்கில் தான் தொடர்பு கொண்டிருப்பதையு்ம், அந்த குற்றச் செயலில் தனக்கும் பங்கு இருப்பதையும் ஏற்கனவே ஹெட்லி ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனக்கு மரண தண்டனை கிடைக்காமல் தப்பிக்க ராணாவுக்கு எதிராக சாட்சியம் அளிக்கவும் அவன் முன்வந்து தற்போது சாட்சியம் அளித்து வருகிறான் என்பதும் நினைவு கூறத்தக்கது.

சதி ஆலோசனையில் பங்கேற்ற பாக். கடற்படை அதிகாரி

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான சதித் திட்ட ஆலோசனையின்போது பாகிஸ்தான் கடற்படை அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டார் என்றும் டேவிட் கோல்மேன் ஹெட்லி கூறியுள்ளான்.

இதுகுறித்து அவன் கூறுகையில்,

நானும் மேஜர் இக்பாலும், மும்பை பயங்கரவாத தாக்குதல் குறித்த சதித் திட்ட ஆலோசனையி்ல பலமுறை ஈடுபட்டோம். தாக்குதல் நடத்தும் நபர்கள் எங்கு போய் இறங்குவது, எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த ஒருவரும் கலந்து கொண்டார்.

அவர் நன்கு ஷேவ் செய்த முகத்துடன் காணப்பட்டார். அவரது பெயர் அப்துல் ரஹ்மான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது என்று கூறியுள்ளான் ஹெட்லி.

http://thatstamil.oneindia.in/news/2011/05/27/headley-says-attend-over-50-training-sessions-isi-aid0091.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.