Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனுபவிக்கும் உரிமைகளை இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் கொடுக்க முடியாது?

Featured Replies

வடக்குக், கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு நன்மைகளை வழங்குவதிற்கு இதுவரை அரசாங்கம் தவறிவிட்டதாகவும் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் அனுபவிக்கும் உரிமைகளை இலங்கையிலுள்ள தமிழர்களும் அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

2009 இல் விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னர் சகல சமூகங்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுத்துவதற்கான பொன்னான வாய்ப்பை இலங்கை இழந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மோதலின் பின்னர் ஒன்றுபட்டிருந்த நாட்டை குறுகிய பார்வையுடனான கொள்கைகளும் எதிரணியை நசுக்குவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகளும் பிளவுபடுத்தியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

த நேஷன் பத்திரிகைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அளித்துள்ள பேட்டியிலேயே கரு ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் பொன்னான வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அதனை நாம் விரைவாக இழந்துவிட்டோம். அரசாங்கத்திடம் எதிரணியை நசுக்கும் முயற்சி இருந்தது. எதிரணியை அழிப்பதற்கு அரச ஊடகம் பயன்படுத்தப்பட்டது. எதிரணியினால் விடுக்கப்படும் அறிக்கைகளை முழுமையாக திரிபுபடுத்தும் நிலைமை காணப்பட்டது. சில உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து அரசாங்கத்தின் சிந்தனையில் விழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் மூலம் 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திருத்தமானது மக்களின் ஆணையை அடிப்படையாக கொண்டதல்ல. எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தேசிய ஐக்கியத்துக்கான அழைப்பை விடுத்து தமிழ் சமூகத்தின் நட்புறவுக் கரங்களைப் பெற்றுக்கொள்ளும் அற்புதமான சூழ்நிலையை அரசாங்கம் கொண்டிருந்தது. புலிகளின் கீழ் தமிழ் சமூகம் அதிகளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், என்ன நடந்தது. அரசாங்கம் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்தது. எதிரணியை அவமதித்தது. அரசியல் ரீதியில் நாட்டை பிளவுபடுத்தியது. சட்ட ஒழுங்கு இருக்கவில்லை. நிர்வாகம் அரசியல் மயமாக்கப்பட்டது.

தேசிய கருத்தொருமைப்பாட்டைத் தோற்றுவிப்பதற்கான முயற்சி இருந்திருந்தால் அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பாரியளவில் பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். மேற்கு நாடுகளின் பெறுமதியை அரசாங்கம் அங்கீகரித்திருக்கவில்லை. அந்த நாடுகள் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நம்புகின்றன. அந்தக் காரணங்களுக்காக புலிகளின் ஆதரவாளர்கள் என அந்நாடுகள் இலக்கு வைக்கப்பட்டன. சர்வாதிகார ஆட்சியாளர்களைக் கொண்டிருக்கும் நாடுகளுடனேயே அரச தரப்பினர் தமது உறவுகளைக் கட்டியெழுப்பினர்.

அடிப்படையில் நாங்கள் தவறிழைத்துள்ளோம். தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆயினும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இன்னரும் காலம் கடந்துவிடவில்லை. மேற்கு நாடுகள் ஜனநாயகத்தையும் வெளிப்படைத் தன்மையையும் சட்ட ஒழுங்கையும் மதிப்பவையாகும். இந்த விடயங்கள் அவர்களின் அரசியலமைப்பில் தொடர்ந்திருந்து வருகின்றன. ஆதலால் அந்த சுதந்திரங்களை எமது நாடுகளில் நிலைநிறுத்த மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் தலையீடென எடுத்துக்கொள்ளக்கூடாது.

அபிவிருத்தியை எடுத்துக் கொண்டால் துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உலைகள், பாரிய நீர்ப்பாசனத்திட்டங்கள், வீதி நிர்மாணங்கள் என்ற அதிகளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளன. ஆனால் இத்திட்டங்கள் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டதா அல்லது பெற்றுக்கொள்ளும் கடன்கள் யதார்த்தபூர்வமான வட்டி வீதங்களில் அமைந்துள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும்.

நாட்டில் சமாதானம் உதயமானவுடன் இலங்கை மக்கள் அதிகளவு எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர். சமாதானமான சுபீட்சமான ஐக்கியப்பட்ட புதிய இலங்கையின் ஜனனத்தை அவர்கள் பார்த்தனர். தற்போதுள்ள சட்டங்களின் கீழ் சாத்தியமான அளவுக்கு வடபகுதி சமூகத்திற்கு வழங்கி அவர்கள் மத்தியில் அரசாங்கம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

தென்பகுதி மக்கள் அனுபவிக்கும் எந்த உரிமைகள், சலுகைகள் யாவற்றையும் வடக்கு ,கிழக்கு மக்களும் அனுபவிக்க வேண்டுமென்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம்.

தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளை இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு நாம் ஏன் கொடுக்க முடியாது. இதற்கு எந்தவொரு காரணமும் இருக்க முடியாது. இவை யாவற்றுக்கும் மேலாக எனது இனமும் மதமும் பிறப்பு என்ற விபத்தினால் ஏற்பட்டதாக நான் நம்புகிறேன்.

ஆதலால் நாம் யாவரும் இந்த சிறிய நாட்டில் ஒன்றுபட்டு வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென சகல மதத் தலைவர்களும் போதிக்க வேண்டும். நாங்கள் இரத்தத்தையோ "கண்களையோ' ஈரலையோ தானம் செய்யும் போது பெற்றுக்கொள்பவர் எந்த இனத்தை அல்லது மதத்தைச் சார்ந்தவர் என நாங்கள் பார்ப்பதில்லை.

இதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் மிகத் தாமதமாகவுள்ளது. வடக்கின் சில பகுதிகளில் அடிப்படை வசதிகள் இப்போதும் இல்லையென்பதை நாம் அறிவோம். பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்குக் கூட புனர்வாழ்வு முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கவில்லை. தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்த போதும் கூட அந்தப் பகுதிக்கு செல்வதற்கு விசேட அனுமதியை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இறுதியில் நாங்கள் வடக்கிற்கு செல்வதற்கு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை நாடவேண்டி ஏற்பட்டது. சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலோசனையை மேற்கொண்டு உறுதியான யோசனைகளை அரசாங்கம் முன்வைப்பதற்கு இன்னரும் காலம் கடந்து விடவில்லை. யாவற்றுக்கும் மேலாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழு நியமிக்கப்பட்டிருந்தது. நாங்கள் அதிகளவு நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் செலவழித்துள்ளோம். கவனிக்கப்படாத திட்டத்திற்காக அதனை செலவிட்டுள்ளோம். பெறுமதியான யோசனைகளை நாங்கள் முன்வைத்திருக்க வேண்டும்.

எந்தவொரு அர்த்தபுஷ்டியான தீர்வையும் வென்றெடுக்க புலிகள் தடையாக இருந்தனர் என்பது எனது கருத்தாகும். ஆனால், புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் அதற்குரிய காலம் கனிந்துவந்துள்ளதாக நான் நினைக்கிறேன்.

ஆதலால் இதன் அடிப்படையில் அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டு அர்த்தபுஷ்டியா நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். தமிழ் மக்களின் துன்பங்களை நியாயப்படுத்துவதற்கு சர்வதேச அல்லது வெளிமட்ட அழுத்தங்களுக்குக் காத்திருப்பதிலும் பார்க்க அர்த்தபுஷ்யுடனான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

எமது நாட்டின் பரிமாணத்தின் அடிப்படையின் நாங்கள் அதிகளவுக்கு மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளோம் என்பது எமது கருத்தாகும். மாகாண சபைகள் வெள்ளையானையாக வந்துள்ளது என்ற கருத்தும் உள்ளது. மறுபுறத்தில் வரிகள் மற்றும் மாகாண சபைகளின் வருமானத்தின் 80 சதவீதமானவை கடந்த காலத்தில் சம்பளங்களுக்கே செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதலால் மேலதிக கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் பார்க்க தற்போதுள்ள கட்டமைப்பின் கீழ் சில திருத்தங்களை இங்குமெங்குமாக மேற்கொண்டு பணியாற்ற வேண்டும். சோல்பரி அரசியலமைப்பில் சகல மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை மறந்துவிடக்கூடாது.

அந்தத் தருணத்தில் இலங்கை இரண்டாது சுபீட்சமடைந்த நாடாக உருவாகியிருந்தது. பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு தீர்வைக் காண்பதற்குப் பதிலாக அதிகளவு பிரச்சினைகளை உருவாக்குவதற்கு நாம் எமது சக்தியை அதிகளவுக்கு விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம். நிரந்தர தீர்வைக் காண்பதற்கு வேறு வழிகளை அரசாங்கம் காண்பதிலும் பார்க்க இருக்கும் விடயம் குறித்து அதிகளவுக்கு கவனம் செலுத்த வேண்டுமென நான் நினைக்கிறேன்.

13 ஆவது திருத்தமானது பல பகுதிகளில் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்வது அவசியம். பகிர்ந்தளிக்கப்பட்ட சில விடயங்கள் மீள எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதை நாங்கள் பார்த்துள்ளோம். இங்கு ஆட்சி தொடர்பான பிரச்சினை மேலெழுகின்றது. மாகாண சபைகள் சில ஏன் தோல்வி கண்டன.

அந்த முறைமையில் ஏதாவது தவறுஉள்ளதா. ஆதலால் முறைமைகள் யாவற்றையும் பூரணமாக ஆராய வேண்டும். மாகாண சபைகளும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்குமான வேலைகள் ஒரே மாதிரியாக இருப்பதாக நான் உணர்கிறேன். இந்த விடயங்கள் தீர்காணப்பட முடியாதவையல்ல. இது தொடர்பாக வெளிப்படையான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு செயல்படுத்தும் திட்டமொன்றைக் கொண்டு வர வேண்டும்.

தமிழர் அல்லது சிங்களவர் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் கௌரவத்திற்குரிய பிரஜையாக அவர் வாழ வேண்டும். இந்த நாடு யாவருக்கும் உரியது. துன்பங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

இனவாத அரசியல் நிறுத்தப்படவேண்டும். சுபீட்சமான நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இதனை நாம் செய்ய வேண்டும். அந்த சூழ்நிலையை உருவாக்குவது நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுத்த விடயமாகும். சொன்னதை அமுல்படுத்துவது அவசியமாகும். தேர்தல் விஞ்ஞாபனங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்.

அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரையில் ஐ.தே.க.ஆகிய நாங்கள் அடிமட்டத்திலிருந்து பகிர்வு இடம்பெற வேண்டுமென்ற கருத்தைக் கொண்டுள்ளோம். கிராம இராஜ்ஜிய கருத்தீட்டைப் போன்றதொன்றை நாம் சிந்திக்கிறோம். எமது சிறுபிள்ளைப் பராயத்தில் கிராம சபைகள் இருந்தன. கிராமங்கள் மத்தியிலான பிரச்சினைகளை அவை கையாண்டன. இந்த விடயம் அரசியலை அடிப்படையாகக் கொண்டவையல்ல. அரசியல்வாதிகளாலும் நிர்வகிக்கப்படுபவையல்ல. நேர்மையான மக்களைக் கொண்டு இந்த நிர்வாகம் இடம்பெற்றது.

பொலிஸ் அதிகாரம் பொலிஸ் அதிகாரங்கள் பற்றி நாங்கள் இப்போதும் ஆட்சேபனைகளைக் கொண்டிருப்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அரசியல் மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்தினால் இந்த அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படலாம். தற்போதும் கூட பொலிஸ் சேவையில் அரசியல் தலையீடுகள் உள்ளன. தீவிரவாத சக்திகளினால் இந்த அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட முடியும். நாங்கள் உள்வாங்கிக்கொள்ள அல்லது திருத்திக் கொள்ள இந்திய முன்மாதிரியை எங்களால் ஆராய்ந்து பார்க்க முடியும்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

தோடா...இவர் இப்ப எதிர்கட்சியில இருக்கிறதால இப்பிடி தான் சீன் போடுவார் இவரும் இவருடைய கட்சியும் ஆளும் கட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு சுதந்திரத்த தூக்கி தந்திடவா போறிங்க...?ம்ம்ம் என்ன செய்யிறது இப்பிடியே கதைச்சு உங்க பிழைப்ப கொண்டுபோங்க..

நாராயனா.................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.