Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரான்ஸ் பிரதிநிதிகள் நிபுணர் குழு அறிக்கையை வரவேற்பு: அமைச்சர் மஹிந்த சமரசிங்கவோ புலம்பல் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Tuesday, 2011-05-31 04:11:45]

ஐநா நிபுணர் குழு அறிக்கையில் இலங்கை குறித்து கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கையின் சிறப்புத் தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலின் நேற்றைய கூட்டத் தொடரில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஐநா நிபுணர்குழு அறிக்கை கூறுவதற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.

இத்தகைய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை முற்றிலும் தேவையற்றது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க விமர்சித்துள்ளார். அதேவேளை, இலங்கை அரசாங்கம் அங்கு தேசிய நல்லிணக்கத்துக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவை படிப்படியாக பலன் தந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போர் குறித்த ஐநா செயலரின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவாக வேறுபல நாடுகளும் அங்கு நேற்று கருத்து தெரிவித்துள்ளன.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் "நிபுணர் குழுவின் அறிக்கையை" வரவேற்றதுடன், அதன் பரிந்துரைகளை இலங்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

ஆனால், இலங்கை விவகாரத்தை ஐநா மனித உரிமைக் கவுன்சில் மீண்டும் எடுத்திருப்பது ஐநாவின் இரட்டைப் போக்கைக் காண்பிப்பததாக கியூபாவின் பிரதிநிதியான றோடொல்ஃப் ரீயிஸ் றொட்ரிகஸ் சாடியுள்ளார்.

வளரும் நாடுகளை உலக சக்திமிக்க நாடுகள் அடக்கப் பார்ப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இலங்கை அரசாங்கமும், இலங்கை மக்களும் தமது உள்ளூர் விடயங்களை தாமே கையாளும் வல்லமை உள்ளவர்கள் என்று கூறிய சீனாவின் பிரதிநிதி, அதற்கு ஐநா தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று கூறினார்.

source:seithy.

Edited by tamil arasu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.