Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மஹிந்தவும் கோத்தாவுமே பொறுப்பு; பொன்சேகா தொடர்ந்து சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரசுரித்தவர்: Sukkran June 1, 2011

எனது உயிருக்கும், எனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுமே ஏற்கவேண்டும்.இவ்வாறு இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா நேற்று மேல்நீதிமன்றில் தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கு மேல்நீதிமன்றில் நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர, எச்.என். பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதி சரத்பொன்சேகா தனது சாட்சியமளிப்பை நேற்றுடன் முடித்துக் கொண்டார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைய வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அன்றிருந்த 58ஆவது படைப்பிரிவின் கட்ளைத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு உத்தரவிட்டார் என சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது சரத் பொன்சேகா தெரிவித்தார் என வெளியான செய்தி தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு தற்போது மேல்நீதிமன்றில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகிறது.நேற்றைய சாட்சியமளிப்பின்போது பிரதிவாதி சரத் பொன்சேகா தெரிவித்தவை வருமாறு:

உலகின் தீவிரவாத அமைப்புகளுள் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை 3 வருடங்களில் முடிப்பேன் என வாக்குறுதி அளித்தேன். அதன்படி அதனை நிறைவேற்ற என்னுடன் இணைந்துசெயற்பட்ட இராணுவச் சிப்பாய்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். அத்துடன் யுத்தத்தின் போது உயிர்த்தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற சிப்பாய்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

உலகில் அதிசிறந்த இராணுவத்தளபதியாக வர்ணிக்கப்பட்ட நான் ஓய்வூதியம் இழந்து, தற்போது கைதியாக உள்ளேன். இந்த துரதிஷ்டமான வேளையில் எனக்கு உறுதுணையாக உள்ள எனது குடும்பத்தார், சட்டத்தரணிகள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

தற்போதும் எனக்கு மரண அச்சுறுத்தல் இருந்து வருகிறது என்பதை நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. நான் சிறைச்சாலையில் உள்ளபோதும் என்னை வெளியில் அழைத்துச் செல்லும் வேளைகளிலும் என்னைக் கொலை செய்வதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது.

எனக்கு மட்டுமல்லாது, எனது மனைவி, மகள்மார்கள் மற்றும் உறவினர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடப்படுகிறது. உதாரணமாக எனது மனைவி ஸ்ரீபாத சமய வழிபாடுகளுக்குச் சென்றிருந்தார். அவருக்குப் பாதுகாப்பு அளிக்கச் சென்ற அதிகாரிகளிடம் பாதுகாப்புக்கான எவ்வித ஆயுதங்களும் இருக்கவில்லை. எனவே, எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என நாட்டு மக்களை அரசு ஏமாற்றுகின்றமை இதன்மூலம் தெளிவாகிறது.ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எனது மகளின் கணவரைக் கைது செய்து அவரைக் கொலை செய்யத் திட்டமிடப்பட்டது. நான் கைதாகிய பின்னரும், எனது மருமகனைக் கொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டது என அறியக் கிடைத்தது. அதன் நிமித்தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எனது மருமகன் ஒளிந்து வாழும் நிலைமை ஏற்பட்டது.

எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் ஏதாவது உயிர் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் என்னைக் கைது செய்வதற்கு உடந்தையாக இருந்தவர்களுமே ஏற்கவேண்டும். இதனை இந்த நீதிமன்றில் பொறுப்புணர்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.ஜெனரல் சரத் பொன்சேகா என்ற பெயரில் ஜெனரல் பதவியை நீக்கி, முழு உலகுக்கும் உரத்துக் கூறினாலும் இராணுவச் சிப்பாய்களதும், மக்களதும் இதயங்களில் இருந்து ஜெனரல் சரத் பொன்சேகா என்ற பெயரை ஒருபோதும் அழிக்க முடியாது.

நான் மூன்று தடவைகள் மரண வாசலுக்குச் சென்று பிழைத்துள்ளேன். நாட்டுக்காக முழுமையாக அர்ப்பணிப்புச் செய்த எனக்கு நீதி, நேர்மை, நியாயம் நடந்தேறும் வகையில் தீர்ப்பை இந்த நீதிமன்ற நீதியரசர்கள் வழங்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்து நிற்கின்றேன். முழு நாட்டு மக்களும் இதனையே எதிர்பார்த்து நிற்கின்றனர். இந்த நீதிமன்றம் எனக்கு வழங்கும் தீர்ப்பானது நீதிமன்ற வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

source:Mykathiravan.

Edited by tamil arasu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.