Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முந்நூறு தமிழர்களை பிரித்தானியா இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்நூறு தமிழர்களை பிரித்தானியா இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது

300 Lankans to be deported from UK Thursday, 09 June 2011 01:42

By R.Sethuraman

Around 300 Sri Lankans are to be deported from the United Kingdom to Sri Lanka on June 16, Tamil Mirror online learns.

Sources in the UK told Tamil Mirror that the UK Border Agency had arranged a special charter flight to deport around 300 persons whose asylum requests had been turned down by the authorities.

Mr. Nishan Paramjorthy, a human rights advocate in the UK told Tamil Mirror online that some of his clients had got notice about their “removal” from the UK Border Agency. He said most of the persons to be deported were Tamils.

UK to deport 300 Lankans

The scheduled time of departure of the special charter flight to Sri Lanka, from the UK, is 5.00 pm -- on June 16, according to the sources.

Tens of thousands of Sri Lankan Tamils migrated to the UK during the war between the security forces and the LTTE; and an estimated 120,000 Sri Lankan Tamils live in the UK. The Sri Lankan Tamil Diaspora in the UK is the second largest -- after that of Canada.

http://print.dailymirror.lk/news/front-page-news/46455.html

  • கருத்துக்கள உறவுகள்

300 இலங்கையர்களை 16 ஆம் திகதி நாடு கடத்த பிரிட்டன் தீர்மானம்

Thursday, June 9, 2011, 7:53

உலகம், சிறீலங்கா

சுமார் 300 இலங்கையர்கள் பிரிட்டனிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி நாடு கடத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் 300 இலங்கையர்களை பிரிட்டனிலிருந்து வெளியேற்றுவதற்காக பிரிட்டனின் எல்லை முகவரகம் விசேட விமானமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக பிரித்தானிய வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை வழக்குரைஞரான நிஷான் பரம்ஜோதி இது தொடர்பாக தெரிவிக்கையில் தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கும் பிரித்தானிய எல்லை முகவரகத்தினால் இந்த வெளியேற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் எனத் தெரிய வருவதாகவும் அவர் தமிழ் மிரருக்கத் தெரிவித்தார்.தம்மை நாடுகடத்துவதிலிருந்து தடுப்பதற்கு கடைசிநேர பிரயத்தனங்களில் மேற்படி இலங்கையர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் மேற்படி விமானம் ஜூன் 16 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு பிரிட்டனிலிருந்து புறப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1980 களின் முற்பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் பிரிட்டனுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். கனடாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையான புலம்பெயர்ந்த தமிழர்களை கொண்ட நாடாக பிரிட்டன் உள்ளது. அங்கு சுமார் 120,000 இலங்கைத் தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

tamilthai.com

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்துகோரி நிராகரிக்கப்பட்ட 300 பேர் திருப்பி அனுப்பபடவுள்ளனர். இவர்கள் இந்த வாரம் (யூன் 16) வாடகை விமானம் ஒன்றின் மூலம் இலங்கை அனுப்பபடவுள்ளனர். இவ்வாறு பிரிட்டிஸ் உள்துரை அமைச்சு கூறியுள்ளது.

.

எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு இந்த சிறப்பு விமானம் லண்டனில் இருந்து புறப்படவுள்ளதாகத் அறியப்படுகிறது. கனடாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையான புலம்பெயர் தமிழர்களைக் கொண்ட நாடு பிரித்தானியா என்பது குறிப்பிடத்தக்கது.

My link

முந்நூறு தமிழர்களை பிரித்தானியா இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது

300 Lankans to be deported from UK Thursday, 09 June 2011 01:42

By R.Sethuraman

Around 300 Sri Lankans are to be deported from the United Kingdom to Sri Lanka on June 16, Tamil Mirror online learns.

http://print.dailymirror.lk/news/front-page-news/46455.html

பீரிஸும் liam foxம் சிங்கபூரில் என்ன பேசினார்கள் என்று இப்பவும் யாராவது தெரியாமல் இர்க்கிறீர்களா?

பிரித்தானிய விஸா விதிகளில் மாற்றம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-11 08:41:54| யாழ்ப்பாணம்]

தற்காலிக விஸாவில் பிரிட்டனுக்கு வருபவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்க முடியாதவாறு குடிவரவு திருத்தங்களுக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

விஸா தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பதை வகைப்படுத்துவதற்கும் பிரிட்டனில் தங்க விரும்புபவர்களுக்கு கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துவதற்குமான யோசனைகளை பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீன் முன்வைத்துள்ளார்.

குடியேறலுக்கு வழியமைக்கும் தொழில் வாய்ப்புகளின் மீளாய்வு தொடர்பான பொதுக்கலந்துரையாடலொன்றை ஆரம்பித்து வைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்காலிக மற்றும் நிரந்தர குடிவரவுக்கான தொடர்பை முறிப்பதை இந்த யோசனைகள் இலக்காக கொண்டிருப்பதாக அவர் கூறினார். தற்போதைய முறைகளின் கீழ் பெரும்பாலான ஊழியர்கள் பிரிட்டனில் நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 2010ஆம் ஆண்டில், தொழிலுக்காக பிரிட்டனுக்கு வந்தவர்களில் 84 ஆயிரம் பேர் நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்பட்டனர்.

1997ஆம் ஆண்டில் 10 ஆயிரத்திற்கும் குறைவானோரே தொழில் வாய்ப்பு தொடர்பான குடியேற்றத்திற்கு தகுதி பெற்றிருந்தனர்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20087

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.