Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சத்தீவு வழக்கில் வருவாய்த்துறையை சேர்க்க சட்டசபையில் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jaya1111.jpg

கச்சத்தீவு தொடர்பான ஜெ. தொடர்ந்த வழக்கில் வருவாய்த்துறையை சேர்க்க சட்டசபையில் தீர்மானம்.

சென்னை: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசின் வருவாய்த்துறையையும் சேர்க்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் இன்று முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரையின் முழு விவரம்:

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன்.

இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை தீர்மானிக்கிறது.

டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில், தொழுகை நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன.

1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.

அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது.

இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி, முதல்வராக இருந்தார். அந்த விவரச் சுவடியில், கச்சத்தீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் இருந்த வரைபடத்தில் கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என காண்பிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த விவரச் சுவடிக்கு 14.6.1972ல் முகவுரை எழுதிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல் முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு இருந்த பற்று.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974-ஆம் ஆண்டு, முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் முதல்வராக இருந்த போது, கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். 15.8.1991, சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றி வைத்து கச்சத்தீவை மீட்போம் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்து பல முறை மத்திய அரசையும், பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தி இருக்கிறேன். 16.9.2004 அன்று, நிரந்தரமான குத்தகை என்ற முறையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவிற்குச் சென்று மீன்பிடிக்கும் உரிமையை, மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருக்கிறேன். இருப்பினும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியிலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. எந்த மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும், 1974-ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததோ, அதே அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை வகித்தன. ஆனால், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி, மத்தியில் தி.மு.க. தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த போதும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோ, அப்போதைய தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை. கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக, இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

1960-ஆம் ஆண்டுக்கு முன்பு, 1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, அதாவது, அன்றைய மேற்கு வங்க முதல்வர் பி.சி. ராய் அவர்களின் சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத்தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

1974-ல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு தெரியும் என்றும், அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும், நான் பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால், கருணாநிதியோ 1974-ல் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் தனக்கு இது பற்றி தெரியாது என்று தான் கூறிக்கொண்டு வருகிறார்.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக 1972-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடியில் (Ramanadhapuram Gazetteer) பக்கம் 30-ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“இராமேஸ்வரத்திலிருந்து வட கிழக்காக 10 மைல்கள் தூரத்தில் கச்சத் தீவு உள்ளது. ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படுவதற்கு முன்பு வரை பல தனியாருக்கு அந்தத் தீவை இராமநாதபுரம் இராஜா குத்தகைக்கு விட்டுள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள் அங்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கடல் நீர் கலங்கலாக இருப்பதால் அத்தீவுற்கு கச்சத் தீவு என்ற பெயர் ஏற்பட்டது.

285.20 ஏக்கர் பரப்பளவு உள்ள கச்சத் தீவின் நில ஆய்வு (சர்வே) எண்: 1250. அங்கு ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. அதனை தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பாதிரியார் தான் சென்று பிரார்த்தனை நடத்துகிறார். இராமேஸ்வரம் கர்னத்திற்கு கட்டுப்பட்ட பகுதியாகத் தான் கச்சத் தீவு உள்ளது” என்று தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் கூறுகிறது.

ஆனால் இந்த ஆவணத்தையும், கச்சத் தீவு பல நூற்றாண்டு காலமாக இராமநாதபுரம் ஜமீனிற்கு சொந்தமானது என்ற உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டுத்தான், கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்திய அரசு. எனவே, இந்த உண்மைகளை ஆதாரத்துடன் உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்க வருவாய்த் துறையை ஒரு வாதியாக சேர்க்கும் முடிவு சட்ட ரீதீயாக மிகவும் சரியானது. நாம் தமிழர் கட்சி முழு மனதுடன் தமிழக அரசின் முடிவையும், தீர்மானத்தையும் வரவேற்கிறது.

அதே நேரத்தில் கச்சத் தீவை நாம் மீட்க வேண்டும் என்று கூறுவதற்குக் காரணம், தமிழ்நாட்டு மீனவர்களின் நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, அந்தக் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் தொன்று தொட்டு பெற்றிருந்த பாரம்பரிய மீன் பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே என்பதையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

அதற்கு கச்சத் தீவை மீ்ட்பது மட்டும் போதாது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீ்ன் பிடி உரிமையை விட்டுத்தந்த இந்திய-இலங்கை எல்லை வரையறை ஒப்பந்தத்தையே ரத்து செய்வதே சரியானதாக இருக்கும். ஒன்று கச்சத் தீவை மீட்கவும், இந்திய, இலங்கை நாடுகளுக்கு இடையிலான கடற்பகுதியில் எவ்வித தடையுமின்றி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையேல், இந்திய- இலங்கை கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கராரான நிலையெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இதையே நாம் தமிழர் கட்சி ஒரு கோரிக்கையாக தமிழக அரசிற்கும் முன் வைக்கிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/06/09/seeman-welcomes-kachatheevu-resolution-aid0128.html

  • கருத்துக்கள உறவுகள்

1974-ல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு தெரியும் என்றும், அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும், நான் பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால், கருணாநிதியோ 1974-ல் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் தனக்கு இது பற்றி தெரியாது என்று தான் கூறிக்கொண்டு வருகிறார்.

அதிமுக சட்டபிரிவு 356-அ பிரிவை பயன்படுத்தி முன்னர் ஆட்சியை கலைத்த போது ஏன் S.R பொம்மை போல நீதிமன்றத்தை அப்போது திமுக நாடவில்லை என பத்திரிகையாளர் வினவியபோது திமுக வின் முக்கிய தூண்களில் ஒன்றான துரைமுருகன "எங்களுக்கு அந்த காலத்தில் அவ்வளவு விபரம் இல்லையப்பா" என்றார். இத்தனைக்கும் இவரெல்லாம் BA.BL தொண்டருக்கே இப்படியென்றால் தலைவன் எப்படி இருப்பார்?இப்படித்தான் இருப்பார்..

டிஸ்கி:

பாஸ் பெருசா? பெயில் பெருசா

http://www.youtube.com/watch?v=nd0NA2Yqags

எட்டாவது பெயில் ஆனாலும் பாஸ் ஆனாலும் தலிவர் தலிவர் தான்.. :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.