Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசர் நாய்களைக் கொல்வது ஒரு காருண்யமான செயல் அல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by சோபிதா on 10/06/2011 in செய்தி

விசர் நாய்களைக் கொல்வது ஒரு காருண்யமான செயல் அல்ல என அரசு கூறுகின்றது ஆனால் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் கொல்லப்படுகின்றபோது இந்த காருண்யம் எங்கே போய்விட்டது. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (09.06.2011) விலங்கு தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கான விவாதத்தில் உரையாற்றும்போதே மேலுள்ளவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களை விலங்கு போன்ற மனப்பாங்குடன் இங்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நடாத்தியதன் காரணமாகத்தான் 61 வருடகாலமாக ஒரு உரிமையற்ற இனமாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களை விலங்குகளாக பார்க்கின்ற மனோபாவத்திலிருந்து முதலில் விடுபடுகின்றபோது மட்டும்தான் அதாவது தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்பட வேண்டும் என்ற மனோபாவம் இந்த அமைச்சர்களுக்கு வரும்போதுதான் தமிழர்களும் இங்கு மனிதர்களாக மதிக்கப்படுவார்கள் அல்லது எங்களை ஐந்தறிவு படைத்த விலங்குகளாகப் பார்க்கின்ற மனோபாவம் கொண்ட நீங்களும் ஐந்தறிவு படைத்த மிருகங்களே என எண்ணத் தோன்றுகின்றது.

எனவே ஐந்தறிவு படைத்தவை மிருகங்கள் என்றும் ஆறறிவு உள்ளவர்கள் மனிதர்கள் என்றும் சொல்லப்படுகின்றது. இதில் ஐந்தறிவு படைத்த நாய் நன்றியுள்ள மிருகமாகக் சொல்லப்படுகின்றது இவற்றில் எனக்கு ஒரு மாற்றுக் கருத்து இருக்கின்றது அதாவது நாய் மனிதர்களுக்குத்தான் நன்றியுள்ள விலங்காக உள்ளதே தவிர நாய் நாய்களுக்கு நன்றியுள்ள மிருமகாகத் தெரியவில்லை. அதே போன்றுதான் மனிதர்கள் மனிதர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இல்லாததனால்தான் இந்த அரசியல் தீர்வும் இன்று பின்னடைந்து கொண்டு செல்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 லெட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இருக்கின்றது அவைகளுக்கான மேச்சல் தரைகளாக வெல்லாவெளி பட்டிப்பளை வவுணதீவு செங்கலடி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட காணிகள் இன்று யுத்தத்திற்கு பிற்பாடு வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்ற சிங்கள மக்கள் அத்துமீறி அந்த காணிகளை அபகரிக்கின்ற ஒரு சூழ்நிலை இருந்தகொண்டிருக்கின்றது. இதனால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளை வளர்க்க முடியாத ஒரு சூழ்நிலை இப்போது உருவாகின்றது எனவே இந்த அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அத்துடன் இந்த குடியேற்றங்கள் மட்டுமல்ல இக் காணிகளை அடாவடித்தனமாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நாற்பது ஐம்பது ஏக்கர் என பிடித்து அபகரிக்கின்றபோது மாடுகளுக்கும் காணிகள் இல்லை தமிழர்களுக்கும் காணிகள் இல்லை என்பதுதான் இப்போது வடக்கு கிழக்கில் நடைபெறுகின்றது.

இதைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதான வீதிகள் செப்பனிடப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது அபிவிருத்தி என்று கூறும்போது விதியைத்தான் மட்டக்களப்பில் காட்டக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் பொலநறுவை தொடக்கம் கல்முனை வரை இருக்கின்ற அந்த வீதிகளிலே மாடுகள் உள்ளதனால் அதிகாலையிலும் இரவிலும் பிரயாணம் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை இருக்கின்றது மாடுகளுக்கு மேச்சல்தரை இல்லாததால் மாடுகள் பிரதான வீதியில் நிற்பதைக் காணலாம் இதனால் நாளாந்தம் பல மாடுகளும் மனிதர்களும் வாகன விபத்தினால் இறக்கின்றனர் குறிப்பாக பொலநறுவை மன்னம்பிட்டி வீதியில் ஒரு நாளைக்கு மூன்று மாடுகள் என்ற வீதத்தில் இறக்கின்றன அத்துடன் இரவு வேளைகளில் மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான வீதியிலும் மாடுகள்; உள்ளதனால் மக்கள் இலகுவாக பிரயாணம் செய்ய முடியாமல் இருக்கின்றது இதனால் பல வாகன விபத்துக்கள் ஏற்பட்டு பலபேர் இறக்கவும் செய்கின்றனர்.

எனவே இந்த கால்நடைகளை தகுந்த முறையில் வளர்ப்பதனால் அவைகளையும் பாதுகாத்துக்கொண்டு எம்மையும் பாதுகாக்கலாம். இன்னும் ஒரு பிரட்சினை இருக்கின்றது வடகிழக்கிலே இருக்கக்கூடிய பல இடங்களிலே விசர்நாய்களின் தொல்லைகள் உள்ளன. விசர்நாய் என்று கூறுகின்றபோது வடகிழக்கிலே இருந்த இராணுவ முகாம்களில் இருந்த விசர்நாய்கள் தற்போது முகாம்கள் அங்கிருந்து அகற்றப்பட்ட பின்பு வெளியல் வந்து மக்களைக் கடிக்கின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விசர் நாய்களில் இருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது? நாய்களைக் கொல்வது ஒரு காருண்யமான செயல் அல்ல என அரசு கூறுகின்றது. எனவே வடகிழக்கில் உள்ள தமிழர்கள் கொல்லப்படுகின்றபோது இந்த காருண்யம் எங்கே போய்விட்டது என கேட்கத் தோன்றுகின்றது.

எனவே இந்த விசர்நாய்களில் இருந்து வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களைக் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை அழித்து யுத்தத்தை முடிவுக்க கொண்டுவந்துவிட்டோமென கூறுகின்ற இந்த அரசாங்கம் விசர்நாய்களை கட்டுப்படுத்த வழியின்றி இருக்கின்றது.

எனவே தமிழ் மக்களையும் விலங்குகளாக பார்க்காமல் மனிதர்களாக மதித்து எங்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என என இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

source:Eelam press.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.