Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே! அருந்ததி ராய்

இலங்கையில்; நடைபெற்றது இனப்படுகொலையே எனவும், அங்கு இடம்பெற்ற கொடுமைகள் உலக அளவில் மிக மோசமானவை எனவும் எழுத்தாளரும் மனித உரிமைவாதியுமான அருந்ததி ராய் லண்டனில் நடைபெற்ற சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத்ஹோல் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களும், சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் நடந்த கொடிய போரைப்பற்றி, வைத்தியசாலைகள் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு பற்றி, எறிகணை தாக்குதல்கள் நடாத்தப்பட்டமை பற்றியெல்லாம் எங்களுக்கு தெரியும். குறுகிய திறந்த வெளி நிலப்பரப்பை போர் அற்ற பாதுகாப்பு பிரதேசமாக அறிவித்து அப்பகுதிகளுக்குள் மக்களை அழைத்து பின்னர் தொடர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதனையும் நாம் அறிவோம்.

சர்வதேச நாடுகள் தமது பொருளாதார மற்றும் இராணுவ நலன்சார்ந்த தந்திரோபாய ரீதியில் இலங்கையில் இவ்வாறான கொடிய போருக்கும், அதனூடான இனப்படுகொலைக்கும் அனுமதித்துள்ளதாகவும், இலங்கையில் நடைபெற்றதை முன்மாதிரியாக பின்பற்றி பிராந்திய நாடுகளும் செயற்பட வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை முதன்மைப்படுத்தி அரசியலில் தம்மை நிலை நிறுத்திக்கொண்ட தமிழக தலைவர்கள் தொடர்பாக தான் நன்கு அறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறான தமிழக சூழலில் தமிழகத்தின் அகதி முகாம்களை தான் பார்வையிட்ட போது அங்கு அவர்கள் மிகவும் மோசமான வாழ்வை தொடர்வதனை அவதானிக்க முடிந்ததாகவும் கூறிய அவர் இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள் அக்கறை கொள்ளவில்லை எனவும் அருந்ததி ராய் கவலை வெளியிட்டார்.

GTN

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே! அருந்ததி ராய்

மனிதாபிமானம் அற்றவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும், காட்டுமிராண்டிகளுக்கும், கொலைகாரக் கும்பல்களுக்கும் இந்த உண்மை புரியாது. இதுகளுக்கு பாதுகாப்புச் சபையில் உறுப்புரிமை வேறு வேண்டுமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.