Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஷவின் கரங்களிலிருந்து ஈழத் தமிழரைக் காப்பாற்றுங்கள்: உலகத் தமிழ் மாணவர் பேரவை ஜெயலலிதாவுக்கு மனு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, June 12, 2011, 18:19தமிழீழம்

கொடுங்கோலன் ராஜபக்ஷவின் கரங்களுக்குள் அகப்பட்டு திறந்த வெளிச் சிறைச்சாலையில் வாழும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலகத் தமிழ் மாணவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக உலகத் தமிழர் மாணவர் பேரவை அனுப்பிவைத்துள்ள மனுவின் முழு விபரம் வருமாறு:

“பெருமதிப்புக்குரிய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு,

தாங்கள் அண்மையில் ஈழத்தமிழர்களின் படுகொலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் உலகத் தமிழர்கள் அனைவரின் உள்ளங்களிலும் குமுறிக்கொண்டிருந்த முள்ளிவாய்க்கால் வடுக்களுக்கு ஒத்தடம்கொடுப்பதுபோல் அமைந்திருந்தது. ஈழத் தமிழர்களின் இதய வேந்தனாகத் திகழும் புரட்சித் தலைவர் பெருமதிப்புக்குரிய எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வழிவந்த தாங்கள் இன்று ஏற்படுத்திய இந்தத் தீர்மானம் அதிமுக என்றும் உலகத் தமிழர்களின் நலன் காத்து நிற்கும் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறீர்கள்.

தம்மைத் தாமே தமிழினத் தலைவர் என்று கூறிக்கொண்டு மூன்று மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து போர் ஓய்ந்துவிட்டது என்று உலகத் தமிழர்களின் காதுகளில் பூச்சுத்திய கபடநாடகதாரிகளுக்கு முன்னால் சொன்னதை எப்போதும் செயலிலே செய்யும் செயல்வீராங்கனையாக, புரட்சித் தலைவியாக நீங்கள் திகழ்கிறீர்கள். தமிழ் மக்களின் நலன்களை புறந்தள்ளி தமது குடும்ப உறுப்பினர்களின் நலன்களுக்காக அரசியல் செய்யும் சில சுயநலகாரர்களுக்கு மத்தியில் உலகத் தமிழர்கள் அனைவரையும் தங்கள் குடும்பம் போல் பாவித்து அவர்களின் நலன்களுக்காக அரசியல் செய்யும் தாங்களே உலகத் தமிழினத்திற்கு தலைமையேற்கத் தகுதியானவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமிருக்காது.

இன்று கொடுங்கோலன் ராஜபக்ஷவின் கொடிய கரங்களுக்குள் அகப்பட்டு ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பற்ற நிலையைக் கருத்திற்கொண்டு, அங்கே நடைபெறும் இனச் சுத்திகரிப்பைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்வை அமைத்துக்கொடுக்க தங்களால் மட்டுமே முடியும் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.

காலத்தின் கடமையாக உலகத் தமிழினத்தின் தலைவிதியை மாற்றியமைக்கும் பாரிய பொறுப்பை தமிழ் மக்கள் தங்களுக்குத் தந்திருக்கிறார்கள். இப்பாரிய பொறுப்பை முழுமையாகச் செய்து முடித்து உலகத் தமிழினத்தின் தலைவி என்ற மகுடத்தை நீங்களே ஏற்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து நிற்கும் எம் ஈழத்தமிழ் மக்கள் நீண்டதொரு வரலாற்றுத் துயரை அனுபவித்து வருகிறார்கள். அழிவின் விளிம்பில் இருக்கும் அவர்களுக்குப் பாதுகாப்பான ஒரு தேசத்தை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என தங்களை மானிடப்பண்போடு வேண்டிநிற்கிறோம்.

மொழியால் இணைவோம்

உணர்வாய் எழுவோம்

உயரட்டும் உலகத் தமிழ்

நன்றி

உலகத்தமிழ் மாணவர் பேரவை.”

தமிழ்த்தாய்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.