Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றச்சாட்டுகள் உண்மையோ-பொய்யோ, எல்லாவற்றையும் சிறிலங்கா விசாரிக்க வேண்டும் - றொகான் குணரட்ண

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 09:32 GMT ] [ கார்வண்ணன் ]

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றது உண்மையோ-பொய்யோ, அதுபற்றி சிறிலங்கா அரசாங்கம் விசாரிக்க வேண்டும். அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்தச் செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளாலும், மனிதஉரிமை அமைப்புகளாலும் கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளை முறியடிக்கின்ற முதல் நடவடிக்கையாக சிறிலங்கா இராணுவத்தின் போர்க்கருத்தரங்கு அமைந்திருந்தது.

உண்மையான கள நிலவரத்தை வெளிப்படுத்த சிறிலங்கா அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டு காலம் பிடித்துள்ளது.

இதற்கு இவ்வளவு காலம் பொறுத்திருக்க வேண்டியதில்லை. அரசாங்க சக்கரம் மிகவும் தாமதமாகவே சுழல்கிறது.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் உள்நாட்டில் இருந்து அனைத்துலக மட்டத்துக்குச் சென்று விட்ட நிலையில், சிறிலங்கா இராணுவம் தகவல் நிலையத்தை ஆரம்பிக்க வேண்டும்.

இதன்மூலம் சிறிலங்கா இராணுவம் மீதான குற்றச்சாட்டுகளை முறியடிக்கலாம்.

கடந்த காலங்களில் சிறிலங்கா இராணுவம் தகவல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனக் குறைவாகவே இருந்துள்ளது.

அமெரிக்காவில் பயிற்றப்பட்ட சிறிலங்காவின் தகவல் நடவடிக்கை அதிகாரிகள் போர்முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எல்லா இராணுவங்களும் போரைச் சந்திக்கும் போது, பொய்யான குற்றச்சாட்டுகளை முறியடித்து உண்மையைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், தகவல் நடவடிக்கை ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.

உலகில் எந்தவோர் போருமே பொதுமக்கள் பாதிக்கப்படாமல் நடந்ததென்று நான் கேள்விப்பட்டதில்லை. சிறிலங்கா போரும் அதற்கு விதிவிலக்கானது அல்ல.

சம்பவங்கள் தொடர்பான தவறான புரிதல்களைத் தவிர்க்க, சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்களினதும், புலிகளினதும் இழப்புகள் பற்றி சரியான கணக்கெடுப்புகள் நடத்த வேண்டும்

இது மிகவும் கடினமான காரியம்.

ஏனென்றால் விடுதலைப் புலிகள் –பொதுமக்களையும், தமது பணியாளர்களையும் முன்னரங்குகளில் நிறுத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் சமையற்காரர் கொல்லப்பட்டால், அவரை ஒரு பொதுமகன் என்றே அரசசார்பற்ற நிறுவனங்கள் பட்டியலிடும்.

எனவே சிறிலங்கா அரசுக்கு பொதுமக்கள், புலிகளின் மரணங்கள் பற்றி சரியான தகவல்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரான செயற்பாடுகள் பற்றி சிறிலங்கா ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் மிகவும் நல்லது.

போரின் இறுதியில் சிறிலங்கா அரசாங்கம் பிரகடனம் செய்த போர்தவிர்ப்பு வலயத்தில் பொதுமக்களுக்கு அருகே புலிகள் தமது பீரங்கிகளை நிறுத்திச் சுட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது. இதன்போது கள நிலைமைகள் எவ்வாறு சமாளிக்கப்பட்டது என்ற வெள்ளை அறிக்கை ஒன்றை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதைச் செய்யாது போனால் உண்மைக்கும், பரப்புரைகளுக்கும் இடைவெளி ஏற்பட்டு விடும். அது புலிகளுக்கும் ஏனைய தரப்பினருக்கும் வாய்ப்பாகி விடும்.

சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும்.

அது உண்மையோ, பொய்யோ அனைத்து குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட்டுப் பதிலளிக்கப்பட வேண்டும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

புதினப் பலகை.

Edited by தமிழ் அரசு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றது உண்மையோ-பொய்யோ, அதுபற்றி சிறிலங்கா அரசாங்கம் விசாரிக்க வேண்டும். அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

குற்றம் செய்தவர்கள் என குற்றம் சாட்டப்படவர்களே தமது குற்றத்தை விசாரிப்பது என்றால், அப்படியானால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்று ஒன்று எதற்கு? ஐ. நா. எதற்கு?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றது உண்மையோ-பொய்யோ, அதுபற்றி சிறிலங்கா அரசாங்கம் விசாரிக்க வேண்டும். அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்
.

இந்தப்போராசிரியரின் சிங்களத்திற்கான புத்திமதி காலம் கடந்த ஒன்றாகும்.

[b]to late

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.