Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல்சேவை இன்று ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 08:08 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல்சேவை இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்று பிற்பகல் 3.15 மணியளவில் தூத்துக்குடி வ.ஊ.சி துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்வில் இந்தியாவின் கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் கொடி அசைத்து முதலாவது பயணிகள் கப்பல்சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்தச் சேவையில் ஈடுபடவுள்ள ஸ்கொட்டியா பிறின்ஸ் என்ற பயணிகள் கப்பலில் 1044 பேர் பயணம் செய்ய முடியும்.

இதில் 307 அறைகள் உள்ளன. ஆரம்பத்தில் இந்தக் கப்பல்சேவை வாரத்தில் இரண்டு நாட்கள் இடம்பெறும்.

இந்தக் கப்பலில் பயணிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக 40 கப்பல் பணியாளர்கள் பணியாற்றுவர்.

மேலும் 25 பணியாளர்கள் குடிவரவு, சுங்க, மற்றும் சோதனைகளில் அதிகாரிகளுக்கு உதவும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

300 தொன் எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் வசதி கொண்ட இந்தக் கப்பலில் 111 சாதாரண வகுப்பு அறைகள் உள்ளன.

கழிவறைகளுடன் கூடிய 22 அறைகளும், கழிவறைகள் மற்றும் குளிக்கும் வசதிகளைக் கொண்ட 169 சொகுசு அறைகளும், 11 முதல்தர அறைகளும இந்தக் கப்பலில் உள்ளன.

சிற்றுண்டிச்சாலை, உணவகம், சூதாட்ட விடுதி, மதுபானசாலை, மற்றும் தீர்வையற்ற கடை என்பன போன்ற வசதிகளும் இந்தக் கப்பலில் இருக்கும்.

தனிநபர் ஒருவருக்கு சாதாரண படுக்கைக்கு 2243 இந்திய ரூபாவும், சொகுசு படுக்கைக்கு 2588 இந்திய ரூபாவும், உயர்சொகுசு படுக்கைக்கு 2760 இந்திய ரூபாவும், முதலாம் தர அறையொன்றின் படுக்கைக்கு 10,350 இந்திய ரூபாவும் கட்டணமாக அறவிடப்படவுள்ளதாக இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

புதினப் பலகை.

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.