Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Srilankan’s Killing Fields – சனல்-4 தயாரித்துள்ள ஒரு மணி நேர விவரணப் படம் இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Srilankan’s Killing Fields – சனல்-4 தயாரித்துள்ள ஒரு மணி நேர விவரணப் படம் இன்று!

Published on June 14, 2011

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சனல்-4 தயாரித்துள்ள ஒரு மணி நேர விவரணப் படம் இன்று 14ஆம் திகதி லண்டனில்(லண்டன் நேரப்படி இரவு 11.05)ஒளிபரப்பப்படுகின்றது. இந்த விவரணப் படத்தைப் பார்க்குமாறு சகல எம்.பிக்களுக்கும் ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்கொட் லீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சனல் – 4 வீடியோவிலுள்ள காட்சிகள் உண்மையானவை எனவும், போர்க் குற்றத்திற்கான சாட்சியங்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன எனவும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி இலங்கையில் நீதி, பொறுப்புக் கூறும் கடப்பாடு, உண்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றையும் ஸ்கொட் லீ முன்வைத்துள்ளார்.

இந்தப் பிரேரணையில் கன்சர்வேட்டிவ், லிபரல், லேபர் மற்றும் டெமோக்கிரட்டிஸ் யூனியன் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

கடந்த 26 வருடங்களாக நடைபெற்று வந்த போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலில் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் லிபியாவும் ஒன்று என்பது அந்தப் பிரேரணையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நேட்டோ தலைமையில் லிபியா மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கை கடுமையாக எதிர்த்துள்ளதையும் அது சுட்டிக் காட்டியுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுடைய பாதுகாப்பில் இலங்கை தோல்வியடைந்துள்ளது என்றும், இலங்கை அரசு பொதுமக்களுடைய பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்தப் பிரேரணை சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.saritham.com/?p=22516

இலங்கையின் போர்க்குற்றங்கள் மீதான போர்வையை அகற்றி விடல் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் :

என்னுடைய படமான இலங்கையின் படுகொலைக்களங்கள் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அக்கிரமத்தை வெளிப்படுத்துகிறது. ஐநா இதனைப் புறக்கணித்துவிட முடியாது. (இன்று சனல் 4இல் இது காண்பிக்கப்படுகிறது) - ஹலும் மக்ரே

இது தான் இவை பற்றி உரக்கப் பேசுவதற்கான சந்தர்ப்பம். தலைக்கு மேலால் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் அச்சமூட்டும் வகையில் ஒலியெழுப்பிக் கொண்டு வருகையில், எந்தக் கருணையுமேயின்றி கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதல்களை இலங்கை இராணுவம் மேற்கொண்டு கொண்டிருக்கையில், அச்சம் கொண்ட தமி;ழ் குடும்பங்கள் ஆழமற்ற பதுங்கு குழிகளில் நெருக்கியடித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தபடி இருக்கிறார்கள்.

ஜனவரி 2009 தமிழீழ சுதந்திர அரசுக்கான போராட்டத்தின் முடிவுகாலம் ஆரம்பமாகியது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒடுங்கிய பகுதிக்குள் 4 லட்சம் பேர் இருந்தார்கள். மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்ற கோஷத்துள் ஒளிந்து கொண்டு – அது விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர் தொடுக்க ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்தது. - போரைத் தொடங்கியது. ஐநாவும் ஏனைய மனித உரிமை அமைப்புக்களும் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டன. சர்வதேச ஊடகங்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. விமர்சனபூர்வமாக இருந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காணாமல் போயினர், அஞ்ஞாதவாசம் போயினர். உலகம் அங்கிருந்து தூர வைக்கப்பட்டது.

ஷெல் விழுகின்ற போது வெறும் மூன்றடி பதுங்குகுழுpகளே சிறிய பாதுகாப்பை வழங்குவனவாக இருந்தன. பெரியவர்கள் சிறுவர்களின் மேல் படுத்து அவர்களைக் காப்பாற்ற முயன்றார்கள். தரை மட்டத்தற்குச் சிறிது கிழேயே தலையை வைத்துக் கொண்டார்கள். சிலர் சிறிய கமெராவை வைத்து இச்சூழலிலும் படம் பிடித்தார்கள்.

குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்குகுழிக்குள் இருந்த பெண் பதட்டத்துடன் அரற்றினாள் தயவு செய்து பங்கருக்குள் வந்து விடுங்கள். வீடியோ எடுத்துக் கொண்டு நிற்காதீர்கள் என. அவள் தமிழில் அவ்வாறு கத்தினாள். இந்த வீடியோவை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள், அவர்கள் எல்லோரையுமே கொன்றொழிக்கும் போது?

அடுத்த நான்கு மாதங்களில் இரண்டு விடயங்கள் நடைபெற்றன. முதலாவதாக அரசாங்கம் பாதுகாப்பு வலயத்துள் அமைந்திருந்த தற்காலிக வைத்தியசாலைகளை இலக்கு வைத்து அவற்றின் மீது மீது சரமாரியான குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல முயற்சித்திருக்கிறது. இது வரை 40ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் அதற்கும் மேலாகவும் இருக்கலாம். மற்றையது இதே மக்கள் விடுதலைப் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதும் அது அரசாங்கத்தின் கொடுர நடவடிக்கைகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல என்பதும்.

இதில் இன்னொரு விடயமும் உள்ளடங்கியிருக்கிறது. அதாவது இப்படங்களை எடுத்த ஒளிப்படப்பிடிப்பாளன் ஒளிப்படப்பிடிப்பாளினிகள் பற்றியது. பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். சில வேளைகளில் சாதாரண வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் கமெரா பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சில வேளைகளில் தொலைபேசிகளில் உள்ள கமெராவினால் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த்தரப்பினர் இது தொடர்பில் ஏராளம் படங்களைப் பெற்றிருக்கின்றனர். இணையத்தில் அவை காணக்கிடைக்கின்றன. இது தவிர சிறிலங்கா ஆயுதப்படைகளின் போர்க்குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விகாரமான பல காணொளிக்காட்சிகள் புகைப்படங்கள் என்பன அவற்றை மேற்கொண்டவர்களாலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தங்களது கைத்தொலைபேசியில் இவற்றைப் பதிவு செய்திருக்கிறார்கள். இப்போது இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அந்தப் பெண்மணி ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைத்திருக்கிறது. இந்தக் காணொளிக்காட்சியைக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்பது தான் அந்தக் கேள்வி.

அந்தக் காணொளிக் காட்சிகளைக் கொண்டு ஒரு படத்தை எங்களால் தயாரிக்க முடிந்திருக்கிறது. தாமதமானாலும் இக்குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த முயலுகிறது. இந்தப்படம் தான் சிறிலங்காவின் படுகொலைக்களங்கள் என்பதாகும். இது செவ்வாய் இரவு சனல் 4இல் ஒளிபரப்பப்படவுள்ளது.

இத்திரைப்படம் ஒரு குழப்பத்தை உருவாக்கக்கூடும். ஏனெனில் இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் மிகவும் பயங்கரமானவையாக மையநீரோட்டத் தொலைக்காட்சிகளில் முன்னொரு போதும் ஒளிபரப்பாகாதவையாக இருக்கின்றன. ஆனால் நாங்கள் நம்புகிறோம் இது இதற்குப் புறம்பான வேறொரு காரணத்திற்காக நினைவு கூரப்படும். நாங்கள் நம்புகிறோம், தங்களுடைய சொந்த மக்களையே படுகொலை செய்தவர்களை இது நினைவூட்டும். அத்தோடு ஐநா, சர்வதேச சமூகம், உலகின் அதிகார சக்திகள் என்பவற்றிற்கு இவை முக்கியமானவை. அதுமட்டுமன்றி நவீன தொழில் நுட்பங்களின் சாத்தியப்பாடுகளையும் இது வெளிப்படுத்தி நிற்கிறது. அதாவது போர்க்குற்றங்களையோ அல்லது மனிதத்துவத்திற்கெதிரான நடவடிக்கைகளையோ இரகசியமாகச் செய்து விட்டுத் தப்பிவிட முடியாது. இப்போதிருந்தே பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் பாதிப்புக்குள்ளாக்கியவர்கள் தொடர்பிலும் விடயங்கள் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஆனால் இது முதற் கட்டம் இரண்டாவது இத்தகைய அச்சம் தருகிற ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட முடியாதவை என்பது. இந்தக்காட்சிகள் இவ்வாறான காட்சிகளை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள்; ஏற்றுக் கொண்டுள்ள சாதாரண எல்லைகளை இன்னும் உந்தித்தள்ளும்.

தடுத்து வைக்கப்பட்டவர்களையும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டவர்களையும், பச்சை இரத்தம் தெறிக்க படுகொலை செய்யபப்டுவர்களையும் இதில் நீங்கள் காணலாம். அப்பாவிப் பொதுமக்கள் தற்காலிக வைத்தியசாலைகளின் தரைகளில் மரணிக்கும் அவலத்தையும் இதில் நீங்கள் காணலாம். இலங்கை அரசின் மருந்துப் பொருட்களுக்கான தடையினால் அவர்கள் இறக்கிறார்கள். இவ்வாறான வழிமுறையின் மூலம் தான் மக்களை இதில் சிரத்தையுடன் கவனம் கொள்ள வைக்க முடியுமா? நாங்கள் நம்புகிறோம் இந்த படங்களைக் காட்டுவது சரியான வழிமுறை தான் என்று.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஐநாவின் நிபுணர் குழு இலங்கை அரசாங்கத்தாலும் விடுதலைப் புலிகளாலும் போர்க்குற்றங்களும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணை நடாத்த ஒரு சர்வதேசப் பொறிமுறை ஒன்றை பான் கீ மூன் உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. ஆனால் இது வரை அது மேற்கொள்ளப்படவில்லை. அவர் சொல்கிறார் அதற்கான அதிகாரம் தனக்கு இல்லையென. அது விவாதத்திற்குரியது. ஆனால் ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் மனித உரிமைக் கவுன்சிலுக்கும் இது தொடர்பில் அதிகாரமுள்ளது. ஐநா மீளவும் இதில் தோல்வியடையுமாயின் ஒவ்வொரு கொடுங்கோல் ஒடுக்குமுறை ஆட்சியாளருக்கும் தெளிவான ஒரு செய்தி கிடைக்கும்: உங்களுக்கு வேண்டுமானால் உங்களுடைய சொந்த மக்களையே நீங்கள் சட்டத்திற்குப் புறம்பாகப் படுகொலை செய்யலாம். அதற்கான தண்டனை உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அதிலிருந்து நீங்கள் தப்பி விடுவீர்கள் என்பது தான் .

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் :

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62594/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

உலக மக்களின் கண்களில் இருந்து மட்டுமல்ல, தமிழ் மக்களின் கண்களின் இருந்தும் இந்தக் கோரங்கள் மறைக்கப் பட்டுள்ளன!

இந்த உண்மைகள் கூறப் போகும் நிஜங்கள், எங்கள் வாழ் நாள் முழுவதும் எங்களோடு வாழப் போகின்றன!

இந்த ஒளி பரப்பின் பின்பு இந்தியாவில் சோனியா காந்தியின் அரசு ராஜினாமாச் செய்யவேண்டும்!

ஐக்கிய நாடுகள் சபையின் காரியதரிசியான பான் கி மூன் ராஜினாமாச் செய்ய வேண்டும்!

எம்மால் சரியான முறையில், இந்தக் கோரிக்கைகள் முன்னெடுக்கப் படுமிடத்து, நாங்கள் இவற்றைச் செய்ய முடியும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.