Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வை முன்வைக்காவிட்டால் போர் வெற்றியை தக்கவைக்க முடியாது!

Featured Replies

கொழும்பு நிலையான அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் போர் வெற்றியை தக்கவைக்க முடியாது! - கேணல் ஹரிகரன்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நீதியானதும், நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்காவிட்டால் விடுதலைப் புலிகளுடனான போரில் அது பெற்ற வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியாது என இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வுத் துறையின் தலைவராகப் பணியாற்றிய ஓய்வு பெற்ற கேணல் ஹரிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து தென்னாசியாவின் ஆய்வாளர்கள் குழுவின் இணையத்தளத்தில் அவர் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில், இலங்கையில் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்விகாரம் குறித்து அவர் தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ள முக்கிய விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

'இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானியா, இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாத வகையில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுதல், போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் முறையான மீள்குடியேற்றம் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இந்நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இலங்கையில் போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தமிழர்கள் அனைவரும், சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கத்தின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக சட்டப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அத்துடன், கச்சதீவை மீட்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளரான தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த வழக்கில் தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இணைக்க வேண்டும் என்று கோரியும் தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான உயர்மட்டக் குழு கொழும்புக்கு விஜயம் செய்து சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருந்த நிலையில் தமிழக சட்டசபை இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

ஆனால், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதற்கான காத்திரமான முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பது புதுடில்லிக்கும் தெரியும். இந்நிலையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இவ்விரு தீர்மானங்களும் கொழும்புக்கும், புதுடில்லிக்கும் கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்துவையாகவே அமையும்.

இத்தகைய அழுத்தங்கள் புதுடில்லிக்கும், கொழும்புக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் கயிறு இழுக்கும் நிலைகளேயே உருவாக்கும்.

சிறிலங்கா படைத்தரப்பு கடந்த மாத இறுதியில் விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றி குறித்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்காத வகையில், இப்போர் எதிர்கொள்ளப்பட்ட முறை குறித்தே இக்கருத்தரங்கில் அதிகம் பேசப்பட்டது. சிறிலங்கா படைத்தரப்பின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாத வரையில் கொழும்பு சற்று மூச்சுவிடமுடியும்.

ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் அவசியம் என சர்வதேச ரீதியாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடருக்கு முன்னதாக இக்கோரிக்கை தொடர்பிலான புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் நடவடிக்கைகள் விரிவுபடும் என எதிர்பார்க்க முடியும்.

இந்நிலையில், இத்தகைய அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கககூடிய வகையிலும், சர்வதேச சமூகத்தை நியாயமான வழிகளில் திருப்திப்படுத்தக்கூடிய வகையிலும் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறுவதோடு, தேசிய நல்லிணக்கம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என கேணல் ஹரிகரன் தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={E00BA5E6-CF04-4E80-9DCE-D346D40E6D18}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.