Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருடாய்ப்போனதேசத்தில் முடமாய்ப்போன நாங்கள் எல்லாம் பயங்கரவாதிகள் தான் -சங்கிலியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Wednesday, June 15, 2011, 23:11காணொளி

தமிழா ஓ சிதறியோடிய ஏதிலித்தமிழா!!! உன் விழிகளை கொஞ்சம் சனல் நாங்கு தொலைக்காட்சி நோக்கி திருப்படாஅதில் ஒளிபரப்பாகிக்கொண்டிருப்பது திரைப்படம் அல்ல உன் இனத்தின் கொலைப்படம்-அதில் சிங்களத்தின் கொலைமுகம்தெரிகிறதா பார்….

சிதறிய உடல்களும் சிந்திய உதிரமும் உனை தூற்றுவது கேட்கிறதா?? இன்னும்என்னசெய்யப்போகிறாய் என் இனமே !! என் உறவுகளின் உதிரத்தை உற்றுப்பார்

என் தமிழ் சாதியே !!நாதியற்ற நாய்களைப்போல் செத்துக்கிடக்கும் என் உறவுகளைப்பார் ஏனடா இந்த அவல நிலை இது என் இனத்தின் சாபமா ?? அல்லது நாம் செய்த பாவமா???

ஓ,,,,,,,,,, இளைய சமூகமே இளவுவீட்டில் நின்றுகொண்டு ஏன்வேடிக்கை பார்க்கின்றாய்

கதறி அழு -உன் சத்தம் செவிடர்கள்காதுகளில் ரத்தம் வரச்செய்யட்டும் -களத்தில் கிடக்கும்

உன் குலமாந்தர் உடல்களைப்பார் -என்ன தெரிகிறது?? ஆடையற்ற அவள்உடலெங்கும்

காயங்கள்இருக்கிறதே அது என்ன என்று தெரிகிறதா??அது என்ன என்று தெரிகிறதா என்

இனமே!!

சிங்கள ஓநாயின் நகக்கீறலும் அவன் விசப்பற்களின் அடையாளமும் -பத்துமாதம் சுமந்து

பத்திரமாய் பாதுகாத்து பொத்திப்பொத்தி வளர்த எம் அன்னையர் உடலெல்லாம் பற்றி

எரிகிறதே ,பாழ்பட்ட உலகம் பயங்கரவாதம் என்று இன்றைக்கு சொல்கிறதே ஏனென்று

கேட்பதற்கு ஏனடா ஏன் தயக்கம்

சிங்களவன் செல்லடித்தால் சல்லடைபிடித்த சில வல்லரசுகள் அதை நியாம் என்று சொல்கிறது

அவன் எறிந்த கற்களை எடுத்து நாம் எறிந்தால் அதை பயங்கரவாதம் என்று சொல்கிறது-

பாவப்பட்ட உலகில் காயப்பட்ட என் உறவுகள் இன்றைக்கு அரைந்தபடிஅலைகிறது எவனடா

அதைக்கண்டான்

சிங்களன் தேசத்தில் பட்டாசு வெடித்தாலும் புலி பாறாங்கல் விழுந்தாலும் புலி ஏனடா ஏன்

நாங்கள் புலியானோம் என்று எவன் வந்து எமைக்கேட்டான் -என் நிலத்தை கொள்ளையடித்தான்

என் தாயின் உடல்சிதைத்தான் என் தந்தையினை சிறைப்பிடித்தான்என் அக்காளை கற்பழித்தான்

இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கச்செல்லும் மடையர்களிடம் கேளடா உன் காலில்

கல் ஒன்று பட்டால் அதை எடுத்து முத்தமிடுவாயா என்று

புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லலும் இந்த உலகிடம் கேளடா அப்படி என்ன பயங்கரத்தை

அவர்கள் செய்தார் என்று -எந்தச்சிங்களத்தியையாவது கற்பழித்து கொலைசெய்தாரா?? -ஒரு

சிங்களவனின்குடிசைகள் மீதாவது குண்டுபோட்டாரா -?காவிஉடை தரித்தவனும் இன்றைக்கு

கற்பழிக்கின்றான் -புலி வரிதரித்த எவனுமே ஏன் அதைச்செய்வதில்லை ஏனடா தமின் ஆணுறு

-ப்பை அறுத்தா எறிந்துவிட்டான்-ஏன் ஒருவன் கூட காமத்தை தேடவில்லை அவர்களை வளத்த

வளர்ப்பு அப்படி என் தலைவன்கொடுத்த போதனைகள் மகத்தானவை அத்தகயதலைவனையும் -

பயங்கரவாதி என்று பச்சை குத்திவிட்டது இந்த உலகம்

தமிழா உனக்னான உரிமையினை கேட்டால் அது பயங்கரவாதம் என்றால் நீ பயங்கரவாதியாகவே

-இரு முட்டிபோட்டு நிற்பதிலும் நின்றுகொண்டே சாவது மேல் இன்னும் என்ன தயக்கம் ஏனாட

நக்கித்திரியும் நாய்கூட தன்வழிக்கு யாரும் தடை சொன்னால் பாய்துகடிக்கிறதே நாயைவிடக்கீழாக

உன் இனத்தை சிங்களவன் சிதைக்கிறானே ஏன் என்று கேட்பதற்கு எழுந்துவர என்ன தடை

அடிமைப்பட மறுத்துவிட்டு அகதியாகிப்போனவனே உலகெல்லாம் உன் வீடாக உன் வீடுகள்

சுடுகாடாகிப்போனதடா-எஞ்சிஉள்ள உன் தங்கையரை காமவெறிச்சிங்களன் அன்றாடம் தின்னுகின்றான்

புலப்பெயர் தேசமெங்கும் மின்விளக்குகள் நடுவினிலே நீ நித்திரை கொள்கின்றாய் மின்னுகின்ற

பவளம்போல் பாதைகளில் நீ நடந்து திரிகின்றாய்-பாவிகள் கரங்களால் என் இனம் அழிகிறது

உனக்காக களத்தில் காவல்நின்ற வேங்கைகள் இன்று கையிழந்து கால் இழந்து ஊர்ந்தபடி அலைகிறது

நீ நின்மதியாய் தூக்கம்கொள்ள எல்லையில் நின்று காவல்செய்த காவல்தெய்வங்கள் இன்று கருகிய

உலல்களுடன் உன் கண் முன்னே தெரிகிறனர் -கைகட்டி வேடிக்கை பார்கும் கோழைசாதிகளே! என்ன

துனிவிருந்தால் இந்தச்சிங்களக்கொலைவெறியர் எம் அக்கா தங்கையரை கொன்றுவிட்டு அதை கானெளி -யாய் பதிந்திருப்பார்

பூகேலஅரசியலில் உன் தேசம் புழுதிபடிந்து கிடக்கிறது ஈழத்தின் பெரும்புயலே நீ வேகம்கொண்டால்

இந்தப்புழுதிகள் கலைந்தோடி உன் தேசம் மலர்ந்துவிடும்-உன் இனத்தைன் விடுதலையில் கொடும்

தலைகள் கொய்யப்படும் -உனக்கு நீதிகிடைத்தால் அநீதிகள் தீயினில் வெந்துவிடும்-நெந்துகொண்டி

-ருக்கும் நெஞ்சங்களை சந்தித்து கரம்கொடுத்து ஒன்றுபடு -ஓய்ந்துவிட்ட கால்களின் பயணங்கள்

தொடரட்டும் உன் மண்ணில் நிலைகொண்ட காலகள் எல்லாம் இனி ஓடத்தெடங்கட்டும்-ஒன்றுபடு என்

இனமே ஒற்றுபடு என் இனமே!!!..

http://youtu.be/rFiTHoXbTWQ

http://www.tamilthai.com/?p=19386

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.