Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக யதார்த்தங்களைப் புரிந்து இலங்கை அரசு நடக்க வேண்டும்

Featured Replies

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழகத்தின் கரிசனை முயற்சிகள் மற்றும் திட்ட வரைபுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது இதேநேரம் இவ்விடயத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு

தார்மிக ரீதியிலான கடமையும் பொறுப்பும் இருக்கின்றது என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு மற்றும் தமிழர் பிரச்சினையில் உலக நடப்புக்களையும் யதார்த்தங்களையும் புரிந்து கொண்டு காலத்தின் தேவை கருதி இலங்கை அரசு செயற்பட்டு கௌரவமான தீர்வொன்றினை முன் வைக்குமானால் சர்வதேச அழுத்தங்களுக்கு இடமிருக்காது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா, இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் விடுத்த வலியுறுத்தல்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யு மான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு கிழக்கு மற்றும் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தினூடாக தனது நன்றியைத் தெரிவித்து வரவேற்றிருந்தது.

இலங்கைத் தமிழரின் அரசியல் அந்தஸ்து உரிமைகளுக்காக தமிழகத்தின் 70 மில்லியன் தமிழ் மக்கள் நீதியானதும் நியாயமானதுமான குரலை எழுப்புவது குறித்தும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவினால் முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகள் மத்திய அரசுக்கான அழுத்தங்கள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டடைமப்பு மீண்டும் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றது. இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மீள்குடியேற்றம், சமவுரிமை மற்றும் போர்க்குற்றம் ஆகியவை தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாக சந்தித்து வலியுறுத்தியிருப்பதானது தமிழகத்தின் அக்கறையினை வெளிப்படுத்தியிருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றமையினாலும் இலங்கையானது இந்தியாவுக்கு அண்மித்த நாடாக இருப்பதாலும் மேலும் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதாலும் இந்திய மத்திய அரசுக்கு தார்மீக ரீதியிலான கடமையும் பொறுப்பும் இருக்கின்றது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கம் இதனை உணர்ந்து இலங்கை அரசுக்கு ஆக்கபூர்வமான அழுத்தங்களைப் பிரயோகிக்க கடமைப்பட்டிருக்கின்றது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விளைகின்றது. எமது ஒட்டு மொத்த பிரச்சினைகளும் களையப்பட்டு அதற்கு நிரந்தரமானதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை, உலக நடப்புக்களையும் யதார்த்தங்களையும் புரிந்து நடக்க வேண்டிய பொறுப்பு அதிகபட்சமாக இலங்கை அரசாங்கத்தையே சார்ந்திருக்கின்றது.

இதனைப் புறந்தள்ளி அல்லது பின்னடித்து அரசியல் தீர்வு விடயத்தில் ஏமாற்றுக்களையும் இழுத்தடிப்புக்களையும் மேற் கொள்ள அரசாங்கம் முற்படக் கூடாது. அவ்வாறு இடம்பெறுமேயானால் தற்போதைய சர்வதேச அழுத்தங்கள் மேலும் மேலும் அதிகத்துச் செல்லுமே தவிர ஒரு போதும் குறைவடையப் போவதில்லை.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் சமவுரிமைகளுடனும் வாழ வேண்டும் என்பதே எமது அபிலாஷையாக இருக்கின்றது.

இதற்கு ஏற்ற வகையில் நீதி நியாயமான, கௌரவமான தீர்வுத் திட்டத்தை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக விடயத்தில் அரசாங்கம் நியாயபூர்வமாக நடந்து கொள்ளுமானால் சர்வதேசத்தின் நெருக்குவாரங்கள் குறைவடையலாம் அல்லது இல்லாது போகலாம் என்பதையும் அரசாங்கத்துக்கு அறிவுறுத்த விரும்புகிறோம்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

தார்மிக ரீதியிலான கடமையும் பொறுப்பும் இருக்கின்றது என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு மற்றும் தமிழர் பிரச்சினையில் உலக நடப்புக்களையும் யதார்த்தங்களையும் புரிந்து கொண்டு காலத்தின் தேவை கருதி இலங்கை அரசு செயற்பட்டு கௌரவமான தீர்வொன்றினை முன் வைக்குமானால் சர்வதேச அழுத்தங்களுக்கு இடமிருக்காது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

குறிப்பிட்டு சொல்லக்கூடிய மாற்றம் ஏதாவது நடன்தனவா? இவர்கள் சுட்டி காட்டுவது போல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.