Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் அக்கறையின்றி செயற்படுவதே அரசுக்கெதிரான சர்வதேச அழுத்தத்தின் பிரதான காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Friday, 2011-06-17 09:54:10]

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றமையே அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தங்களுக்கான பிரதான காரணமாகும் என்று இடது சாரி முன்னணியின் தலைவர் கலாநிதிவிக்கிரமபாகு கருணாரத்ன தெவித்தார் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றினை வழங்குமாயின் அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தங்கள் அப்படியே இல்லாது போய்விடும்.

இல்லையேல் அரசாங்கம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை யாராலும் தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறினார்.பிரித்தானியாவின் சனல் 4 தொலைக் காட்சி விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது, யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்காமல் இழுத்தடித்துக் கொண்டுள்ளது.

இதுவே செனல் 4 விடயம் தொடர்பான பல்வேறு அழுத்தங்களுக்கான காரணமாகும். இன்று இலங்கைக்கு எதிராக பல்வேறு மட்டங்களில் இருந்து அழுத்தங்கள் எழுந்த வண்ணமேயுள்ளன. எல்லாவற்றையும் உதாசீனப்படுத்தி விட்டு இருந்து விட முடியாது. இன்று இலங்கைக்கு எதிராக தமிழ் நாட்டு அரசாங்கம் கூட கிளர்ந்தெழுந்துள்ளது.

புலிகள் இயக்கத்திற்கெதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியா பேருதவி வழங்கியதாகவும் அதனாலேயே புலிகளை அழிக்க முடிந்ததாகவும் இலங்கை அரசாங்கமே கூறியிருந்தது. அப்படியாயின் இந்தியா வலியுறுத்தும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழாவது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை வழங்க வேண்டும். அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றினை வழங்கியிருந்தால் தற்போது எழுந்துள்ள பல்வேறு அழுத்தங்கள் எழுந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை. எனவே இவற்றினை கருத்திற் கொண்டு அரசாங்கம் குறைந்த பட்சம் காணி பொலிஸ் அதிகாரங்கள் அடங்கலாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழாவது தீர்வொன்றினை வழங்க வேண்டும். இந்த தீர்வுத் திட்டம் தொடர்பாக வடகிழக்கு தலைவர்களுடன் இதய சுத்தியுடனான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு அண்டைய நாடான இந்தியாவை அரவணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்படும் சந்தர்ப்பத்தில் சர்வதேச மட்டத்தில் எழுகின்ற அழுத்தங்கள் படிப்படியாக இல்லாது போய்விடும்.

இவற்றையெல்லாம் செய்யாமல் சர்வதேச நாடுகள் சூழ்ச்சி செய்கின்றது. அப்படி இப்படியெல்லாம் சத்தமிட்டு கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. முறையான வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்காத அரசாங்கம் இன்று நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தையும் மாணவர் சமூகத்தையும் அடக்கி ஒடுக்கிக்கொண்டு சர்வாதிகார போக்கில் செயற்பட்டு கொண்டிருக்கிறது. இதனை யெல்லாம் சர்வதேச நாடுகள் அவதானித்துக் கொண்டுதான் உள்ளது. எனவே அரசாங்கம் தமக்கெதிராக எழுகின்ற அழுத்தங்களில் இருந்து மீளும் வகையிலான முறையான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் பாரிய எதிர்விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=44986&category=TamilNews&language=tamil

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.