Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எம்மால் வழக்குகளைச் சோடிக்கவும் முடியும்' எம்மால் ஆட்களை விடுவிக்கவும் முடியும்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'எம்மால் வழக்குகளைச் சோடிக்கவும் முடியும்' எம்மால் ஆட்களை விடுவிக்கவும் முடியும்'

19 ஜூன் 2011 மஹிந்த ராஐபக்ஷவின் அதிர்ச்சியூட்டும் வெளிப்படுத்தல் - உவிந்து குருகுலசூரிய - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியான கந்தேகெதர பிரியவன்ஸ, 2011 மே 12ம் திகதி, கல்கிசை நீதிபதி முன்னிலையில், சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில், ஒரு உயர்மட்ட இராணுவ அதிகாரி தொடர்பு பட்டிருப்பதாகக் கூறும்படி, பயங்கரவாத புலனாய்வு பிரிவின் (TID) பொறுப்பதிகாரி, தனக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். தற்போது விளக்க மறியலில் இருக்கும் இந்த புலனாய்வு அதிகாரி பகிரங்க நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், நீதிமன்றத்தில் பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி இந்த கொலையில் தொடர்பு பட்டிருப்பதாக கூறும்படி தனக்கு அறிவுறுத்தப் பட்டதாகவும் அதற்கு பிரதியுபகாரமாக, வெளிநாடு செல்லும வாய்ப்பு, தனக்கான பாதுகாப்பு மற்றும் சிறிலங்காவில் ஒரு வீடு என்பன கிடைக்கவிருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு குறித்த உயர்மட்ட இராணுவ அதிகாரியை லசந்தவின் கொலையோடு தொடர்பு படுத்தும்படி கூறப்பட்ட அதேவேளை, குறித்த இராணுவ அதிகாரியை இரண்டு ஊடகவியலாளர் மீதான தாக்குதலிலும் தொடர்பு படுத்தும்படி அறிவுறுத்தப் பட்டதாகக் கூறப்பட்டது. அந்த குறித்த 'உயர்மட்ட இராணுவ அதிகாரி' ஜெனரல் சரத் பொண்சேக்கா தான் என்பது மிகவும் நிச்சயமானதாகும்.

2009ம் ஆண்டின் பிற்கூறுகளில் ராஜபக்ஷக்களுக்கெதிராக திரும்பும்வரை அவர் இந்த ஆட்சியினுடைய செல்லப்பிள்ளையாக இருந்தார். லசந்தவினுடைய கைதொலைபேசியைத் திருடிய ஒரு கிராமத்து பையன் தவிர வேறு எவரும் முதலில் கைது செய்யப் பட்டிருக்கவில்லை. ஆனால் பொண்சேக்கா எதிரணியில் இணைந்து கொண்டபின், ஒரு தொகுதி இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். லசந்தவை கொல்வதென்பது ஒரு அரசியல் முடிவுதான் வெறுமனே இராணுவ தளபதியுடைய முடிவு அல்ல, என்பது தெளிவான விடயமாகும். இப்பொழுது ராஜபக்ஷக்கள் லசந்தவின் கொலையில் ஜெனரல் பொண்சேக்காவை மாட்ட முயற்சி செய்கிறார்கள்.

2008ம் ஆண்டில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்த பொழுது, நான் கண்ட, அப்போதுதான் முளைவிட்டுக் கொண்டிருந்த, முழுமையான, தண்டனை- பயமின்மையின் அறிகுறிகள் தொடர்பான எனது சொந்த அனுபவம் எனது நினைவுக்கு வந்தது. சுதந்திர ஊடகவியக்கத்தின் ஏற்பாட்டாளர் என்ற முறையிலேயே நான் அவரைச் சந்தித்தேன். நாங்கள் தனிமையில் சந்திக்கவில்லை. அவருடைய அமைச்சரவையின் வேறுபல உறுப்பினர்களும் அங்கே பிரசன்னமாக இருந்தனர். சுமுகமான ஒரு கலந்துரையாடலின் பின் 'நீங்கள் போகுமுன் ஏதாவது இரவுணவு சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்' என்று கூறிக்கொண்டே ஜனாதிபதி தன் இருக்கையில் இருந்து எழுந்தார்.

'இன்னும் ஒரு விடயம்' என்றேன் நான்.

'என்ன அது?' ஜனாதிபதி கேட்டார்.

'திசைநாயகத்துடைய விவகாரம்' நான் சொன்னேன்.

' ஓ! அதுவா? நான் திசாநாயகத்தை விடுவிக்க விரும்புகிறேன். அவரது மனைவி மங்கள முனசிங்க ஊடாக மனு ஒன்றை அனுப்பியிருந்தார்' முகத்தில் ஒரு புன்னகையுடன் ஜனாதிபதி சொன்னார். 'அப்படியானால் இரண்டு வாரங்களுக்கு முன் பிரதி சட்ட முகவர்கள் நாயகத்தை அழைத்து வழக்குத் தாக்கல் செய்யும்படி ஏன் கூறினீர்கள்?' நான் கேட்டேன். இதனால் ஜனாதிபதிக்கு கோபம் மூண்டிருப்பது தெளிவாக தெரிந்தது. அவர் முதலில் ஊடகத்துறை அமைச்சர் யாப்பா பிரியதர்சனவின் திசையிலும,; பின் சுதந்திர கட்சி பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கமும் பார்த்து விட்டு நேரடியாக என்னை நோக்கினார். கோபத்தோடு மேசையில் ஓங்கி அறைந்த அவர் 'எங்களால் வழக்குகளைச் சோடிக்கவும்முடியும் ஆட்களை விடுதலை செய்யவும் முடியும்' என்று சொன்னார். பின்பு எனக்கருகே வந்த அவர், எனது இடுப்பு பகுதியில, கையால் செல்லமாக இடித்துவிட்டு, 'உங்களுக்கு எல்லாம் தெரிந்து விடும் இல்லையா?' என்று கேட்டார்.

மேற்படி உரையாடல், 2008 செப்ரெம்பரில் நாங்கள் அவரை சந்தித்த போது நிகழ்ந்தது. ஜனாதபதி ராஜபக்ஷவுடனான இந்த சந்திப்புக்கு சிறிலங்கா உழைக்கும் ஊடகவியலாளர் சங்க தலைவரான சனத் பாலசூரிய, அச்சங்கத்தின் செயலர், ஜயந்த ஆகியோருடன் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் என்ற வகையில் நானும் இணைந்து கொண்டிருந்தேன்.

உங்களுக்கு எல்லாம் தெரிந்துவிடும் இல்லையா?

ஜனாதிபதி ராஜபக்ஷ மூடிமறைக்க முயன்ற விடயம் என்ன?

இதுதான் அது. 2008 ஓகஸ்ட் மூன்றாவது வாரத்திலே சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து, பிரதி சட்ட முகவர்கள் நாயகங்களைச் சந்திப்பு ஒன்றுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்திருந்தார். காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 'சந்தேக நபர்கள.' மீதான குற்ற நிரூபணத்தைப் பெறுவதில் திணைக்களம் வெற்றிகளை பெறாமை குறித்து அவர் பொறுமையிழந்திருந்தார். புலிகளுக்கு உதவியதாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, மவ்பிம ஊடகவியலாளர் பரமேஸ்வரி முனுசாமி, சாட்சியங்கள் இல்லாமையால் விடுவிக்கப்பட்டது, இந்தச் சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருந்தது.

ஜனாதிபதி கேட்ட முதல் கேள்வி திசாநாயகத்தின் வழக்குக்கு பொறுப்பாக இருந்த பிரதி சட்ட முகவர்கள் நாயகத்தை நோக்கி தொடுக்கப்பட்டது. வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கான ஆதாரங்கள் குறைவாக இருப்பதாக பிரதி சட்ட முகவர்கள் நாயகம் தெரிவித்தார். அதைப் பற்றி கவலைப்படாமல் வழக்கை தொடர்ந்து நடத்துமாறு அவரை ஜனாதிபதி பணித்தார். (பிரெஞ்சு அமைப்பான Action Contre la Faim- ACM இன் தொண்டு பணியாளர் 17 பேர் மரணதண்டனை நிறைவேற்ற பாணியில் 2006ம் ஆண்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ACF வழக்குக்குப் பொறுப்பான பிரதி சட்டமா அதிபர் நாயகத்திடம் அவ்வழக்கு தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது, இந்த வழக்கின் வலுவான சாட்சிகள் இரண்டு பேர் அவுஸ்திரேலியாவில் இருப்பதாக சட்டமா அதிபர் நாயகம் தெரிவித்திருக்கிறார். அப்போது, அங்கே பிரசன்னமாக இருந்த ஜனாதிபதி ராஜபக்ஷவின் இளைய சகோதரரும், முதுநிலை ஜனாதிபதி ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ அவுஸ்திரேலியாவில் யாரும் வீதி விபத்துக்களில் சாவதில்லையா? என்று கேட்டார்.

இதனால் ஆத்திரமுற்ற பிரதி சட்டமா அதிபர் நாயகம், அடுத்த நாள் என்னை தொலைபேசியில் அழைத்து, நடைப் பயிற்சி செய்பவர்களின் விருப்பத்துக்குரிய இடமான சுதந்திர சதுக்கத்துக்கு வரும்படி கேட்டுக்கொண்டார். நான் அவரை அங்கே சந்தித்தேன். நாங்கள் ஒன்றாக நடந்துகொண்டிருக்கும் போதே இந்தக் கதையை கூறிய அவர், என்னை இந்த இடத்தை விட்டுப் போய் விடும்படி கேட்டுக்கொண்டார். இன்றுவரை, தங்களுக்கு உயிராபத்து வரும என்ற பயத்தால் இது பற்றி எவரும் எழுதவில்லை. இந்த கதையை, மூல தகவல் முதலில் இருந்து பெறமுடியாததால், சர்வதேச ஊடகங்களும் இது பற்றி எழுதவில்லை சில பிரதி சட்டமா அதிபர் நாயகங்கள் கூறுவதின்படி பசில் ராஜபக்ஷவின் கேள்வி, கொஞ்சம் பிசகான ரசனையிலான நகைச்சுவையாக இருந்திருக்கிறது. ஆனால், ஏனையவர்கள் இதனால் ஆத்திரமடைந்ததுடன், அதில் எந்த நகைச்சுவையையும் காணவில்லை. பிரதி சட்டமா அதிபர் நாயகங்களுடனான கலந்துரையாடல், ஒடுக்கு முறையின் பின்னால் உள்ள மனப்போக்குகளை வெளிப்படுத்துகிறது, இந்த சந்திப்புக்கு பின்பு, அதாவது, அதற்கடுத்த வாரம,; 2009 ஒகஸ்ட் 25ம் திகதி, அதிகரித்து வந்த சர்வதேச அமுத்தங்களுக்கு மத்தியிலும், 2008 மார்ச் 7ம் திகதியிலிருந்து, நான்கு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட ஊடகவியலாளர் திசைநாயகத்தின் மீது, கொழும்பு உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஐயா,வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கான அடிப்படைகள் மிகக் குறைவாக இருக்கின்றன.

பயங்கரவாத விசாரணைப் பிரிவு திசைநாயகத்தினால் ஒப்பமிடப்பட்ட ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிரான சாட்சியமாக முன்வைத்திருந்தது. அதில் என்ன எழுத வேண்டும் என்று கூறப்பட்டு அதை எழுதும்படியும் நிர்ப்பந்திக்கப்பட்டதாக திசைநாயகம் தெரிவித்தார்.

2009 ஒகஸ்ற் 31ம் திகதி, போரால் பாதிக்கப்பட்ட தமிழ் சிவிலியன்களை அரசு நடத்திய விதம் குறித்து விமர்சனம் செய்கின்ற கட்டுரைகளை எழுதி, பிரசுரித்ததன் மூலம், 'இனவாத உணர்வுகளை' தூண்டி விட்டது, பயங்கரவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக இந்தக் கட்டுரைகள் வெளியிடப்பட்ட சஞ்சிகைக்கு நிதியூட்டம் செய்யவென பணம் திரட்டியது, ஆகிய குற்றங்களுக்காக சிறிலங்காவில் உள்ள உயர் நீதிமன்றம் திசைநாயகத்துக்கு மொத்தமாக 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2010 மே 3ம் திகதி, 2010 உலக பத்திரிகை துறை சுதந்திர நாளைக்குறிக்கும் விதத்தில், திசைநாயகத்துக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பார் என்று சிறிலங்கா அரசு அறிவித்தது. 'வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கான அடிப்படைகள் குறைவாக இருந்த' ஒரு வழக்குக்கு இதுதான் நடந்தது.

அவுஸ்திரேலியாவில் உள்ளவர்கள் வீதி விபத்துகளில் இறப்பதுண்டா?

ACM வழக்குக்கு என்ன நடந்தது? 2006 ஓகஸ்ட் 4ம் திகதி, ஒரு முஸ்லிம் மற்றும் 16 தமிழர்கள் அடங்கிய ACF பணியாளர்கள், மூதூரில் உள்ள அவர்களது அலுவலக வளவில், மண்டியிடச் செய்யப்பட்டு, உயிர்ப் பிச்சை வேண்டிக் கதறக்கதற, மரண தண்டனை நிறைவேற்றும் பாணியில், மிக அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதில பலியானவர்கள் எந்தக் குறுக்குச் சூட்டிலும் அகப்படவில்லை தற்செயலாகச் சுடப்படவுமில்லைள அல்லது மோதலொன்றின் போது, மோதலில் ஈடுபடுபவர்கள் என்று தவறுதலாக நினைத்து சுடப்படவுமில்லை. அவர்கள் தேடிப் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கிடைக்கக்கூடியதாக இருக்கும் சான்றுகள், சிறிலங்கா ராணுவக் கமாண்டோக்கள் பிரசன்னமாக இருக்கையில், செயலில் இறங்கிய காவல்துறையினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும்தான் இதற்குப் பொறுப்பு என்று சுட்டிக்காட்டுகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லது இது போன்ற, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான உண்மைகளை சுயாதீனமாக ஆராய்ந்து, குற்றத்தை நிகழ்த்தியவர்களை அடையாளம் காணும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் அரசானது இந்தக் கடமையை நிறைவேற்றத் தவறியிருப்பதோடு, அதைச் செய்ய முயன்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளையும் தடைசெய்துள்ளது.

சாட்சிகளுக்கான முறையான பாதுகாப்பு எதுவும் இல்லாமலிருப்பதை அரசு நிச்சயப்படுத்திக் கொண்டது. இச்சம்பவத்தோடு தொடர்புபட்ட 5.56 மிமீ ரவையொன்றின், முன்னதாகப் பெறப்பட்ட அடையாளம் காணலையும் அரசு மாற்றிவிட்டது. நாட்டை விட்டு ஓட நேர்ந்த சாட்சிகளின் சாட்சியங்களை வீடியோ மகாநாடு மூலம் இணைத்துக் கொள்வதை தடைசெய்த ஜனாதிபதி ஆணையானது, உண்மையை ஒடுக்க எடுக்கப்பட்ட ஒளிவுமறைவில்லாத நகர்வாக இருக்கிறது. விசாரணை ஆணைக்குழுவின், காவல்துறை விசாரணைப் பிரிவானது, சாட்சிகளைப் பொறுத்தவரை, பயமுறுத்தும் பிரிவாகச் செயற்பட்டு, உண்மை ஒடுக்கப் படுவதை நிச்சயப்படுத்தியது. விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும் முன்னரே, நீதிச் சேவைகள் ஆணைககுழு உள்ளிட்ட, அரசின் பல கரங்கள், முறையான ஒரு விசாரணை நடப்பதைக் குழப்ப முற்பட்டன.

அப்போது அங்கு கடமையாற்றிய நீதிபதியை ( தமிழரான அவர் சிங்களவர் ஒருவரால் மாற்றீடு செய்யப்பட்டார்) அவர் தனது விசாரணை முடிவுகளை வெளியிட சற்று முன்னதாக, மாற்றீடு செய்தது உள்ளிட்டதாக, இந்த முயற்சிகள் இருந்தன. விசாரணை ஆணைக்குழு உருவாக்கப்பட்டபின், அரசின் சார்பில் முற்பட்ட சட்டவாளர்களுடன் இணைந்து, சட்ட மாஅதிபர் அலுவலகமும் உண்மையான குற்றவாளிகளைச் சுட்டிக்காட்டக்கூடிய, எந்தத் தகவலையும் நம்பத் தகாதது ஆக்கவென, தொடர்ந்து ஓரணியாகச் செயற்பட்டார்கள். சட்ட மாஅதிபர் அலுவலகத்தின் வகிபாகம் பற்றி, IIEGP (விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அவதானிக்கும் ஆணையுடனான,சர்வதேச சுயாதீன பெருமைபெற்ற பிரமுகர்கள் குழு) கேள்வி எழுப்பியிருந்தாலும், அது கணக்கிலெடுக்கப் படவில்லை.

2009 யூலை 21ம் திகதி, விசாரணை ஆணைக்குழுவின் தலைவரான, நீதியாளர் உடலகம, சிறிலங்காவின் டெய்லி மிறர் நாளிதழுக்கு, 'வெளிநாட்டிலிருக்கும் சாட்சிகளின் சாட்சியங்களைக் கேட்க, வீடியோ மகாநாட்டைப் பயன்படுத்துவது அவசியமாகும். ஆனால் இந்த நடைமுறையானது, ஜனாதிபதி ஆணையொன்றினால் தடை செய்யப்படடுள்ளது.' என்று தெரிவித்தார்.

2009 நடுப்பகுதியில் ஆணைக்குழு அனுங்கிக்கொண்டே செயலிழந்தது. அதன் தலைவர் கூறியபடி,'எங்களது நிதி வசதி முடிந்துவிட்டதால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை'. எனினும் அரசானது, பலியானவர்களின் குடும்ப அங்கத்தவர்களை வற்புறுத்தி, 'நாங்கள் இந்த மரணங்கள் புலிகளால் நிகழ்த்தப்பட்டவை என்ற ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக் கொள்கிறோம்.' எனறு கூறும் ஆவணங்களில் ஒப்பமிடச் செய்வதை, ஆணைக்குழுத் தலைவரின் மேற்படி ஒப்புதல் வாக்குமூலத்தால் தடுக்கமுடியவில்லை.

(UTHR) இன் சிறப்பு அறிக்கை 31 ஐப் பார்க்கவும்). வலுவான இரணடு சாட்சிகள் இருந்த வழக்கின் முடிவு இப்படியாயிற்று.

2011 மே 12ம் திகதி, டெய்லிமிறர் இதழில், அப்போது மனித உரிமைகள் அமைச்சுச் செயலரும், இப்போது ஆளும்கட்சி பா.உ மான, பேராசிரியர் ரஜீவ விஜயசிங்ஹ, மாற்றுக் கொள்கைகள் மைய நிறைவேற்றுப் பணிப்பாளர், கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவை விமர்சித்து எழுதிய கட்டுரையொன்றில், 'இலட்சியங்களுக்கான அர்ப்பணிப்பின் காரணமாக தங்கள் பதவிகளையும் அரச அனுகூலங்களையும் உதறித் தள்ளியவர்களுக்கும், இலட்சிய நோக்கு போன்று தோற்றமளிக்கும் நிலைப்பாட்டிலிருந்து அரசை விமர்சனம் செய்வதன் மூலம், நிதி ரீதியாகவும், கௌரவ ரீதியாகவும் தொடர்ந்து பயன் பெற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கும் இடையே, வேறுபாடு இருக்கின்றது. ஒரு பயனுள்ள கருவியென்று, நான் தொடர்ந்து நம்பி வரும், இநதப் புலத்தோற்றமானது, குடிசார் உரிமைகள இயக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள், போன்ற அமைப்புகள் தொடர்பாக நான் பகிரங்கமாகவே தொடர்ந்து வெளிப்படுத்திவரும், வியந்து பாராட்டுதலை விளக்குவதாக இருக்கிறது.' என்று கூறியிருக்கிறார்.

எனவே ஏனைய சிவில் அமைப்புகள் சொல்வதை நம்ப விரும்பாதவர்கள், விஜயசிங்ஹவினாலேயே அங்கீகார முத்திரை குத்தப்பட்ட அமைப்பான, மனித உரிமைகளுக்கான யாழ் ஆசிரியர்கள் அமைப்பு, ACF வழக்கைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்பதை, வாசிததுப் பார்க்கலாம். நீங்கள் அவர்களை www.uthr.org இல் எட்டலாம்.

இந்தப் பின்னணியில் தான் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும். பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை விசாரணைகள் என்ற நாடகத்தையும் நோக்கவேண்டும்.

'நாங்கள் வழக்குகளைச் சோடிக்கவும் முடியும்ளூ ஆட்களை விடுதலை செய்யவும் முடியும்.' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் பெருமையடித்துக் கொண்ட. அவரது தன்னிச்சையான அதிகாரத்தின். அதிர்ச்சியூட்டும் அகல்விரிவின் உதாரணங்களாக இவை இருக்கின்றன. இந்தச் சம்பவம், ஒடுக்குமுறையின் பின்னால் இருக்கும் மனப்போக்கை வெளிப்படுத்துகிறது. இந்தப் போக்குத் தொடர்ந்தால், இறுதியாக, குடிமக்களும் சமூகங்களும், மேன்முறையீடு செய்யவென, சட்ட நியமங்கள் எதுவும் இல்லாமல் போய்விடும். உண்மையானது, அதன் எல்லாப் பொருள்களையும் இழந்துபோய், அரசானது, பகுத்தறியும் திறன், மற்றும் முன்னோக்குத் திறன் ஆகிய இயலுமைகள் அற்றதாக ஆகும்போது, சட்டம் ஒழுங்கற்ற நிலை பூரணமானதாக ஆகிவிடும். இயல்பு நிலைமைக்கு திரும்புதல், மற்றும் அதைவிடச் சிறப்பாக, சிறிலங்காவில், இனங்களுக்கிடையேயான உறவுகளையும் நீதியையும் மேம்படுத்துவது, என்பவற்றை விட, போரின் முடிவு என்பதுதான், ஆட்சியிலிருக்கும், ஆதிக்கவாத, கொள்ளைக்கார, எதேச்சாதிகார கூறுகளுக்கு, இன்னொரு மைல் கல்லாக இருக்கிறது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62811/language/ta-IN/article.aspx

“We are capable of fabricating any false case and convict anybody;

.......and also capable of acquitting any criminals and release them”.

................................. – President Mahinda Rajapakse of so called Democratic Socialistic Republic of Sri Lanka

பயங்கரவாதி மகிந்தவின் இந்தக் கூற்றை உலகம் முழுவதும் பிரபல்யப் படுத்தவேண்டும்.

Edited by ஆராவமுதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.