Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கியைபோல் சிறிலங்காவும் ஒரு 'முன் மாதிரி' ஆகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 05:14 GMT ] [ தி.வண்ணமதி ]

கடந்த 17 ஆண்டுகளாக சிறிலங்கா அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிப் பேசி வருகிறது. துருக்கியில் இருப்பதைப் போலவே, சிறிலங்காவின் இன்றைய அரசியலமைப்பு மோசமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இவ்வாறு துருக்கியை தளமாகக் கொண்ட Hurriyet Daily News என்னும் ஊடகத்தில் DAVID JUDSON எழுதியுள்ள தனது பத்தியில் தெரிவித்துள்ளார். அதன் முழுவிபரமாவது,

அராபியப் புரட்சிக்கு துருக்கி முஸ்லிம்களை ஒரு முன்மாதிரியாக பலரும் தீவிரமாக கருத்துரைத்தமை புத்திஜீவிகளின் சோம்பேறித்தனமாகவே பலராலும் கருதப்பட்டது.

அதுபோலவே தற்போது துருக்கி பிரச்சினைக்கு ரஸ்ய அல்லது அமெரிக்க அதிபர் முறைமையைப் பரிந்துரை செய்வதும் அமைகிறது.

ஆனால் இரு விடயங்களும் அடிப்படையிலேயே பல முரண்பாடான விடயங்களைக் கொண்டுள்ளபோதும் இந்த 'மாதிரிகள்' பற்றி மக்கள் பேசக்கொள்கின்றனர். எனவே நாம் இத்துடன் 'சிறிலங்கா மாதிரியையும்' இணைத்துக்கொள்வோம்.

துருக்கியையும் சிறிலங்காவினையும் பொறுத்தவரையில் ஒற்றுமைகளை விட வேறுபாடுகளே அதிகம் காணப்படுகின்றன.

சிறிலங்கா 20 மில்லியன் மக்கள் தொகையினைக்கொண்ட இந்து சமுத்திரத்தின் மத்தியிலுள்ள ஒரு நிலக்கூறு: எவ்வாறிருப்பினும் துருக்கிக்கும் சிறிலங்காவிற்கும் இடையே சில ஒற்றுமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

முன்னர் சிலோன் என்ற அழைக்கப்பட்ட சிறிலங்காவில் முதலாவது பல கட்சித் தேர்தல், துருக்கியில் இடம்பெற்றதைப் போலவே 1947ம் ஆண்டுதான் இடம்பெற்றது.

'ஒற்றையாட்சி' முறைமையினைக் கொண்ட நாடுகளே இவை இரண்டும். ஆத்திகம் மற்றும் நாத்திகம் தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இந்த இரண்டு நாடுகளிலும் தொடர்கின்றன.

சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் பௌத்த நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்ட வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இரண்டு நாடுகளிலும் இன ரீதியிலான பதற்றம் அதிகம் காணப்படுகிறது.

துருக்கியினைப் பொறுத்தவரையில் இதுவரை தீர்வுகாணப்படாத குர்திஸ் மக்களின் பிரச்சினை நிலவுகிறது. இலங்கைத் தீவில் நாட்டினது சிறுபான்மையினரான தமிழர்கள் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதங்களைக் கையிலெடுத்து தங்களது உரிமைகளைக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளமைப்பு 2009ம் ஆண்டு இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் நாட்டினது அனைத்துப் பிரச்சினைளும் இன்னமும் தீர்ந்ததாக இல்லை. இது துருக்கியின் நிலைமையுடன் ஒத்ததாகவே தெரிகிறது.

தேயிலை உற்பதியிலும் இரண்டு நாடுகளுக்கும் பெரும் ஒற்றுமை காணப்படுகிறது. சிறிலங்கா தேயிலை உற்பதியில் உலகில் நான்காவது இடத்தில் இருக்கும் அதேநேரம் துருக்கி ஐந்தவது இடத்தில் இருக்கிறது.

ஆனால் இன்றைய பிரச்சினை யாதெனில் பங்கரவாதத்தினைப் பற்றியதோ அன்றி தேயிலையினைப் பற்றியதோ அன்று. இது அரசியலமைப்புச் சீர்த்திருத்தத்தினைப் பற்றியது.

கடந்த 17 ஆண்டுகளாக சிறிலங்கா அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிப் பேசி வருகிறது. துருக்கியில் இருப்பதைப் போலவே, சிறிலங்காவின் இன்றைய அரசியலமைப்பு மோசமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இரண்டு நாடுகளையும் பொறுத்தவரையில் புதியதொரு அரசியலமைப்பினை ஏற்படுத்துவது தொடர்பில் அனைவரும் கருத்தொருமிப்பது அவசியமானது.

துருக்கியினைப் பொறுத்தவரையில் குடியரசு அதிபர் ஆட்சிமுறையினை உள்ளடக்கிய அரசியலமைப்பு உருவாகவேண்டும் என்கிறார்கள். சிறிலங்காவோ தற்போதிருக்கும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட அதிபர் முறையினை விட்டெறிய வேண்டும் என்கிறார்கள்.

சிறிலங்காவினது அரசியலமைப்பு வல்லுநர் றொகான் எதிரிசிங்கவினை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் கடந்த ஆண்டு இதுவிடயம் தொடர்பில் அவர் ஆற்றிய உரை கிடைக்கப்பெற்றிருக்கிறது.

இந்த உரையின் முழு வடிவத்தினை நீங்கள் www.groundviews.org. என்ற இணையத்தில் பார்வையிடலாம். அந்த உரையின் பொருத்தமான பகுதியை இங்கு தருகிறோம்.

"சிறிலங்கா தந்திருக்கும் அனுபவம் யாதெனில், நாட்டினது சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில், குடியரசு அதிபர் தேர்தல்களின்போதும் அதற்கான பரப்புரைகள் இடம்பெறும் போதும் மாத்திரம்தான் இவர்களிடத்தில் அதிகாரங்கள் இருக்கின்றன. சிறுபான்மையினர் என்று மாத்திரமில்லாமல் நாட்டினது அனைத்துத் தரப்பினரையும் பொறுத்தவரையில் நாட்டினது குடியரசு அதிபரினைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அவர் மீது செல்வாக்குச் செலுத்தும் அல்லது தேவையேற்படும் அழுத்தத்தினைக் கொடுப்பது முடியாத காரியமாகவே இருந்து வருகிறது."

"நியமனம் கிடைத்துவிட்டால் நாட்டினது அதிபருக்குப் பரந்துபட்ட அதிகாரங்கள் சென்று சேர்ந்து விடுகிறது. நீதிபதிகள், முப்படை நியமனங்கள், காவல்துறை, ஆணைக்குழுக்கள், தேர்தல் ஆணையாளர்கள், பல்வேறுபட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், பொதுநிர்வாக அலுவலர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் என முதன்மையான பொறுப்பிலுள்ளவர்களை நியமிக்கும் அதிகாரம் அதிபருக்குக் கிடைத்துவிடுகிறது."

"எதிர்க்கட்சிகள் மற்றும் நாட்டினது சட்டத்துறை என்பன தங்களது வாதத்தினை ஏற்றுக்கொள்ளவைக்க முடியாததொரு நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இது அதிகாரவாதத்திற்கு வழிசெய்கிறது."

"தற்போது நடைமுறையில் இருக்கின்ற நிறைவேற்று அதிகாரம்கொண்ட அதிபர் முறையானது அரசியலில் 'தன்முனைப்பு' தன்மையையும், குரூர விளம்பர அரசியல் தலைமையையும் தோற்றம்பெற வழிசெய்கிறது."

"வெனிசுவேலாவின் சவேஸ், பொலிவியாவின் மொறால்ஸ், ஈகுவடோரின் கொர்ரே, பிலிப்பைன்சின் எஸ்ராடா, தாய்லாந்தின் தக்சின் சினவற்றா, இந்தோனேசியாவின் வாகிட் [Chavez in Venezuela, Morales in Bolivia, Correa in Ecuador, Estrada in the Phillipines, Takshin Sinawatra in Thailand, Wahid of Indonesia]

மற்றும் சிறிலங்காவின் ராஜபக்ச ஆகியோரை நினைத்துப்பாருங்கள்.

அதேவேளை, ஒரு கோடன் பிறவுண், ஒரு மன்மோகன்சிங் அல்லது ஒரு கெவின் றுட் ஆகியோர் மதிக்கப்படும் அவர்களது நாட்டில் குடியரசு அதிபர் முறைமை இருந்திருந்தால் இவர்கள் அதிபராவது பெரும்பாலும் சிக்கலாக இருந்திருக்கும்."

http://www.puthinappalakai.com/view.php?20110620104108

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன்சிங்

அரசியல் பொம்மையாக இருப்பவர் எப்படி உதாரணமாவார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.