Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோர் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை! மக்கள் ஏமாற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோர் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை! மக்கள் ஏமாற்றம்!

Published on June 21, 2011

தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மற்றும் காணாமற்போனோரின் பெயர் விவரங்கள் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என அரசு அறிவித்துள்ளபோதிலும், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வவுனியா அலுவலகத்தில் அந்தப் பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை. நாள்தோறும் எதிர்பார்ப்புடன் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர்.

“அரசு அறிவித்தபோதும், வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவுக்குச் செல்லும் உறவினர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.எந்த விவரமும் தம்மிடம் இல்லை என்று கூறி அதிகாரிகள் அவர்களைத் திருப்பி அனுப்பு கின்றனர்” என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமல் போனோரின் பெயர் விவரங்களை நீண்டகால இழு பறியின் பின்னர் கொழும்பு, பூஸா, வவுனியா ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படும் என்று அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பூஸா மற்றும் கொழும்பு பயங்கர வாத விசாரணைப் பிரிவு அலுவலகங்களில் குறித்த பெயர், விவரப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது.வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் அவ்விவரங்கள் இன்னும் காட்சிப் படுத்தப்படவில்லை.

“தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மற்றும் காணாமல் போனவர்களின் பெயர், விவரங்கள் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்னும் காட்சிப்படுத் தப்படவில்லை. நாள்தோறும் எதிர்பார்ப்புகளுடன் அங்கு செல்கின்ற எம்மக்கள் வெறுங்கையுடனும், ஏமாற் றத்துடனும் திரும்புகின்றனர்.இது குறித்து மக்கள் எம்மிடம் முறைப்பாடு செய்கின் றனர்” என்றார் சிவசக்தி ஆனந்தன்.

அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுகளில் கூட்டமைப்பினர் காணாமல்போனோர், கடத்தப்பட்டோரின் விவரங்களை வெளியிடுமாறு அரசுக்கு தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தனர்.

http://www.saritham.com/?p=23266

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.