Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவின் பதிலுக்கு கால எல்லை வேண்டும்: பிரான்ஸ், பிரித்தானியா முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் பதிலுக்கு கால எல்லை வேண்டும்: பிரான்ஸ், பிரித்தானியா முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள்

Tuesday, June 21, 2011, 8:37

உலகம்

சிறீலங்கா விவகாரங்கள் தொடர்பில் ஒரு கால எல்லையை நிர்ணயிக்குமாறு நாம் எமது அரசுகளை கோரவுள்ளோம். இந்த காலஎல்லைக்குள் சிறீலங்கா அரசு சாதகமான பதிலை தரவேண்டும்.

அவ்வாறு தரப்படாதுவிட்டால், நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவித்தது போல அனைத்துலக நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், பிரான்ஸின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் ஆகியோர் த நியூயோர்க் ரைம்ஸ் நாளேட்டில் எழுதிய கருத்துப் பத்தியில் தெரிவித்துள்ளனர்.

அதன் தமிழ் வடிவம் வருமாறு:

ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டு நாங்கள் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தோம். 25 வருடமாக நடைபெற்ற உள்நாட்டுப்போர் முடிவுக்கு வரும் நேரம் அது. வடக்கில் பெருமளவான பொதுமக்களும், விடுதலைப்புலிகளும் சிறிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருந்தனர்.

அங்கு 300,000 மக்கள் இருப்பதாக ஐ.நா கணிப்பிட்டிருந்தது. எமது பயணத்தின் நோக்கம் இலகுவானது. அங்கு தங்கியிருந்த மக்களின் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பானது. போர் நிறுத்தப்பட வேண்டும், மனிதாபிமான மற்றும் உதவி நிறுவனப் பணியாளர்கள் அங்கு அனுப்பப்பட வேண்டும் என்பதே எமது பயணத்தின் நோக்கம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட அகதி முகாம்களுக்கு நாம் பயணம் செய்திருந்தோம். அவர்களின் கதைகள் மிகவும் கோரமானதாகவும், அதிர்ச்சிகரமானதாகவும் இருந்தன.

போரின் போது எழுந்தமானமான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட சிறீலங்கா படையினர், அதன் பின்னர் இளம் பெண்களையும், ஆண்களையும் தடை முகாம்களில் இருந்து பலவந்தாக கைது செய்து கொண்டு சென்றனர். தற்போது அவர்களுடன் தொடர்புகள் அற்றுப்போயுள்ளது.

சிறீலங்காவில் தமிழ் மக்கள் நான்காவது அல்லது ஐந்தாவது தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். வெளிவிவகாரக் கொள்கைகள் எதுவாக இருந்தாலும், அது மனிதப்பேரவலத்தை தடுப்பதாக இருத்தல் வேண்டும்.

சிறீலங்கா அரச தலைவரை சந்தித்தபோது, பொதுமக்களின் அவலங்கள் தொடர்பில் வாதாடியிருந்தோம். விடுதலைப்புலிகளின் உத்திகள் எவையாக இருந்தாலும், பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தோம்.

தமிழ் மக்கள் சமனாக நடத்தப்பட வேண்டும் எனவும், அமைதிய உருவாக்குவதற்கு இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் நாம் தெரிவித்தோம்.

போர் நடைபெற்ற பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தடைகள், அங்கு சாட்சிகள் அற்ற போரை மேற்கொண்டதற்கான ஆதாரம். 2009 ஆம் ஆண்டு மே ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அங்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அங்கு இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கான உறுதிமொழிகளையும் மகிந்தாவிடம் இருந்து பெற்றிருந்தார். ஆனால் தனது உறுதிமொழிகளையே மகிந்தா மீறியதால், 2010 ஆம் ஆண்டு மூன் தனது சொந்த நிபுணர் குழுவை அமைத்தார்.

மூன்று முக்கிய உறுப்பினர்களை கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 31 ஆம் நாள் சமர்ப்பித்திருந்தது.

பல பத்தாயிரம் மக்கள் கொல்லப்பட்டதையும், சிறீலங்கா படையினரின் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களையும் அறிக்கை உறுதிப்படுத்தியது. மூன்று பாதுகாப்பு வலையங்கள் மீதும் சிறீலங்கா அரசு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.

ஐ.நா அலுவலகம், உணவு வினியோக நிலையம், வைத்தியாலைகள் போன்றன மீதும் திட்டமிட்ட முறையில் எறிகணைகள் வீசப்பட்டன. விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்.

இரு தரப்பும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதை ஐ.நா நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அவற்றில் சில போர்க்குற்றங்கள். சிறீலங்காவில் இடம்பெற்ற போர் அனைத்துலக விதிகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்த போராகும். அங்கு எந்த விதிகளும் பின்பற்றப்படவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீன குழு அல்ல, ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் மகிந்தா ஆகியோர் மேற்கொண்ட உடன்பாடுகளுக்கு அமைவானதும் அல்ல. ஐ.நா நிபுணர் குழு அறிக்கை சிறீலங்கா அரசுக்கு பலப்பரீட்சையாக உள்ளது.

தவறுகளை மூடி மறைக்க முடியுமா? அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தி மக்களை தடுத்து வைத்தவாறு, சிறீலங்காவில் இயல்புநிலை ஏற்பட்டுள்ளதாக அனைத்துலக சமூகத்தை ஏமாற்ற முனைகின்றனர். தமிழ் மக்களை மீள்குடியமர்த்துவதையே புறக்கணிக்கும் சிறீலங்கா அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வழங்கும் என எண்ணலாமா? சிறீலங்காவின் இதயத்தில் குடிகொண்டுள்ள பயங்கரமான புற்றுநோய் இவையாகும்.

நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நாவுக்கும், அனைத்துலக சமூகத்திற்கும் ஒரு பரிசோதனையாகும். 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பது என்ற சட்டம் பாதுகாக்கப்படவில்லை என்துடன் அது வன்மையாக மீறப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் விசாரணைகள் குறித்து அவதானிப்புக்களை மேற்கொள்வதற்கு சுயாதீன அனைத்துலக கண்காணிப்பாளர்களை அமைப்பது போன்ற நடவடிக்கைகளை ஐ.நா செயலாளர் நாயகம் மேற்கொள்ள வேண்டும் என நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையும் ஆதரவுகளை வழங்கியுள்ளார்.

ஐ.நா நிபுணர் குழுவின் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்பது முக்கியமானது என்பதே எமது கருத்து. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போல மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட சிறீலங்கா இராணுவத்தளபதிகள், அரச அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அமைதியான மற்றும் இராஜதந்திர வழிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வி கண்டுள்ளதுடன், சட்டத்தை தமது கையில் எடுத்தவர்களுடன் வாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே சிறீலங்கா விவகாரம் பரந்த அளவில் ஆராயப்பட வேண்டும்.

சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அனைத்துலக சமூகத்திற்கு தெரிவுகள் இருத்தல் கூடாது என கோபி ஆனான் தெரிவித்துள்ளார். எனவே சிறீலங்கா விவகாரங்கள் தொடர்பில் ஒரு கால எல்லையை நிர்ணயிக்குமாறு நாம் எமது அரசுகளை கோரவுள்ளோம். இந்த காலஎல்லைக்குள் சிறீலங்கா அரசு சாதகமான பதிலை தரவேண்டும். அவ்வாறு தரப்படாதுவிட்டால், நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவித்தது போல அனைத்துலக நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.

அறிக்கை ஐ.நா செயலாளரை மட்டும் சார்ந்தது அல்ல, அது நடவடிக்கைக்கான அடித்தளம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62912/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சொன்னத இவர்கள் பதவியில் இருந்த போதே கேட்கல..இனியா கேட்க போயினம்? சும்மா காமடி பண்னிட்டு.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.