Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இசைப்பிரியா படுகொலை குறித்து சர்வதேச விசாரணை!

Featured Replies

இசைப்பிரியா படுகொலை குறித்து சர்வதேச விசாரணை! - ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு கோரிக்கை!!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நியூயோர்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இப்போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டமையை உறுதி செய்வதற்கான சான்றாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் அமைந்ர்ள்ளதாக இவ்வமைப்பின் ஆசியப் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் Bob Dietz தெரிவித்துள்ளார்.

இசைப்பிரியா விடுதலைப் புலிகளின் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர் என சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், இவரின் படுகொலை குறித்து சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கைகள் பின்னுக்கு கட்டப்பட்டு ஆடைகள் களைந்திருந்த நிலையில் சிறிலங்கா படைத்தரப்பினரால் பாலியல் வல்லுறலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாக இவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி கடந்த 14ஆம் திகதி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படத்தில் இசைப்பிரியா ஒரு ஆயதம் தரித்த போராளியாக அல்லாது, ஊடகவியலாளராகவே செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்த தனது செய்தி அறிக்கையில் இசைப்பரியா குறித்த முதலாவது காணொளி வெளியிடப்பட்டிருந்தது. இவர் மே 18ஆம் திகதி சிறிலங்கா படைத்தரப்பினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் தாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளதாக முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் ஆய்வுதவியுடன் சனல் 4 தொலைக்காட்சி தனது செய்தி அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் 27 வயதான இசைப்பிரியா என அழைக்கப்படும் சோபாவும் உள்ளடங்குவதாகவும், அதனை அவரது தோழிகளில் ஒருவரும், முன்னாள் போராளியுமான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதையும் சனல் 4 தனது செய்தி அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகம் மற்றும் தொடர்பாடல் பிரிவில் பணியாற்றிய ஒரு முக்கிய போராளி எனவும், இவர் போரிடும் படைப் பிரிவை சார்ந்தவர் அல்ல எனவும் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சி, அதற்கு அவரது நண்பியான கல்பனாவின் கருத்துப் பகிர்வையும் வழங்கியிருந்தது.

இதேவேளை, லெப்ரினன்ட் கேணல் தரத்திலுள்ள இசைப்பிரியா என்பவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையிலான சிறிலங்கா படைத்தரப்பின் 53வது படைப் பிரிவால் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி  கொல்லப்பட்டிருப்பதாகவும், இவர் நேரடிச் சண்டையிலே தம்மால் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா படைத்துறை அமைச்சின் இணையத்தளம் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இசைப்பரியா போரின் போது கொல்லப்பட்டிருந்தால், ஏன் அவரின் கைகள் பின்புறம் கட்டப்படுள்ளது எனக் கேள்வி எழுப்பிய சனல் 4 தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்தியாளர் ஜொனார்தன் மில்லர், நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் அவரது உடலம் காணப்படுவதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இருதய நோய் காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு இணங்க இசைப்பிரியா போரிற்கு செல்வதில்லை எனவும், அவர் விடுதலைப் புலிகளின் ஊடகங்களில் பணியாற்றியவர் எனவும், ஊடகவியலாளரான இவர் நடனம், நாடகம், பாட்டு போன்ற பல்துறை வல்லுனர் எனவும் அவரது நண்பியை ஆதாரம் காட்டி சனல் 4 செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன், இசைப்பிரியா தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசித்த காணொளிக் காட்சியையும் ஒளிபரப்பிய இத்தொலைக்காட்சி, கரும்புலிகள் பற்றிய பாடலுக்கு நடிக்கும் காட்சியையும் தனது செய்தியறிக்கையில் இணைத்திருந்தது.

சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இக்காணொளிப் பதிவுகள் மிக முக்கிய போர்க்குற்ற ஆதாரங்கள் எனவும், இந்தப் போர்க்குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மெட்றிக் சம்பேர்ஸ் எனப்படும் அமைப்பின் போர்க்குற்ற சட்ட வல்லுனர் ஜீலியன் நொவெல்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={54EE48BE-D92B-464C-93F6-FC99DB2CA0EB}

  • தொடங்கியவர்

Mr. Bob Dietz

Asia Program Coordinator Committee to Protect Journalist

www.cpj.org Email: bdietz@cpj.org Phone 212 465 1004 Exit# 140

Subject : Tamil journalist bound, shot, during Sri Lankan civil war

Thank you very much for this story ( http://www.cpj.org/2011/06/tamil-journalist-bound-shot-during-sri-lankan-civi.php) and your continued efforts in making free media a reality in Sri Lanka. In the past decades Sri Lanka journalism has suffered immensely and many journalists have either been killed or fled the country.

Your contribution and perseverance has been instrument for many around the world in making one of the pillars of democracy remains strong.

Sincerely,

-------------

cc: info@cpj.org

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.