Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா வளாகத்தில் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ – அழையாமல் நுழைந்து குழப்பம் விளைவித்தார் சவீந்திர சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 00:39 GMT ] [ கார்வண்ணன் ]

நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகேயுள்ள ஐ.நா தேவாலய நிலையத்தில் 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம் நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன.

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு இந்த ஆவணப்படம் சாட்சியாக உள்ளது என்று, இதனை திரையிட முன்னர் அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்ட முன்னுரையில் கூறப்பட்டிருந்தது.

இந்த ஆவணப்படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் அழைக்கப்படாத விருந்தாளிகளாக நுழைந்த ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும். பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் குழப்பம் விளைவித்துள்ளனர்.

இவர்களுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை அழைப்பு விடுக்காத போதும், போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்களுக்கு சாட்சியாக உள்ள ஒரேஒருவர் என்ற வகையில் கருத்துகளை வெளியிடப் போவதாக கூறி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இந்தக் கூட்டத்தைக் குழப்ப முயன்றார்.

சனல் 4 தயாரித்த இந்த ஆவணப்படம் போலியானது என்றும் இது சிறிலங்காவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் காட்டுப்பகுதி ஒன்றில் புலிகளின் நிலைகள் மீது விமானங்கள் குண்டு வீசும்போது பிடிக்கப்பட்டு சிறிலங்கா விமானப்படையினால் வெளியிடப்பட்ட காணொலிப்பதிவு ஒன்றை, பொதுமக்கள் மீது குண்டு வீசப்படுவது போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பொய்யான தகவல்களின் மூலம் அனைத்துலக சமூகத்தை தவறாக வழிநடத்த அனைத்துலக உதவி நிறுவனங்கள் முற்படுவதாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.

அழையா விருந்தாளியாக நுழைந்த சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் நிகழ்ச்சிநிரலுக்கு அப்பால் இந்த நிகழ்வில் பரப்புரைகளைச் செய்தது இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளை வெறுப்படைய வைத்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.com/view.php?20110623104126

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், நாகரிக மனித வேடம் தாங்கியிருக்கும் அசல் காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், வெகுமதிகளையும் மதுவகைகளையும் பெண்களையும் வழங்கி சர்வதேச பிரதிநிகளை மடக்கி சர்வதேசத்தை ஏமாற்றும் ஈனர்கள், ......, ……

வட இந்தியர், அவன் வால்கள் = ஜனநாயக வேடம் தாங்கியிருக்கும் அசல் பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், பொய்யர், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், போர்க் குற்றவாளிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ……, ஹிந்தி வெறியர்கள் - வந்தேறு குடிகள், ஊழல் பேர்வழிகள், வெகுமதிகளையும் மதுவகைகளையும் பெண்களையும் பெற்று மனிதப் படுகொலைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குபவர்கள், ....., ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாய்கள் அப்படித்தான் செய்யும் .

பரவாயில்லை இவர்களின் குழப்பங்களே அவர்களுக்கு எதிரானவை என்று அவர்களுக்குத் தெரிந்திருக்காது.

கொஹன்னா உட்பட்ட பதினைத்து பேர் பிரசன்னமாகி இருந்திருக்கின்றார்கள்.

உண்மைக்கு முன்னால் பொய் உரைக்க மகிந்த கூட்டத்தால் பணிக்கப்பட்டு இவர்கள் மனச்சாட்சியை விட்டு பொய்கள் கூறியுள்ளனர். இப்படி அப்பட்டமான பொய்கள் கூறுவதன் மூலம் மேலும் தம்மை உலகத்தின் கண்களுக்கு முன்னால் தம்மையே இழிவாக்கி கொண்டுள்ளனர்.

இவர்களுக்குள் பிளவுகள் வரும் காலம் விரைவில் வரும்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்முறைகள் நடந்திருப்பதை பாலித கொஹண ஏற்றுக்கொண்டுள்ளார்: சர்வதேச மன்னிப்புச்சபை ஐ.நா.தலைமை அதிகாரி

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என்று பாலித கொஹண ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை ஐ.நா.தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் ஐநாவுக்கான பணியகத்தின் தலைமை அதிகாரி சர்வதேச மன்னிப்பு சபையின் இணையத் தளத்தில் எழுதியுள்ள கட்டுரையொன்றிலேயே மேற்கண்ட விடயம் குறித்துப் பிரஸ்தாபித்துள்ளார்.

இலங்கையின் கொலைக்களம் காணொளி திரையிடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, காணொளியைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என பாலித கொஹண ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததார்.

இலங்கையின் கொலைக்களம்' என்ற சனல்-4 தொலைக்காட்சியின் விபரணப்படத்தினை நியூயோர்க்கில் அமைந்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஐ.நா பணியகத்தில்

திரையிடுவதற்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் அங்கு அதனைப் பார்ப்பதற்காகக் கூடியவர்களது அளவுக்கு அதிகமான எண்ணிக்கைதான் எங்களுக்குக் கவலையினைத் தந்தது.

மன்னிப்புச்சபையின் நியூயோர்க் செயலகத்தில் இந்த ஆவணப்படத்தினைப் பார்ப்பதற்காக திரண்டிருந்த பெருந்திரளான பார்வையாளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இவ்வளவு காத்திரமான விடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கவில்லை.

2009ம் ஆண்டு சிறிலங்காவினது இறுதிப் போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் பிரித்தானியாவில் சணல் -4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இந்த ஆவணப்படம் பின்னர் அதனது இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருந்தது.

கலாநிதி பாலித கோகன்ன மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையிலான 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இந்த ஆவணப்படத்தினை பார்ப்பதற்காக வந்திருந்தனர்.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வாவின் படமும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சரணடைவதற்கு வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சுட்டுக்கொலைசெய்தாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட இந்த ஆவணப்படம் திரையடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்தக் ஆவணப்படத்தினைப் பார்க்கும் போது கருத்திலெடுக்கக்கூடிய குறித்த சில வன்முறைகள் இடம்பெற்றிருக்க்கூடும் என பாலித கோகன்ன ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார் என்றும் அந்த அதிகாரி தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://news.lankasri.com/view.php?22IIBd302bjQK4e34Gprcb0r92EddeS292bcb7pG3e4dWQj302cLLw42

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.