Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா-சிறிலங்கா: கயிறு இழுவைப் போட்டியில் வெல்வது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 12:44 GMT ] [ தி.வண்ணமதி ]

தற்போதைய நிலையில் அதிபர் ராஜபக்சவே இக்கட்டானதொரு நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிவதா அல்லது செல்வாக்குமிக்க உள்ளூர் வர்த்தகர்களது நிலைப்பாட்டுக்குத் துணைபோவதா என்ற குழப்பமான நிலையில் அவர் இருக்கிறார். மகிந்த அரசாங்கத்திற்கு நிதி ரீதியாகவும் இதர வழிவகைகளும் துணையாக இருப்பது இந்த வர்த்தக சமூகத்தினர்தான்.

இவ்வாறு மத்திய கிழக்கை தளமாகக் கொண்ட The Saudi Gazette என்னும் ஊடகத்தில் Feizal Samath எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டினை [indo-Lanka Comprehensive Economic Partnership Agreement - CEPA] எதிர்த்து சிறிலங்காவினது வர்த்தக சமூகத்தினர் வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை நடாத்த, குறித்த இந்த உடன்பாட்டினை தொடர்ந்தும் முன்னெடுப்பதிலிருந்து சிறிலங்கா பின்வாங்கி கிட்டத்தட்ட ஓராண்டாகிவிட்டது.

சிறிலங்காவினது பொருளாதார நலன்களுக்குப் பாதகமாக அமையும் எத்தகைய உடன்பாட்டிலும் நான் ஈடுபடப்போவதில்லை என அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்த பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தினைத் தற்காலிகமாகக் கைவிட்டிருந்தனர்.

குறித்த இந்தப் பொருளாதார உடன்பாடானது உடனடியாகவே எட்டப்படுவதோடு விரைந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என இந்தியா கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்துவரும் நிலையில் மீண்டும் பிரச்சினை தோன்றியுள்ளது.

தற்போதைய நிலையில் அதிபர் ராஜபக்சவே இக்கட்டானதொரு நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிவதா அல்லது செல்வாக்குமிக்க உள்ளூர் வர்த்தகர்களது நிலைப்பாட்டுக்குத் துணைபோவதா என்ற குழப்பமான நிலையில் அவர் இருக்கிறார். மகிந்த அரசாங்கத்திற்கு நிதி ரீதியாகவும் இதர வழிவகைகளும் துணையாக இருப்பது இந்த வர்த்தக சமூகத்தினர்தான்.

பரந்துபட்ட பொருளாதார உடன்பாடானது இந்திய உற்பத்திப்பொருட்கள் குறைந்த விலையில் சிறிலங்காவினது சந்தைகளுக்குத் தங்குதடையின்றித் திறந்துவிடப்படுவதற்கு வழிசெய்கிறது என்றும் ஏன் தொழிலாளர்கள் கூட குறைந்த ஊதியத்தில் அங்கிருந்து தருவிக்கப்படுவதற்கு இடமளிக்கிறது என்றும் வாதிடும் சிறிலங்காவினது வர்த்தகர்கள் இதன் விளைவாக சிறிலங்காவினது உள்ளூர் தொழில்துறை மாத்திரமின்றி தொழில்சந்தையும் பெரும் பின்னடைவினைச் சந்திக்கும் என்கிறார்கள்.

தற்போது நடைமுறையிலிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது [indo-Lanka Free Trade Agreement - FTA] இறக்குமதிசெய்யப்படும் இந்திய உற்பத்திப்பொருட்களின் அளவு தொடர்பான வரையறையினைக் கொண்டிருக்கிறது என்றும் பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டின் பிரகாரம் வங்கிச்சேவைகள் உள்ளிட்ட தொழில்சார் அம்சங்களும் இந்தியாவிலிருந்து தங்குதடையின்றித் தருவிக்கப்படுவதற்கு வழிசெய்கிறது என்றும் இந்த உடன்படிக்கைக்கு எதிரான போராட்டத்தினை முன்னின்று நடாத்தும் செல்வாக்குமிக்க உள்ளூர் வர்த்தகரான சமந்த குமாரசிங்க கூறுகிறார்.

இந்தியாவின் துறைசார் வல்லுநர்கள் சிறிலங்காவில் பணியாற்றுவதற்கு வழிசெய்கிறது. "குறிப்பிட்ட இந்த உடன்பாடு கைச்சாத்திடப்படுமெனில் இந்தியாவிலுள்ள சவரத் தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் சிறிலங்காவிற்குக் குடிபெயர்ந்து முடிதிருத்தும் நிலையம் ஒன்றைத் திறக்கமுடியும்" என்கிறார் என இந்த வர்த்தகர் கடந்த மேயில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை 1998ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டிருந்தது.

பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையானது நாட்டினது வர்த்தகத்திலும் சேவைகளிலும் சிறிலங்காவிற்கு இருக்கும் கட்டுப்பாட்டினை இல்லாது செய்துவிடும். அத்துடன் இந்த உடன்பாடு இந்திய வர்த்தகர்களுக்கும் துறைசார் வல்லுநர்களுக்கும்தான் அதிக நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கப்போகிறது என குமாரசிங்க கூறுகிறார்.

எவ்வாறிருப்பினும் சிறிலங்காவினது உள்ளூர் தொழில் துறையாளர்கள் சோம்பல் பிடித்தவர்கள் என்றும் தொழிலில் போட்டிக்கோ அன்றி தங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான உற்பத்திகளை வழங்குவதற்கோ இவர்கள் தயாராக இல்லை என்றும் சிறிலங்காவினது மூத்த பத்திரிகையாளர் குசல பெரேரா கூறுகிறார்.

"மூன்றாம் தரப் பொருட்களையே உற்பத்தி செய்யும் இவர்கள் போட்டிக்கு அஞ்சுகிறார்கள். போட்டியென்று வந்தால்தான் நுகர்வோருக்கு தரமான உற்பத்திகள் கிடைக்கும்" என்கிறார் இவர். இந்த வர்த்தக சமூகம்தான் அரசியல் ரீதியிலும் நிதி ரீதியாகவும் அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து நிற்பதால் அவர்களைப் பகைப்பதற்கும் இன்றைய அரசாங்கம் விரும்பவில்லை.

பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டில் விரைவாகக் கைச்சாத்திடுவது மற்றும் அதனை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அண்மைய வாரங்களில் கொழும்பிலும் வெளிநாட்டிலும் சிறிலங்காவிற்கும் இந்தியா அதிகாரிகளுக்குமிடையிலான தொடரான அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றன.

அரசியல் ரீதியில் நோக்குமிடத்து நாட்டினது சிறுபான்மைத் தமிழர்களுக்குரிய அதிகாரங்களை வழங்கும் வகையில் மேலுமதிக அரசியல் விட்டுக்கொடுப்பினைச் சிறிலங்கா மேற்கொள்ள வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

இது கொழும்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருந்தது. அத்துடன் பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை விரைந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் வேகமாக வளர்ந்தும் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் தொடர்பாக இந்தியா அதிக கரிசனையினைக் கொண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சிறிலங்காவில் இந்தியா வகிக்கும் பங்கு எதுவோ அதனையொத்த அல்லது அதற்கும் மேலான பங்கினை வகிப்பதற்கே சீனா வரும்புகிறது. சிறிலங்காவிற்கு அதிகளவிலான வர்த்தக ரீதியிலான கடன் வழங்கும் நாடு சீனா தான். அத்துடன் வீதிகள், துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் போன்ற நாட்டினது உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளிலும் சீனா சிறிலங்காவிற்குத் துணைநிற்கிறது.

இந்த நிலையில் குறிப்பாக நாட்டினது 30 ஆண்டுகாலப் போர் முடிவுக்கு வந்துவிட்ட இந்த வேளையில் சிறிலங்காவினுள் தனது பொருளாதார ரீதியிலான நுழைவினை விரிவாக்கும் வகையில், இந்தியா சிறிலங்காவின் மீது தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்துவருகிறது.

சிறிலங்காவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துவிட்டது என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்றிருக்கும் நிலையில் பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்துவது மகிந்தவின் தலையீட்டியினை அதிகரித்திருக்கிறது.

பிரேரிக்கப்பட்டிருக்கும் ஒய்வூதியச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், தமக்கான ஊதியத்தினை அதிகரிக்கவேண்டும் என்ற பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டம், பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்கவேண்டும் என்ற பேருந்து நிறுவனங்களின் கோரிக்கை உள்ளிட்ட இதர சம்பவங்களின் ஊடாக வாழ்க்கைச் செலவு உயர்வு எவ்வாறுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளமுடியும்.

மக்கள் மத்தியில் அதிபர் ராஜபக்சவிற்கான செல்வாக்கு இன்னமும் குறையாமல் இருந்தாலும் அவரது அரசாங்கத்திற்கான மக்கள் செல்வாக்கு அருகி வருகிறது என்கிறார் அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலன்.

கடந்த மார்ச்சில் இடம்பெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தல்களில் அரசாங்கம் வெற்றியீட்டியிருக்கின்றபோதிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு விழுந்த வாக்கு வீதம் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது அதிகரித்திருக்கிறது.

"எந்தவொரு முயற்சியினையும் எடுக்காமலேயே ஐ.தே.க இந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறது" என்கிறார் அவர். கடந்த பல ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியில் தலைமைத்துவம் தொடர்பான உள்ளகப் பிணக்குகள் வலுப்பெற்றிருக்கின்றன.

பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடானது உள்ளூர் பொருளாதாரத்தில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கே வழிசெய்யும் என்பதால் சிறிலங்காவினது பொருளாதாரத்திற்கே பாதகமானது என கொழும்பு பல்கலைக்கழகத்தினது அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுமக்கள் கொள்கைத் திணைக்களத்தின் தலைவராகச் செயற்படும் பேராசிரியர் கீதபொன்கலன் கூறுகிறார்.

'அதிக வளர்ச்சிபெற்ற இந்திய நிறுவனங்கள் மற்றும் சேவைகளுடன் உள்ளூர் நிறுவனங்கள் போட்டியிடுவது கடினமானதாகவே இருக்கும். உள்ளூர் வர்த்தகர்கள் இந்த உடன்படிக்கையினை எதிர்ப்பதன் அடிப்படை' என்கிறார் பொன்கலன். தவிர குறித்த இந்த உடன்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கமும் விரும்பவில்லை.

"அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கூட்டுக்கட்சிகளும் இந்த உடன்பாட்டினை எதிர்க்கின்றன. சிறிலங்கா மீது இந்தியா செல்வாக்குச் செலுத்துவதை இந்தக் கட்சிகளிற் சில விரும்பவில்லை. பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பான தனது கரிசனையினை இந்தியாவிற்கு வெளிப்படுத்துவதற்கு கொழும்பு வேறுபட்ட வழிகளைப் பயன்படுத்துவதாக நான் கருதுகிறேன்" என்கிறார் ஆய்வாளர் பொன்கலன்.

அரியதொரு நிகழ்வாக கடந்த வாரம் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் குறித்த இந்த உடன்பாட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்று திரண்டிருந்தன.

பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு எதிரான வர்த்தகர் குழு என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டமொன்றில் ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் திஸ்ச அத்தநாயக்கவும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தேசியவாதக் கட்சிகளின் அரசயல்வாதிகளும் ஒன்றாக இணைந்து குறித்த இந்த உடன்படிக்கைக்கு எதிரான பொதுத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்திருந்தனர்.

குறித்த இந்த உடன்பாட்டுன் சிறிலங்கா அரசாங்கம் அரசியல் விளையாட்டுக் காட்டுகிறது என அரசியல் அவதானிப்பாளர் குசல பெரேரா கூறுகிறார்.

"உள்ளூர் வர்த்தகர்களை எதிர்ப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. இதுவொரு குறுகிய பார்வையுடன்கூடிய சிந்தனையே. முன்மொழியப்பட்டிருக்கும் இந்த உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறிலங்காவிற்குத்தான் அதிக நன்மைகள் கிடைக்கும்" என்கிறார் குசல பெரேரா.

உதாரணமாக, வெளிநாடுகளிலிருந்து மருத்துவர்கள் சிறிலங்காவிற்கு வந்து பணிசெய்வதற்கு அனுமதிக்கப்படுமெனில் மருத்துவ ஆலோசனைக்காக அதிக பணத்தினை வாங்கும் மருத்துவர்கள் தங்களது சேவையினை மேம்பபடுத்தவேண்டிய தேவை எழும் என்கிறார் இவர்.

"தாங்கள் மக்களுக்குச் சிறந்த சேவையினை ஆற்றுகிறார்களெனில் இங்குள்ள மருத்துவர்களோ அல்லது இதர துறைசார் வல்லுநர்களோ கவலைகொள்ளுவதற்கான தேவை எதுவுமில்லை. தவிர உள்ளூர் துறைசார் வல்லுநர்களுக்கு நாட்டிலுள்ள மொழிகள் பரிச்சயம் என்பதால் இங்கு வெளிநாட்டு மருத்துவர்களைவிட இவர்களுக்குததான் அதிக நன்மைகள் கிடைக்கிறன. இவ்வாறிருக்க இந்த மருத்துவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள்?" என குசல கேள்வி எழுப்புகிறார்.

சிறிலங்காவிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளுவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பினை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தியப் பிரதமரின் இத்தகைய பயணம் நிச்சயமாக அளவில் சிறிய இலங்கைத்தீவு மீது உத்தேச உடன்படிக்கையினை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என அழுத்தம் அதிகரிப்பதற்கு வழிசெய்யும்.

குறித்த இந்தப் பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையினை விரைவதற்கு நீண்ட காலங்கள் எடுத்திருந்தது. அத்துடன் இலங்கைத் தீவு மீதான இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் அதிகரித்துச்செல்வதைக் காட்டும் ஒரு சம்பவமாகவும் இந்த உடன்பாடு அமைகிறது.

http://www.puthinappalakai.com/view.php?20110623104131

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.