Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் 2 நாள்களில் விடுதலை: இலங்கை உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் 2 நாள்களில் விடுதலை: இலங்கை உறுதி

First Published : 25 Jun 2011 04:56:33 AM IST

சென்னை, ஜூன் 24: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை இரண்டு நாள்களில் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் இவ்வாறு தரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு வெளியிட்ட தகவல்:

தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த 20-ம் தேதி பிற்பகல் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதனால், 5 மீன்பிடி படகுகளைக் கைப்பற்றி, 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அந்த மீனவர்கள் தலைமன்னார் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தப் பிரச்னை குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். அதில், கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இருந்தார்.

மேலும், மத்திய அரசிடம் இருந்து இதுகுறித்து தொடர் நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளரை முதல்வர் அறிவுறுத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்பட மத்திய அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட தலைமைச் செயலாளர், மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தனார்.

இதன் அடிப்படையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் இன்னும் இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது என தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/edition/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.