Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வானில் ஒரு யுகப்புரட்சி

Featured Replies

Jun 26, 2011

பிரான்சை மையமாகக் கொண்டியங்கும் ஐரோப்பிய வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையம் [European Aeronautic Defence and Space Company (EADS)] வான் வழித் தட வரலாற்றில் ஒரு பெரும் புரட்சிக்குத் தயாராகியுள்ளது.

ஒரு விமானம் மணிக்கு 5000 கிவோமீற்றர் வேகத்தில் பறந்து 0%மான எரிபொருள் எச்சத்தை வான்வெளியில் கசிய விடுமாயின் அதுவே இன்றைய ஐரோப்பிய சூழல் பாதுகாப்பு மையத்தினதும் வான் போக்குவரத்துத் துறையினரும் கண்டு வரும் மாபெரும் கனவாகும்.

eads6.th.jpg

இந்தக் கனவிற்கு EADS ஒரு முழுமையான வடிவம் கொடுத்துள்ளனர். கனவு மெய்ப்பட்வேண்டும் என்ற பாரதி வாக்கு மீண்டும் பிரான்சில் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இதுவரை காலமாக அதியுச்ச வேகச்சாதனை படைத்த Supersonic Concorde விமானம் தனது சேவையை முற்றுமுழுதாக நிறுத்தியிருக்கும் நிலையில் Hypersonic விமானம் உருவாக்கும் நடவடிக்கையின் முக்கிய கட்டத்தைத் தாண்டியுள்ளனர்.

இந்த விமானம் Mach4 முதல் Mach5 வேகத்தில் அதாவது ஒலியின் நான்கு மடங்கு வேகத்தில் மணிக்கு 4800 முதல் 6000 கிலோமீற்றர்கள் பறக்கக்கூடியது. Concorde விமானம் Mach2.2 (2700 km/h) வேகத்தைத் தாண்டியதில்லை.

Hypersonic விமானம் Paris Tokyo தூரத்தை வெறும் இரண்டரை மணித்தியாலங்களுக்குள் கடக்கக்கூடியது. இந்தத் தூரம் தற்போதைய அதிவேகப்ப பயணத்தில் பண்ணிரண்டரை மணிநேரங்களில் மட்டுமே செல்லக்கூடியதாகவுள்ளது. இந்த மாதிரி வடிவம் நாளை Le Bourget விமானக் கண்காட்சியில் பிரான்சின் அதிபர் நிக்கோலா சார்க்கோசி அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதன் மாதிரி வடிவ இலக்கம் ZEHST, pour Zero Emission HyperSonic Transportation என வழங்கப்பட்டுள்ளது.

EADS மற்றும் பிரயாணிகள் போக்குவரத்து நிர்வாகம் (direction générale de l’aviation civile (DGAC), மற்றும் ORENA ஆகியோரின் கூட்டு முயற்சியில் 60 முதல் 100 பிரயாணிகள் பயணிக்கக் கூடியதான விமானங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு ஜப்பானிய வான்வெளி தொழில்நுட்ப மையமும் தனது பங்களிப்பை வழங்குகின்றது.

இது பொதுமக்களின் சாதாரண பாவனைக்குப் பரவலாக 2050ஆம் ஆண்டில் பாவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது உயிரியல் வாயு (biocarburants) மற்றும் Hydrogène, Oxygène சக்திகள் மூலம் இயங்கும் சக்தி பிறப்பாக்கிகள் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்படுகின்றது.

சாதாரண பயணிகள் விமானத்தினால் எட்ட முடியாத உயரமான கடல் மட்டத்திலிருந்து 32கிலோ மீற்றர் உயரத்தை இவ்விமானம் எட்டுமெனத் தெரிகின்றது. பயணிகள் விமானம் 11 கிலோமீற்றர் உயரத்தைத் தாண்டியதில்லை. 32கிலோ மீற்றர் உயரத்தில்ப பூமியின் வனிமண்டலத்திற்கு மேலேயே பறப்பதால் இந்த விமானம் சிறிதளவு எச்சத்தை வெளியேற்றினால் கூட அது எமது வளிமண்டலத்தை மாசுபடுத்தப் போவதில்லையென EADS தொழில்நுட்பப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விமானத் தயாரிப்பு முழுமூச்சுடன் இயங்குமானால் 2020ல் பரீட்சார்த்த விமானம் தயாரிக்கப்பட்டு 2030ல் முழுமையான சேவைக்கு வழங்கமுடியும் எனத் தெரிவித்துள்ளனர். இவ்விமானத்தின் பயன்பாடு முதலில் பெரும் தொழிலதிபர்களையும் முக்கிய பிரமுகர்கiயுமே சென்றடையும். ஆரம்பத்தில் இதன் பிரயாணச் செலவுகள் 6000 முதல் 8000 யூரோக்கள் வரை இருக்குமாதலால் சாதாரணப் பயணிகளை முதலில் சென்றடைவது கடினமாக இருக்கும்.

eads5.th.jpg

eads4.th.jpg

URL=http://img843.imageshack.us/i/eads2.jpg/]eads2.th.jpg

http://www.pathivu.com/news/17120/57/.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.