Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதிநிதிகள் யாரென்பதை தீர்மானிப்பது தமிழ் மக்கள் மாத்திரமே

Featured Replies

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் யாரென்பதை தீர்மானிப்பது தமிழ் மக்கள் மாத்திரமே' .

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக எந்தத் தமிழ்க் கட்சியையும் அரசாங்கம் ஏற்காததாலேயே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு முன்வந்திருப்பதாக பெற்றோலிய வளங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்த கருத்தை சிறிரெலோ கட்சி வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

இது தொடர்பில் கட்சியினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கை வருமாறு;

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் யார் என்பதனைத் தீர்மானிப்பது தமிழ் மக்களே தவிர பேரினவாத சக்திகளோ அல்லது அவர்களோடு சேர்ந்தியங்கும் அடிவருடிகளோ அல்ல என்பதனை அமைச்சர் அவர்களும் அரசாங்கமும் புரிந்து சிந்தித்து செயற்பட வேண்டும்.

கடந்த 3 தசாப்த காலமாக எமது மண்ணில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தினால் எமது சமூகமானது கல்வி, கலை, கலாசாரம் போன்றவற்றினை இழந்து நாதியற்று நடுவீதியில் நிற்கின்ற இந்தத் தருணத்தில் எம்மக்களிற்கு இருக்கின்ற ஒரே ஒரு உரிமை வாக்களித்து தமது பிரதிநிதிகள் யார் என்பதனைத் தெரிவு செய்வதாகும். ஆனால் அமைச்சர் தெரிவித்திருக்கின்ற கருத்தின் மூலம் அந்த உரிமையும் பறிக்கப்பட்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

மக்கள் வாக்களித்து பல கட்சிகளில் பலரைத் தெரிவு செய்திருக்கலாம். ஆனால் மக்கள் தமது வாக்குகளை அதிகப்படியாக எந்தக் கட்சிக்கு வாக்களித்து அதிக பிரதிநிதிகளைத் தெரிவு செய்திருக்கின்றார்களோ அவர்களே அம்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பது உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தின் ஒருமித்த கருத்தாகும்.

இது இவ்வாறு இருக்கையில் அரசாங்கமானது அரசியல் தீர்வை தயாரிப்பதற்கு திடீரென தெரிவுக்குழுவை அமைக்க முற்படுகின்ற செயற்பாட்டின் பின்னணியில் அரசோடு சேர்ந்தியங்கும் சுயலாப அரசியல்வாதிகளின் கருத்தும் உள்வாங்கப்பட்டிருக்கலாம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மக்கள் இவ்வாறு விசனமடைவதனால் ஆளும்கட்சி மீது எம்மக்கள் வைத்திருக்கும் மதிப்பு குறைவடைவதுடன் இடம்பெறவுள்ள தேர்தலில் கிடைக்கவிருக்கின்ற வாக்குகளையும் அரசு இழக்க வாய்ப்பிருக்கிறது என்பதனையும் நாம் அரசிற்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறு கருத்துகளை தெரிவிப்பதனை விடுத்து தமிழ் மக்களிற்கு உடனடியாகத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வடக்கு, கிழக்கில் உள்ள சகல தமிழ்க் கட்சிகளினதும் பிரநிதிகளை உள்ளடக்கிய ஒருகுழுவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் தமிழ் மக்களிற்கான தீர்வினை தமிழ்த் தலைமைகளிடம் இருந்தே அறிந்து கொள்ள முடியும் என்பதனையும் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முனைகின்ற அனைத்துத் தரப்பினரிற்கும் இந்தத் தருணத்தில் தமிழ் மக்களின் நலன் பேணும் கட்சி என்ற வகையில் சிறிரெலோ கட்சி எடுத்துக் கூறவிரும்புகின்றது.

http://www.thinakkural.com/news/all-news/jaffna/6931-2011-07-02-01-19-32.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.