Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி பல்கலைக்கழக மாணவர் ஒதுக்கீட்டில் வெட்டு, மீண்டும் கல்விக்கு வேட்டு

Featured Replies

“ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எங்கிருந்துஆரம்பித்ததோ, அதற்கு எவைகள் காரணிகளாக இருந்தனவோ அந்த இடத்துக்கும் அந்தக் காரணிகளுக்கும் மீண்டும் தமிழினத்தைக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை சிறிலங்கா சிங்கள அரசு ஆரம்பித்து விட்டது. இதற்கு ஓர் உதாரணமே பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு விழுந்துள்ள அடி” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

.

பல்கலைக்கழகத்துக்குத் தமிழ் மாணவர்கள் பெருவாரியாகத் தெரிவாகிச் செல்வதனைத் தடை செய்யும் நோக்கத்தின் முதல் கட்டமாக வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சிறிலங்கா அரசு இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.இது தொடர்பில் எமது இணையத்துக்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நான் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திலும் தெரிவிக்கவுள்ளேன். இந்த அனுமதி குறைப்பானது இன்று வன்னி,நாளை யாழ்ப்பாணம், மறுதினம் மட்டக்களப்பு என்று தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

.

யுத்தம் காரணமாகப் பாரிய அழிவைச் சந்தித்த வன்னியிலேயே சிறிலங்கா அரசு இந்தப் பாரபட்சத்தை ஆரம்பித்து வைக்கிறதென்றால் ஏனைய தமிழ்ப் பகுதிகள் தொடர்பில் கூறத் தேவை என்றும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி நேற்று ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையினைக் கீழே தருகிறோம்

வவுனியா,மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெவித்துள்ளார்.

இந்தத் தீர்மானம் குறித்த முடிவுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

.

இந்த விடயத்தை வலியுறுத்தி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தமது கல்வியைக் கற்று உரிய புள்ளிகளைப் பெற்றிருந்தும் தகுதியுள்ள மாணவர்களுக்கு இம்முறை பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை

இதனால் அந்த மாணவர்கள் மனவிரக்திக்கும் துயரத்திற்கும் ஆளாகியுள்ளனா. என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவேää இதுவிடயத்தில் உரிய கவனம் செலுத்தி ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழநாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.