Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்டம் காணும் அழகிரி பதவி.

Featured Replies

தி.மு.க.வில் வாரிசுகளுக்கு இது போதாத காலம். கனிமொழி, தயாநிதியை அடுத்து அழகிரியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக உள்ள மு.க.அழகிரி, பிரதமருக்கு தவறான சொத்துக் கணக்கைக் கொடுத்துள்ளார் எனவும், கோயில் நிலத்தை சட்டத்திற்குப் புறம்பாக வாங்கியுள்ளார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்தான் சர்ச்சைகளுக்குக் காரணம்.

தயாநிதி மாறன் 2ஜி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த உடனேயே பிரதமர் மன்மோகன் சிங், தனது அமைச்சரவை சகாக்கள் அனைவ ரும், உடனடியாக தங்கள் மற்றும் குடும்பத்தினருடைய தொழில்கள், முதலீடுகள், சொத்துக்கள், கடன்கள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று கேபினெட் செயலாளர் சந்திரசேகர் மூலமாக அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பினார்.

இதற்கு முன்பாகவே, ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் சொத்துக் கணக்கையும், தொழில் விவரங்களையும் ஆண்டுதோறும், பிரதமரிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனாலும், பிரதமர் மன்மோகன் சிங், மாறன் விவகாரம் ஊடகங்களில் வெளியானதும், இதை வலியுறுத்தினார்.

ஏற்கெனவே உள்ள சுற்றறிக்கையின் படி, அனைத்து அமைச்சர்களும், ஒவ்வொரு ஆண்டும். ஜூன் 30-க்குள் தங்கள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன் படி, மு.க.அழகிரியும் அவரது சொத்துக் கணக்கை சமர்ப்பித்துள்ளார். ஆனால், மார்ச் 2010-ல் தன் குடும்பத்தினர் நடத்தும் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட ஒரு முக்கியமான சொத்தை அதில் மறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சொத்தை இவர்கள் மார்ட்டினிடம் வாங்கியுள்ளனர். இவரும் சர்ச்சைக்குரியவர். அதோடு அறக்கட்டளை ஒன்றுக்குச் சொந்தமான நிலத்தை, வழக்கு நிலுவையில் இ ருக்கும்போதே மார்ட்டின் வாங்கியிருந்ததாலும், இந்தக் குற்றச்சாட்டு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய லாட்டரி அதிபராக இருப்பவர் சான் டியாகோ மார்ட்டின். இவர்மீது தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்கு இருக்கிறது. 2007-ம் ஆண்டு மே 7-ம் தேதி 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சிக்கிம் மற்றும் பூட்டான் மாநில லாட்டரிகளும், மூன்றே முக்கால் லட்ச ரூபாய் பணம் மற்றும், கம்ப்யூட் டர்கள், ஸ்கேனர்கள் உள்ளிட்ட பல்வேறு கருவிகளும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கின் புலனாய்வை சி.பி.சிஐ.டி. மேற்கொண்டது.

ஒரு ரூபாய் மதிப்புள்ள பூட்டான் மாநில லாட்டரியை 200 ரூபாய் வரை விற்றதாகவும், லாட்டரி முடிவுகளை அறிவிப்பதற்காகவே எஸ்.எஸ். மியூசிக் மற்றும் எஸ்.எஸ்.சங்கீத் என்ற இரண்டு தொலைக்காட்சி சேனல்களையும் நடத்தி வந்ததாகவும் மார்ட்டின் மீது குற்றச்சாட்டு சொல்லப்பட்டது.

ஜூன் 2007 அன்று இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மார்ட்டின் மனு செய்த போது, அந்த மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி “தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளின் விற்பனைக்காக மனுதாரர் (மார்ட்டின்) நடத்தும் டி.வி.யில் விளம்பரங்கள் வந்தது என்பதும், குலுக்கல் முடிவுகள் ஒளிபரப்பப் ப ட்டது என்பதையும் மறந்து விடக் கூடாது. மார்ட்டின் மற்றும் அவருடைய கூட்டாளிகள் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது’’ என்று கூறி, அவர்களின் முன் ஜாமீனை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது.

இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீஸின் வழக்கில் சிக்கிய மார்ட்டின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடைக்கண் பார்வை பட்டதும், யாரும் தொட முடியாத இடத்திற்குச் சென்றார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த கருணாநிதியின் கதை வசனத்துடன் உருவான ‘இளைஞன்’ திரைப்படம் மார்ட்டினுடைய 60 கோடி ரூபாய் பணத்தில் புத்துயிர் பெற்றது. இதன்பிறகு மார்ட்டின் கருணாநிதியிடம் மிகவும் நெருக்கமானார். இந்த நெருக்கம், காவல்துறை அதிகாரிகளையே மார்ட்டினைப் பார்த்து அஞ்ச வைத்தது.

செம்மொழி மாநாடு வரவேற்புக் குழுவில் இடம் பெறச் செய்யும் அளவுக்கு மார்ட்டினின் செல்வாக்கு கருணாநிதியிடம் வளர்ந்தது. இந்த நெருக்கத்தை தனது கள்ள லாட்டரி விற்பனைக்கு மார்ட்டின் பயன்படுத்திக் கொண்டார். மத்திய உளவுத்துறையின் ரகசிய ஆவணத்தின்படி, தமிழகத்தில் மட்டும் மார்ட்டினின் ஒரு நாள் லாட்டரி வியாபாரம் 10 கோடி என்று மதிப்பிட்டுள்ளது.

இந்த மார்ட்டினிடம்தான், மு.க.அழகிரியின் மனைவி மற்றும் மகனுக்குச் சொந்தமான ‘தயா சைபர் பார்க்’ என்ற நிறுவனத்தின் பெயரில், மதுரை ஒத்தக்கடையில் 3 ஏக்கர் 95 சென்ட் நிலத்தை வாங்கியிருக்கின்றனர். இந்த நிலம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மிக அருகாமையில் உள்ள உத்தங்குடி என்ற கிராமத்தில் உள்ளது. இந்த 3 ஏக்கர் 95 சென்ட் நிலத்தை மார்ட்டினிடமிருந்து வாங்குவதற்காக 85 லட்சத்து 65 ஆயிரத்து 84 ரூபாய்க்கான காசோலை மதுரை டி.வி.எஸ். நகர் இந்தியன் வங்கி கிளையிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

4 ஏக்கர் நிலம் 85 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கப் பட்டிருந்தாலும், மதுரை ஏரியாவில் விசாரித்த போது, உத்தங்குடி கிராமம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் அரு காமையில் இருப்பதால், ஒரு ஏக்கர் 7 கோடிக்கு விலை போகிறது என்று கூறுகிறார்கள். இந்த இடம் வாங்கிய விஷயத்தை தான் சொத்துக்கணக்கில் தராமல் மறைத்துள் ளார் அழகிரி.

இந்த ‘தயா சைபர் பார்க்’ நிறுவனத்தின் வளர்ச்சியும் அசுர வளர்ச்சியாக உள்ளது. 28 மார்ச் 2007-ல் இந்த நிறுவனம் 2 கோடி ரூபாய் முதலீட்டில், மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மற்றும் அவர் மகன் தயாநிதி அழகிரியை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில், பின்னாளில் மு.க.அழகிரியும் இயக்குநராகச் சேர்கிறார்.

2007-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு, மார்ச் 2009 அன்று உள்ளபடி, வங்கியில் ரொக்கம் 854 கோடி ரூபாயாகவும், ‘மொத்த சொத்துக்கள் 980 கோடி ரூபாயாகவும் வளர்ந்துள்ளது. மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தின் எதிரில், ‘தயா சைபர் பார்க்’ என்ற பெயரில் பல மாடிக் கட்டடம் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மார்ட்டினிடம் இருந்து வாங்கி, சொத்துக்கணக்கில் மறைத்த நிலம் கோயில் நிலம் என்று, அறுபது ஆண்டுகளாக நிலத்தைப் பராமரித்து வரும் உத்தங்குடியைச் சேர்ந்த வி.வி.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியிருக்கிறார். அவரிடம் பேசியபோது, ‘‘இந்த நிலம் உத்தங்குடியில் உள்ள நாகர் ஆலயத்திற்குச் சொந்தமானது. ‘நாகர் பூஜை வகையறா தர்ம டிரஸ்ட்’ இந்த சொத்தை நிர்வகித்து வருகிறது. இந்த டிரஸ்டை நிர்வகித்து வந்த நாகேந்திர ஐயர் 1941-ல் இறந்து போனார்.

அவருக்குப் பிறகு மூத்தமகன் ராஜகோபால் ஐயரும், அவருக்குப் பிறகு இளைய மகன் விஸ்வநாத ஐயரும் நிர்வகித்து வந்தனர். அவருக்கும், அவரது சகோதரர் ராமமூர் த்திக்கும் இந்தக் கோயில் சொத்துக்களை நிர்வகிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் 1978-ல் இந்த சொத்துக்களை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத் துக் கொண்டது. மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, 1995-ல் சொத்துக்கள் மீண்டும் டிரஸ்ட் பராமரிப்புக்கு வந்தன. இந்து அறநிலையத்துறை இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் தவறி விட்டது.

அதன்பிறகு, விஸ்வநாதனின் மகன் குப்புசாமி டிரஸ்டை நிர்வகித்து வந்தார். அவர் தன் விருப்பத்துக்கு டிரஸ்டில் ஆட்களை வைத்துக் கொண்டு, தந்தையின் எதிர்ப்பையும் மீறி கோயில் சொத்துக்களை விற்க முயன்றார். திடீரென்று விஸ்வநாதன் காணாமல் போய்விட்டார். இதையடுத்து, மார்ட்டினுக்கு கோயில் சொத்துக்களை குப்புசாமி விற்று விட்டார்.

கோயில் சொத்துக்களை மார்ட்டின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதை எதிர்த்து 2001-ல் தாசில்தாருக்கு நான் மனு கொடுத்தேன். ஆனாலும் மார்ட்டின் பெயருக்கு தாசில்தார் பட்டா கொடுத்தார். இதை எதிர்த்து டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ. ஆகியோருக்கு அப்பீல் செய்தேன். இதையடுத்து, மார்ட்டின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டது.

2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, மார்ட்டின் பெயருக்கு பட்டா மீண்டும் மாற்றிக் கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அந்த 17 ஏக்கரில் 3.95 ஏக்கரை மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்தார் வாங்கியுள்ளனர். இந்த நிலத்தை மீட்டு கோயிலுக்கு ஒப்படைக்குமாறு தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளேன்’’ என்றார் சுப்பிரமணியன்.

மு.க.அழகிரி மீது புதிதாகக் கிளம்பியிருக்கும் இந்த சர்ச்சை, பாராளுமன்றத்தில் ஆகஸ்ட் 1 அன்று தொடங்க இருக்கும் மழைக்கால கூட்டத் தொடரில் பிரச்னையைக் கி ளப்பும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கெனவே தயாநிதி மாறன் பதவி ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் சூழலில், தி.மு.க.வின் சார்பில் எஞ்சியுள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பதவியை இந்த சர்ச்சை ஆட்டம் காண வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Thanks to kumudam reporter.

To see pictures about this news....please click the below link

http://www.thedipaar.com/news/news.php?id=30472

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.