Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவ்வருடத்திற்குள் சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கை இழுக்கப்படலாம்

Featured Replies

இவ்வருடத்திற்குள் சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கை இழுக்கப்படலாம் : மங்கள

யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக இவ்வருட இறுதிக்குள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை இழுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் பரிகசிப்புக்கிடமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மங்கள சமரவீர எம்.பி. கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த போது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சாசனத்தில் கையெழுத்திடாததன் காரணமாகவே அரசாங்கம் இதுவரை பாதுகாப்பானதாக இருக்கிறது. இதனால் அவருக்கு அரசாங்கம் நன்றியுடையதாக இருக்க வேண்டும் என மங்கள சமரவீர

கூறினார்.

அதேவேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சாசனத்தில் இலங்கை கையெழுத்திடாத போதிலும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் சிபாரிசின் மூலம் அந்நீதிமன்றதிற்கு இலங்கை இழுக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/24324-2011-07-06-13-00-39.html

  • தொடங்கியவர்

சேனல்-4க்கு எதிராக வழக்கு தொடர இலங்கை அரசு தயங்குவது ஏன்?

சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்ட இலங்கைக்கு எதிரான காட்சி பொய்யானது என்பதற்கான ஆதாரம் அரசிடம் இருந்தால் சேனல் 4 -க்கு எதிராக உடன் வழக்குத் தொடர வேண்டும். ஏன் அரசு தயக்கம் காட்டுகிறது என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பினார். அக்குறஸ்ஸவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

சேனல் 4 ல் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சியை இலங்கையர்கள் அனைவரின் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளாகவே நாம் பார்க்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிப்பது அரசின் கடமை. அந்த விடியோ காட்சி பொய்யானது என்பதற்கான ஆதாரம் அரசிடம் இருந்தால் சேனல் 4-க்கு எதிராக அரசு வழக்குத் தாக்கல் செய்யவேண்டும்.

இந்த வீடியோ காட்சி ஒட்டுமொத்த படையினர், மக்கள் மற்றும் இலங்கை அதிபர் ஆகியோரின் நற்பெயரைப் பாதிக்கக்கூடியது. அவ்வாறான வீடியோ காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல், வெறுமனே பேசிக்கொண்டிருப்பதால் பயனில்லை. இது அரசின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது. குற்றச் சிக்கலைத் தீர்க்க அரசு ராஜதந்திர பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும். அதுவும் இடம்பெறவில்லை. ராஜதந்திர செயல்பாட்டில் நம்பிக்கையிழந்த அரசாகவே ராஜபட்சவின் அரசு உள்ளது. ஒரு நாட்டுக்கு சர்வதேச அளவில் பிரச்னை எழும்போது அந்தப் பிரச்னையை ராஜதந்திர நகர்வின் மூலமாகவே தீர்க்க முடியும் என்பதுகூட இந்த அரசுக்கு தெரியவில்லை என்றார்.

http://www.alaikal.com/news/?p=75665

channel 4 க்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்று தான் பிரித்தான்னியா உள்ளிட்ட பெரும்பாலானோர் எதிர் பார்க்கின்றனர்..... வழக்கு தொடர்ந்தால் உண்மையை வெளிக்கொணரும்-இலங்கைக்கு எதிரான விசாரணைப் பொறிமுறையின் ஆரம்பமாகவோ அல்லது ஒரு அங்கமாகவே அது அமையும்...

இந்த விடயத்தில் மோட்டு சிங்களவன் மகிந்தா அவசரப் படமாட்டான்.... ஸ்ரீலங்கா இந்த தவறை கடைசி வரை செய்யாது.... என்றே நினைக்கிறேன்......

  • கருத்துக்கள உறவுகள்

சர்வ தேச நீதி மன்றத்திற்கு சிங்களம் இந்த ஆண்டு முடிவதற்கிடையில் இழுக்கப் பட வேண்டும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.