Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!

Posted by: on Jul 7, 2011

தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம்

அன்பு நிறைந்த தமிழ்ப் பெருமக்களே,

வணக்கம்.

சிங்கள இனவாத அரசினால் 2009 மே 18ல் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை வரலாற்றில் மறக்கமுடியாத பதிவாகிவிட்டது. சோழ மாமன்னனான இராசஇராசன் தஞ்சையில் எழுப்பிய மாபெரும் கற்கோயிலுக்கு அடுத்தபடியாக, ஈழ விடுதலைக்காக முள்ளிவாய்க்கால் படுகொலையில் பலியானவர்களின் நினைவாகவும், தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னத்தை நிறுவும் முயற்சியில் உலகத் தமிழர் பேரமைப்பு ஈடுபட்டுள்ளது.

இவ் வரலாற்றுப் பணியின் சிற்ப வேலையில் நூற்றுக்கும் அதிகமான தமிழகச் சிற்பக் கலைஞர்கள் உழைத்து வருகின்றார்கள். அந்தவகையில் நாம் அனைத்துலக தமிழ் உறவுகளின் அன்பளிப்புக்களையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.

இந்த வரலாற்றுப் பணிக்கு நாம் இதுவரை பகிரங்கமாக உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தபோதும் எமக்கான இணையவங்கிக்கணக்கை (Paypal) நாம் அறிவிக்கவில்லை. இத்திட்டத்துக்கென எமது அனுமதியோ ஒத்துழைப்போ இன்றி ஒரு தமிழ் இணையத்தளம் பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படியான நடவடிக்கைக்கு மக்கள் துணைபோக வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஒழுங்கான முறையில் எம்மால் இணையகணக்கிலக்கம் (Paypal) திறக்கப்பட்டு உலகத்தமிழ் உறவுகளுக்கு முதன் முறையாக தமிழ் தேசிய ஊடகங்களான தென்செய்தி, ஈழமுரசு, புலத்தில், பதிவு, சங்கதி (www.sangathie.com), தமிழ்க்கதிர், ஆகியவற்றின் ஊடாக அறியத்தருகின்றோம்.

இந்த மாபெரும் பணியில் உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு விரும்புகிறது, வேண்டுகிறது.

அன்புள்ள

(பழ. நெடுமாறன்)

தலைவர்

தொடர்புகளுக்கு:

பழ. நெடுமாறன்

தலைவர், உலகத்தமிழர் பேரமைப்பு

58, மூன்றாவது முதன்மைச்சாலை,

ஆழ்வார் திருநகர் விரிவாக்கம்,

சென்னை 600 087

தொலைபேசி: 23775536

தொலைநகலி: 23775537

உலகத்தமிழ் உறவுகளுக்கு:

00 33 661 354 878 (பிரான்சு)

நன்றி

http://youtu.be/uBAqUP2HnMM

http://youtu.be/VbB7VZYDYwI

முழு விபரம் அழுத்துங்கள் http://www.tamilkathir.com/news/4908/58//d,full_article.aspx

Edited by தமிழ் அரசு

... நல்ல முயற்சி ... இப்படி புலத்தில் ஏன் ஒன்றை ... இரு இனப்படுகொலைகளை சித்தரிக்கும் மியூசியங்கள், தூபி போன்றவற்றை ... எம்மால் நிர்மாணிக்க முயலவில்லை/முடியவில்லை? ... இன்றும் யூத அழிவுகளை வெளிக்கொணரும் மியூசியங்கள் உலகம் முழுக்க யூத மக்களால் ஆரம்பிக்கப்பட்டு ... இன்றைவரை இயக்கப்படுவது போல்!!

... தேவையற்ற சிலைகளை எழுப்பி, அவைகளில் பறவைகளின் எச்சங்கள்தான் விழுவது மிச்சம்!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வரலாறு பாதுகாக்கப் பட வேண்டும்! அதில், இரு கருத்துக்கு இடமிருக்க முடியாது!

அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளுக்கும், மாயா இனத்தவரிட்கும் இது தான் வித்தியாசம்!

இரண்டு இனங்களும் அழிந்து கொண்டு போகின்றன!

ஆனால் மாயா இனத்திற்கு, அது இருந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன!

Mayan-Temple.gif

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.