Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலுணவுகளின் பெருக்கம் குடாக்கடலில் பெரும் வீழ்ச்சி றோலர் பாவனையே காரணம் என்கின்றனர் மீனவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலுணவுகளின் பெருக்கம் குடாக்கடலில் பெரும் வீழ்ச்சி றோலர் பாவனையே காரணம் என்கின்றனர் மீனவர்கள்

குடாக்கடலில் கடலுணவுகளின் பெருக்கம் தற்போது குறைவடைந்து வருவதால் குடா நாட்டுச்சந்தைகளில் கடலுணவுகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதாக மீனவர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த சில வாரங்களாகக் குடாநாட்டுச் சந்தையில் கடலுணவுகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளன. குடாக்கடலில் கடலுணவுகளின் பெருக்கம் குறைவடைந்துள்ளமை யால் மீனவர்களின் வலைகளில் அவை சிக்குவதில்லை. விலை அதிகரிப்புக்கு அதுவே காரணம் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய மீனவர்களின் அத்து மீறிய றோலர் மீன்பிடி காரணமாகவே இவ்வாறு குடாக்கடலில் மீன்களின் பெருக்கம் குறைவடைந்துள்ளது. அத்துடன் இங்குள்ள சில மீனவர்களும் இந்த றோலர் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இவற்றால் என்றுமில்லாதவாறு இப்போது மீன்களின் பெருக்கம் அருகி விட்டது என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் காலப் பகுதியில் அதிகளவு மீன்கள் பிடிக்கப் பட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படுவது வழமை. அவற்றின் விலைகளும் குறைவாகவே காணப்படும். ஆயினும் இம்முறை மீன்கள் பிடிபடாமையால் அவற்றின் விலையும் உச்சமாக உள்ளது என மீனவர் சங்கத்தின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த வாரம் கடலுணவுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டமையால் தென்பகுதிக்கான ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.பாசையூர், பண்ணை, குரு நகர்ச் சந்தைகளில் நேற்று மீன் ஒருகிலோ 500 ரூபாவாகவும் பெரிய இறால் கிலோ 600 ரூபா வாகவும், நண்டு கிலோ 500 ரூபாவாகவும் , கணவாய் கிலோ 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் அத்து மீறிய றோலர் மீன்பிடி காரணமாகவே இவ்வாறு குடாக்கடலில் மீன்களின் பெருக்கம் குறைவடைந்துள்ளது.

அதுமட்டுமின்றி தென்னிலங்ககை சிங்களவர்களின் அத்துமீறிய மீன்பிடியும்தான் முக்கிய காரணம்.

மொத்தத்தில் ஈழ தமிழரின் வாழ்வாதாரங்களில்தான் கைவைக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளதுபோல அருகி வரும் மீன்வகைகளுக்கு பிடிக்கப்படும் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம். சில வகை உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு பிடிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடலில் மீண்டும் விட்டுவிடுவார்கள். :D அதனையும் பின்பற்ற வைக்கலாம். :unsure:

இங்கு எங்கள் ஊரில் உள்ள பெரியகுளத்தில் பொழுதுபோக்குக்கு பிடிக்கப்படும் மீன்களுக்கே கட்டுப்பாடுகள் உண்டு. ஒரு படகுக்கு அதிகம் இரண்டு மீன்கள்தான் ஒருநாளைக்குப் பிடிக்கலாம். :unsure:

ஆனால் நாட்டில் இதையெல்லாம் செயற்படுத்துவதற்கு ஒரு செயற்திறனுள்ள, நேர்மையான அரசு வேண்டும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.