Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக்கு வடக்கில் வாக்களிக்க விடாமல் தடுப்பதில் அரசு மும்மரம் – விக்கிரமபாகு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு வடக்கில் வாக்களிக்க விடாமல் தடுப்பதில் அரசு மும்மரம் – விக்கிரமபாகு!

Published on July 12, 2011-1:04 am

வடக்கில் மக்களை அச்சுறுத்தி கூட்டமைப்புக்கு வாக்களிக்க விடாமல் தடுத்து, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் கருணா, டக்ளஸ் ஆகியோரே என்ற மாயையை உருவாக்க அரசு முயற்சிக்கின்றது. பின்னர் இவர்களுடன் பேச்சு நடத்தி அரசுக்குத் தேவையான தீர்வைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதே அரசின் நோக்கம் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தொடர்ந்தும் திட்டமிட்டபடி வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தெற்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இதில் பங்கேற்கும்.

அரசு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக நடைபெற்றுவரும் பேச்சுகளை திசை திருப்பும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அந்தப் பிரதேச மக்களின் நம்பிக்கையை வென்ற கட்சி என்ற அடிப்படையில் கூட்டமைப்புடன் பேசியே அரசியல் தீர்வை அரசு வழங்கவேண்டும் என சர்வதேசம் கூறியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குகளைப் பலவந்தமாகப் பறித்து, கூட்டமைப்பின் அரசியல் செல்வாக்கைச் சீர்குலைத்து, அவர்கள் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் என்பதை எடுத்துக் காட்டுவதே அரசின் நோக்கமாக உள்ளது. அதற்காகவே கூட்டமைப்புக்கு எதிராகத் தொடர்ந்தும் வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இவ்வாறு அரசு வாக்குகளைக் கொள்ளையடித்துக் கொண்டு, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் கூட்டமைப்பினர் அல்லர், அப் பிரதேச மக்கள் எங்களுக்கும் வாக்களித்துள்ளனர் என சர்வதேசத்துக்குக் கூற முயற்சிக்கின்றது.

அது மட்டுமின்றி, அரசியல் தீர்வு தொடர்பாக டக்ளஸ், கருணா ஆகியோருடன் பேச்சு நடத்தி அரசுக்குத் தேவையான தீர்வைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கே அரசு முயற்சிக்கின்றது என்றார்.

http://www.saritham.com/?p=25772

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.