Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அமைச்சரவை மாற்றியமைப்பு

Featured Replies

இந்திய அமைச்சரவை மாற்றியமைப்பு

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் துறையில் சர்ச்சைக்குரிய பல முடிவுகளை எடுத்ததாகக் கருதப்பட்ட ஜெயராம் ரமேஷ், ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், இணை அமைச்சர் தனிப்பொறுப்பில் இருந்து காபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார்.

ஜெயராம் வகித்துவந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, மேற்குவங்க முதல்வரானதை அடுத்து, காலியாக இருந்த ரயில்வே அமைச்சர் பதவி, அதே கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதிக்குக் கொடுக்கப்ட்டுள்ளது. அவர் இதுவரை, சுகாதாரத்துறை இணை அமைச்சராகப் பணியாற்றி வந்தார்.

சட்ட அமைச்சராக இருந்த வீரப்பமொய்லி, பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் நல அமைச்சர் சல்மான் குர்ஷீத்துக்கு கூடுதல் பொறுப்பாக சட்டத்துறை வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வி. கிஷோர் சந்திர தேவ், புதிய கேபினட் அமைச்சராக, பழங்குடியினர் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலைக் கவனத்தில் கொண்டு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த பேனிபிரசாத் வர்மா, கேபினட் அமைச்சராக தகுதி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து விலாஸ்ராவ் தேஷ்முக், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இலாகாவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

இணை அமைச்சர்களாக ஐந்து பேர் பதவியேற்றுக் கொண்டார்கள். முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா உள்ளிட்ட இளைஞர்களுக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த சுதீப் பந்தோபாத்யாய, சுகாதாரத்துறையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

புறக்கணிப்பு

அமைச்சரவை விரிவாக்கத்தில், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்ட, காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீகாந்த் ஜேனாவும், குருதாஸ் காமத்தும் விழாவுக்கே வரவில்லை.

அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் குறித்து ஏமாற்றமடைந்ததாகவும், கேபினட் அமைச்சர் பதவி தராததால் கோபமடைந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கம் முடிவடைந்த சிறிது நேரத்தில், குருதாஸ் காமத், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக, சில அமைச்சர்கள் நீ்க்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், திமுகவின் தயாநிதி மாறன் ராஜிநாமா செய்துள்ளார். அத்துடன், காங்கிரஸ் கட்சியின் முரளி தியோரா, எம்.எஸ். கில், பி.கே. ஹண்டிக், காந்திலால் புரியா ஆகியோரும் கட்சிக்கட்டளைப்படி ராஜிநாமா செய்திருக்கிறார்கள்.

திமுக கருத்து

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் கருத்துத் தெரிவிக்கும்போது, அது இன்னும் முழுமையடையவில்லை என்றும், அமைச்சரவையில் திமுகவின் பிரதிநிதிகளைச் சேர்ப்பது குறித்து, கோவையில் இந்த மாதம் 23, 24 தேதிகளில் நடைபெறும், திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் பெரிய அமைச்சரவை விரிவாக்கம் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இரண்டு இடங்களை திமுகவுக்காக வைத்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் அதுகுறித்து முடிவெடு்ப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

அலைக்கற்றை விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த ஆ. ராசாவும், தயாநிதி மாறனும் பதவி விலகியதால், இரண்டு கேபினட் இடங்கள் காலியானது. அந்த இலாகாக்கள் தற்போது, கூடுதல் பொறுப்பாக வேறு அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிருப்தியடைந்த இரண்டு அமைச்சர்கள் பதவியேற்பைப் புறக்கணித்து குறித்துக் கருத்துத் தெரிவித்த மன்மோகன் சிங், நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அப்போது இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு என்றும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி

ஜெயராம் ரமேஷ் பற்றிய கேள்விக்கு பதிலளித்த மன்மோகன் சிங், அவருக்கு கூடுதல் பொறுப்புக்கள் தரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி ஏன் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை என்று கேட்டபோது, அதுபற்றி பலமுறை அவரிடம் கேட்டுவிட்டதாகவும், கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அவர் தீவிரமாக உள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110712_cabinetreshuffle.shtml

  • தொடங்கியவர்

இராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் மந்திரி பதவி வென்றனர்

l stamp over cabinet, close aides get berths

The much-awaited Cabinet reshuffle bears a clear stamp of Congress general secretary Rahul Gandhi as many of those inducted are closely linked to him. Jitendra Singh, one of the closest aides of Gandhi and first time MP from Alwar, joins the Congress-led coalition government as the new minister of state for home.

http://www.hindustantimes.com/Rahul-stamp-over-cabinet-close-aides-get-berths/Article1-720389.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.