Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் துன்பம் பற்றி நாம ஏன் கவலைப் படணும்? அவர்களின் கேள்விக்கு அவர்களே பதில்

Featured Replies

இந்த வருடம் ஜூன் மாதம் 14 ஆம் திகதி எனது இதயத்தில் இடியை ஏற்படுத்திய விடயம் ஒன்றை சனல்4 இல் பார்த்தேன். ஆம் அதுதான் இலங்கையில் கொலைக்களம் என்ற காணொளி. சனல் 4 இதனை ஒளிபரப்ப முன்னராக அதன் ஒளிபரப்பாளர் கூறினார், போர்க்குற்றத்திற்கான ஆதாரமாகவும் மனித குலத்திற்கு எதிரான ஆவணங்களாக இந்த காணொளி இருக்கும் என்று. அதுமட்டுமல்ல இந்த காணொளி நீதியைப்பெற்றுக்கொடுக்கவும் உதவும் என்று குறிப்பிட்டார்.

.

உண்மையில் எனக்கு ஞாபகம் வருகின்றது 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலண்டனில் பெருமளவான தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தார்கள். இவர்கள் இனப்படுகொலைக்கு எதிரான கோசங்களை இட்டார்கள். அதன் பிற்பாடு நூற்றுக்கணக்கானவர்கள் பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் கூடி போராட்டம் செய்திருந்தார்கள். கிழமைக்கணக்காக தொடர்ந்த இந்த போராட்டம் தன் இனத்திற்கு இழக்கப்படுகின்ற கொடுமைகளை தெரியப்படுத்துவதற்கான ஓர் விழிப்புணர்வு போராட்டமாக இருந்தது.

நானும் சில இரவுகளை அங்கு அந்த போராட்டக்காரர்களுடன் களித்தேன். உடலை ஊசிபோல குத்தும் குளிர் காற்று,புல்வெளி இவை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அவர்களுடன் இருந்தேன்.

.

செரீனா தாவிஸ்

Serena%20davis.jpg

இலங்கை அரசாங்கம் உலக வல்லரசுகளின் ஆதரவுடன் இருக்கின்றது என கூறினார் ஜோன் ஸ்னோ என்ற சிறிலங்காவில் கொலைக்களம் எனும் ஆவண ஒளிபரப்பாளர். ஐக்கிய நாடுகளின் முக்கியஸ்தர்கள் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக கமெராக்கள் முன் தோன்றுகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு வலையங்கள் மீது எறிகணை வீசினார்கள் என்றும் அதே வேளை பாதுகாப்பு வலையம் என்பதும் ஓர் கொலைக்களத்திற்கான தந்திரோபாயமாக ஒரு சிறு பகுதிக்குள் பெருமளவான மக்கள் அடைக்கப்பட்டு இருந்தார்கள் என்றும்.

Jody McIntre Journalist

jody-mcintyre.jpg

பெரும்பாலான ஆதாரங்கள் அரச படைகளின் பொதுமக்கள் மீதான தாக்குதலையும், அரச படைகள் அதிகூடிய இழப்புக்களையும் ஏற்படுத்தி இருந்தார்கள் எனவும் தெரிவித்து இருந்தன.

ஆஸ்பத்திரிகள் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களே மீண்டும் காயப்படும் நிலைக்கு தாக்குதல் மோசமாக இருந்தன. ஆம் சந்தேகமே இல்லை இதே தந்திரோபாயம்தான் காசாவிலும் இஸ்ரேல் செய்திருக்கின்றது. மட்டுமல்ல இலங்கை அரசாங்கம் இஸ்ரேல் படையினரின் கிபிர் குண்டு வீச்சு விமானத்தை பாவித்தே தாக்குதல்கலை மேற்கொண்டது. இது எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.

.

இப்படியான உண்மையான இந்த மனித அவலங்களை சனல்4 காண்பித்தது ஆனால் டெய்லி டெலிகிராப் இல் பணியாற்றும் செரேனா டேவிட் என்பவர் கேட்டார் இந்த கொலைக்களம் எனும் காணொளியை ஏன் சனல்4 பிரிட்டிஸ் மக்களுக்கு ஒளிபரப்பியது என்று. டேவிட் கூறுகின்றார் பிரிட்டிஸ் மக்களுக்கு தமிழர்களின் அவலங்களில் எந்தப்பொறுப்பும் கிடையாது என்று. இன்னொரு நாட்டின் விடயங்களை ஏன் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்? எப்போதோ ஒரு காலத்தில் குடியேற்றவாத நாடாக இருந்ததற்காக இப்போதும் கரிசனை கொள்ளமுடியாது என வாதிடுகின்றார் டேவிட். மேலும் காணொளியில் சொல்லப்பட்ட ஆதாரங்கள் சில நகைப்புக்கிடமானவை எனவும் கூறுகின்றார். ஆகவே நாம் ஏன் இது பற்றி கவலைப்படவேண்டும் என கேள்வி வேறு கேட்கின்றார்.

.

நான் சொல்லட்டுமா சில காரணங்களை; முதலாவது ஜேர்மியின் பக்கம் (பத்திரிகை) 2009 இல் தெரிவித்தது என்னவெனில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான வணிக ஒப்பந்தத்தினை அங்கீகரித்தது. 13. 6 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியன ஆயுத தளபாடங்களை இலங்கைக்கு விற்றது. இதில் இயந்திர துப்பாக்கிகள் கவச வாகனங்களும் அடங்கும்.பிரிட்டிஸ் அரசாங்கத்தின் ஆயுதங்களால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். எல்லோரையும் கொல்லுங்கள் கொன்று முடியுங்கள் இதுதான் சிங்கள அரச படைகளின் வாசகமாக இருந்ததனை நான் பார்த்தேன்.இப்படிப்பட்ட இராணுவத்திற்குத்தான் பிரிட்டிஸ் அரசு ஆயுத உதவியினை செய்திருந்தது என்பதனை செரீனா டேவிட் ஆகிய நீர் மனதில் கொள்ளவேண்டும்.

.

அடுத்த விடயம் என்னவென்றால் சிங்களவர்களின் கொடுமையால் தமிழர்கள் அகதிகளாக இங்கு வருகின்றார்கள். அவர்களை எங்கள் வரிப்பணத்தில் தான் பார்த்து வருகின்றோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். சனல்4 கொலைக்கள காணொளி ஒளிபரப்பபட்டபோது 40 இலங்கைத்தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள் இல்லையா? ஆனால் புதினமானது என்னவென்றால் பிரிட்டிஸ் உள் நாட்டு அமைச்சகம் ஒரு அறிக்கை விட்டிருந்தது அதாவது இலங்கையில் போர் ஓய்ந்தாலும் அங்கு தமிழர்களுக்கு எதிரான இன்னல்கள், ஆட்கடத்தல்கள், கொலைகள் , அச்சுறுத்தல்கள் எல்லாம் தொடர்கின்றன என்று அதன் பின்னரும் அகதிகளை திருப்பி அனுப்புகின்றார்கள். இதெல்லாம் பிரிட்டிஸ் மக்கள் ஏன் தமிழர்களின் இன்னல்களை பார்க்கவேண்டும் என்பதற்கு பதில் ஆகலாம் ஆனாலும்....

.

ஒகே அதைவிடுங்க நான் இப்போ மீண்டும் எனது விடயத்திற்கு வருகின்றேன். 2009 இல் தமிழ் மக்கள் பாராளுமன்ற சதுக்கத்தில் ஒன்று கூடி போராடி இருந்தார்கள். அப்போது பிக் பென் கடிகார ஒளியின் பிண்ணணியில் இருள் சூழ்ந்து இருந்தது அந்த சூழலில் ஒரு தமிழ் இளைஞன் எனது வீடியோ கமெராவின் விம்பங்களைப்பார்த்து ஒரு கேள்வி கேட்டான்

Btamils%20protest.jpg

.

இவர்கள் எல்லோரும் உனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் நீ என்ன செய்வாய்?

மொழி பெயர்ப்பு ராஜேஸ் ஈழநாதத்திற்காக

ஈழநாதம்

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.