Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளின்ரனின் இந்திய விஜயத்தின் போது இலங்கை விவகாரம் குறித்து பேசப்படாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளின்ரனின் இந்திய விஜயத்தின் போது இலங்கை விவகாரம் குறித்து பேசப்படாது

13 ஜூலை 2011

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனின் இந்திய விஜயத்தின் போது இலங்கை விவகாரம் குறித்து பேசப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிலரி கிளின்ரனின் விஜயம் அரச சார்பற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிலரி கிளின்ரன் தமிழகத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்து.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் இயங்கி வரும் அமெரிக்க தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் கிளின்ரன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பதவி வகிக்கும் நபர் ஒருவர் சென்னைக்கு விஜயம் செய்யும் முதல் தடவை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வெளியுறவுத்துறை தொடர்பில் டெல்லியில் மத்திய அரசாங்க பிரதிநிதிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வைத்து இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை விவகாரம் மற்றும் தமிழர் பிரச்சினைகள் குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64023/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை செல்லும் ஹிலாரி; இலங்கை குறித்து பேசுவாரா?

Wednesday, July 13, 2011, 19:28சிறீலங்கா

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் எதிர்வரும் 19ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.தமிழ் நாட்டுக்கும் செல்லவுள்ள அவர் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும்போது அரசாங்கத்துடன் இலங்கை உட்பட வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தமாட்டாரென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவரது விஜயம் அரசு ரீதியாக அமையாதென நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்படுகிறது. சிவில் சமூக மற்றும் அபிவிருத்தி விவகாரம் தொடர்பான கொள்கையாளர்களையும் அரசசார்பற்ற அமைப்புக்களையும் அமெரிக்கக் கம்பனிகளின் பிரதிநிதிகளையும் வர்த்தக குழுவினரையும் சந்தித்து அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

‘வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களும் புதுடில்லியில் நடைபெறும். வெளிநாட்டு அமைச்சர்களுடனான சந்திப்பில் அயல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும்’ இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடில்லிக்கும் வோஷிங்டனுக்கும் இடையில் இலங்கை விவகாரம் குறித்த வழமையான கலந்துரையாடல் நடைபெறும். தமிழ் அகதிகளை தாயகத்திற்கு திருப்பியனுப்புதல், தமிழ் சிறுபான்மையாளர்களின் தேவைகள் மதிக்கப்பட வேண்டும் ஆகிய விடயங்களில் இரு நாடுகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனவென அந்த வட்டாரம் கூறியது. ஆனால் இலங்கைக்கு எதிரான யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து சென்னையில் கலந்துரையாடப்படமாட்டாதென மேற்படி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்திய விஜயத்தையடுத்து ஹிலாரி கிளின்டன் கிறீஸிற்கு சென்ற பின்னர் மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். சென்னைக்கு விஜயம் செய்யும் முதலாவது அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் அவர் இந்தோனேஷியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

http://www.tamilthai.com/?p=21678

1.பொருளாதார ரீதியில் தமிழர்கள் இன்னும் அதிகமாக முன்னேறும்போது எமது உயிர்களுக்கு உலகில் மதிப்பு தானாக ஏற்படும் !

2. கிலரி அவர்கள் ஒரு மக்கள் சந்திப்பை நடாத்த உள்ளார். அதில் எமது பிரச்சனை பற்றி மக்கள் கேட்கலாம்.

3. முதலைமைச்சர் ஒரு சந்திப்பை, மத்தியுடன் கேட்டு, ஏற்படுத்தி எமது மக்கள் விடிவு பற்றி அணுகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.