Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அனுமதிப்பத்திரமற்ற சுமார் 500,000 ஆயுதங்கள்: கிழக்கு ஆயுதக் குழுக்களுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அனுமதிப்பத்திரமற்ற சுமார் 500,000 ஆயுதங்கள்: கிழக்கு ஆயுதக் குழுக்களுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை

[Monday, 2011-07-18 08:55:01]

இலங்கையில் அனுமதிப் பத்திரமற்ற சுமார் 500,000 ஆயுதங்கள் உள்ளனவென்றும் அவற்றை ஒப்படைப்பவர்களுக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை,கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் அவற்றிடமுள்ள ஆயுதங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டுமென இராணுவம் இன்றுமுதல் கிராம மட்டத்தில் அறிவித்தல் விடுக்கவுள்ளதாக அப்பிரதேச இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு வழங்கப்படும் கால அவகாசம் முடிந்தபின் நாடளாவிய ரீதியில் தேடுதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை பாதாள உலக குழுக்களிடம் இருப்பதாகவும் சட்டம் ஒழுங்களை நிலைநாட்டுவதற்கு இந்த ஆயுதங்கள் தடையாக இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் அவற்றிடமுள்ள ஆயுதங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டுமென இராணுவம் இன்றுமுதல் கிராம மட்டத்தில் அறிவித்தல் விடுக்கவுள்ளதாக அப்பிரதேச இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாணத்தில், கொள்ளை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் சில குழுக்கள் சில அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களில் நாம் பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளோம்;. இன்று முதல் கிராம மட்டத்தில் பகிரங்க அறிவித்தல்களை விடுக்கவுள்ளோம். சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் குறித்து பெறுமதியான தகவல்களை தருபவர்களுக்கு நாம் அன்பளிப்புகளையும் வழங்கவுள்ளோம் என மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்பகுதியில் பயங்கரவாத குழுக்கள் இல்லை. ஆனால் சில குழுக்கள் கொள்ளைகளுக்கு பயன்படுத்துவதற்காக ஆயுதங்களை வைத்திருக்கின்றன என அவ்வட்டாரங்கள் கூறின.

அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளை இதற்கு உதாரணமாகும். பல குழுக்கள் ரி-56, ரிவோல்வர்கள் போன்றவற்றை வைத்திருக்கின்றன. சிலவேளை அவர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர். அவர்கள் தாமாக ஆயுதங்களை ஒப்படைத்தால் தண்டிக்கப்பட மாட்டார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக இராணுவத்தினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.seithy.com/breifNews.php?newsID=46685&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அனுமதிப்பத்திரமற்ற சுமார் 500,000 ஆயுதங்கள்:

இந்த ஆயுதங்கள் தான் வருங்காலத்தில், சிங்களத்தை ஆளப் போகின்றன!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.