Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் முடிந்தும் தமிழர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை: ஹில்லாரியிடம் ஜெயலலிதா

Featured Replies

போர் முடிந்தும் தமிழர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை: ஹில்லாரியிடம் ஜெயலலிதா

புதன், 20 ஜூலை 2011( 20:32 IST )

இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் தாங்கள் வாழ்ந்து பகுதியில் தமிழர்கள் குடியேற அனுமதிக்கப்படவில்லை என்று தன்னைச் சந்தித்த அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை வந்துள்ள ஹில்லாரி கிளிண்டன் இன்று மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். சென்னை கோட்டையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

தமிழ்நாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்வது, வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வது, முதலீட்டிற்கான உகந்த சூழல் தமிழ்நாட்டில் நிலவுவது, தமிழ்நாட்டின் மின் உற்பத்தியைப் பெருக்க 300 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 10 சூரிய மின் உற்பத்திப் பூங்காக்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஆகியன பற்றி இரு தலைவர்கள் விரிவாக பேசியதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

இலங்கை தமிழர் பிரச்சனை குறித்துப் பேசியுள்ள தமிழக முதல்வர், அங்கு போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் போருக்கு முன் இடம் பெயர்ந்த மக்கள் இன்னமும் முகாம்களில்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்றும், அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் எடுத்துக் கூறியுள்ளார்.

தமிழக முதல்வரின் கவலைகளை பகிர்ந்து கொள்வதாகக் கூறியுள்ள ஹில்லாரி, இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணபதில் அங்கு நிலவும் முட்டுக்கட்டையைப் போக்க புதுமையான ஒரு தீர்வு குறித்து அமெரிக்க அரசு ஆய்வு செய்து வருகிறது என்றும், தாங்கள் வாழ்ந்த வீடுகளில் தமிழர்கள் குடியேற உதவுவோம் என்றும் கூறியுள்ளார் என்று அரசு செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டின் முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, உள்ளூர் மக்களுக்குக் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் தமிழக அரசு நீட்டித்துள்ளது என்று ஹில்லாரியிடம் தமிழக முதல்வர் கூறியதாகவும் அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஜெயலலிதா, ஹில்லாரி சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது என்றும், இந்த சந்திப்பு மிகவும் இணக்கமாக இருந்தது என்றும் கூறியுள்ள அரசு செய்திக் குறிப்பு, இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க அயலுறவு துணை அமைச்சர் பாப் பிளேக், மிலானி வெர்வீர், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் பீட்டர் பர்லீக், அமெரிக்க அரசின் சென்னை துணைத் தூதரக அதிகாரி ஆண்ட்ரூ டி. சிம்கின் ஆகியோர் உடனிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1107/20/1110720050_1.htm

Sri Lanka Tamils: US looking at innovative ideas to break impasse, says Hillary Clinton

US Secretary of State Hillary Clinton on Wednesday voiced concern over the plight of Internally Displaced Persons in Sri Lanka and said United States was looking at some innovative and creative ideas to break the impasse over the Sri Lankan Tamils issue.

Hillary, who called on Tamil Nadu Chief Minister J Jayalalithaa at the secretariat in Chennai, told her that US was looking at enabling Sri Lankan Tamils in camps get back to their own homes.

Jayalalithaa said though the war between the Sri Lankan army and LTTE in the island nation was over two years ago, Sri Lankan Tamils in Jaffna area are unable to go back to where they used to live.

While discussing the issue of Sri Lankan refugees in Tamil Nadu, Jayalalithaa told Hillary they have been provided all facilities that were available to local citizens.

Both of them discussed various social, political and economic issues of common interest.

The US Secretary of State also congratulated Jayalalithaa on her electoral victory in the April 13 assembly polls.

During the meeting, Jayalalithaa recalled the strong bilateral trade relations between India and United States. Inviting more US investment in the Automobile sector in Tamil Nadu, she said Tamil Nadu enjoyed pre-eminence in automotive and auto components.

Jayalalithaa also expressed concern over reduction in issue of H1B visas even though in terms of number of Visas issued, the Chennai US Consulate was the second largest in the world.

Hillary invited Jayalalithaa to visit US which would enable Americans to know about the achievements of Tamil Nadu.

The meeting lasted for an hour.

http://www.dnaindia.com/india/report_sri-lanka-tamils-us-looking-at-innovative-ideas-to-break-impasse-says-hillary-clinton_1567731

Hillary expresses concern over Sri Lankan Tamils’ issue

http://www.thehindu.com/news/national/article2277184.ece

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பிரச்சினைகள் குறித்து ஹிலாரிடம் தமிழக முதல்வர் ஜெயா விபரிப்பு: ஈழத்தமிழர் நிலை தொடர்பில் ஹிலாரி கவலை தெரிவிப்பு

[Wednesday, 2011-07-20 20:06:30]

சென்னையில் இன்று மாலை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஒரு மணி நேரம் அவருடன் கலந்துரையாடினார் என ஜெயா தொலைகக் காட்சிச் சேவை தெரிவித்தது.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழக முதல்வர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரியிடம் விரிவாக எடுத்துக் கூறினார் என்றும் இந்த விடயம் தொடர்பில் தனது கவலையை ஹிலாரி வெளியிட்டார் என்றும் ஜெயா தொலைக்காட்சி சற்று நேரத்துக்கு முன்னர் செய்தி வெளியிட்டது.

http://www.seithy.com/breifNews.php?newsID=46832&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

சீனாவின் தாக்கத்தை குறைத்து ஆசியாவுக்கு தலைமை தாங்க இந்தியாவுக்கு அமெரிக்க அழைப்பு

As China looms, US tells India to lead Asia

"It's time to lead." With these four words Hillary Clinton underlined why the relationship with the US is so important for India. Among all emerging economies, India is the one whose potential as a global player commands the most enthusiasm from Washington.

http://www.hindustantimes.com/As-China-looms-US-tells-India-to-lead-Asia/Article1-723313.aspx

Hillary calls for equal rights for all in Sri Lanka

The audience applauded as soon as Ms. Clinton, addressing them at the Anna Centenary Library auditorium here on Wednesday afternoon, said: “Here in Chennai, all citizens are participating in the political and democratic life of the country. All the people of Sri Lanka should also have the same hope and opportunity.”

http://www.thehindu.com/news/cities/Chennai/article2277540.ece

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.