Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கறுப்பு யூலை" 28 வது ஆண்டு நினைவு சுமந்து 20 நகரங்களுக்கு மேலாக கவனயீர்ப்பு நிகழ்வுகள் - யேர்மனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கறுப்பு யூலை" 28 வது ஆண்டு நினைவு சுமந்து 20 நகரங்களுக்கு மேலாக கவனயீர்ப்பு நிகழ்வுகள் - யேர்மனி

60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவெறி அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறை 1983 ஆண்டு யூலை 23 ம் நாள் நள்ளிரவில் இருந்து திட்டமிட்ட இனப்படுகொலையாக மாறி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி எடுத்து, தொடர்ந்து உச்சக்கட்டமாக 2009 ஆண்டு மே மாதம் குறைந்தது 40 000 மக்களுக்கும் மேலாக கொண்று குவித்தனர்.

இன்று தொடர்ந்தும் எம் உறவுகள் சிங்கள இனவெறி அரக்கர்களிடம் அகப்பட்டு வேறு ஒரு வழியும் அற்று உளவியல் ரீதியாக உயிரெடுக்கப்படுகிறார்கள்.

அன்று திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தான் “கறுப்பு யூலை” ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்குக் காரணமென சிங்கள அரசால் சொல்லப்பட்டாலும் உண்மை அதுவில்லை. பல்லாண்டு காலமாக ஈழத்தமிழர்களை அடிமைப்படுத்தி ஆழ நினைத்த சிங்களம் அத்தாக்குதலை இப்படுகொலைக்கு ஒரு சாட்டாகச் எடுத்துக்கொண்டனர். மற்றும் படி ஏற்கெனவே இவ் இனப்படுகொலைக்கு ஆயத்தங்கள் செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இன்று அதே போலே "பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்" எனும் போர்வையில் பல்லாயிரக்கணக்கான எம் உறவுகளின் உயிர்களை பறித்தார்கள் .அன்று கொல்லப்பட்ட மக்களுக்கான நீதி இன்றுவரை கொடுக்கப்படவில்லை, இன்றைய நவீன உலகத்தில் 5 மாதத்தில் 40 000 க்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டு அத்தோடு தொகையாக 146 000 மேலான மக்கள் காணவில்லை என மன்னார் பிச்சொப் கலாநிதி ராஜப்பு ஜோசப் கூறி இருப்பது இங்கு ஆழமாக குறிப்பிடத்தக்கது .

பிராந்திய நலம் கொண்ட பிரதேச வல்லரசுகளும் அத்தோடு சர்வதேச வல்லரசுகளும் இலங்கை அரசால் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட வேளையில் இலங்கை அரசுக்கு உறுதுணையாக இருந்தனர் . இரண்டு வருடங்கள் கடந்து உண்மைகள் என்றும் அழிவதில்லை என்ற கூற்றில் கொடுமையான சுழ்நிலையில் நிலத்தில் வாழும் எம் மக்களும் அதேநேரத்தில் புலத்தில் வாழும் உறவுகளின் விடாமுயற்சிகளாலும் உலக நாடுகள் எம்மை படிப் படியாக திரும்பி பார்கிறார்கள் .உண்மை நிலையை மறைக்க முடியாத ஒரு நிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது .தற்சமயம் யேர்மனி வாழ் ஈழத்தமிழர்களின் பரப்புரையால் "இலங்கையின் கொலைக்களம்" Sri lankas Killing Fields ஆவண காணொளியை அடிப்படையாய் கொண்டு கடந்த 19.07.2011 அன்று Deutsche Welle எனும் ஊடகத்தில் "போர்குற்றம்- இலங்கையின் கொலைக்களம் "Sri lankas Killing Fields" எனும் தலைப்பில் இலங்கை அரசின் பொய்முகத்தை கிழித்து அவர்கள் தமிழ் மக்கள் மீது 2009 ஆம் ஆண்டு இறுதி கட்டத்தில் மேற்கொண்ட கண்மூடித்தனமான இனவழிப்பை சுட்டிக்காட்டி எழுதியிருந்தார்கள்.

http://www.dw-world.de

சிறப்பாக அதில் குறிப்பிட்டிருப்பது , இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்து போராடும் போது இறுதிக் கட்டத்தில் சுமார் 330 000 பொதுமக்களை அவர்களால் குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு வலயத்துக்குள் வரவழைத்தனர் . ஆனால் உண்மையில் அங்கு அதாவது "பாதுகாப்பு வலயத்துக்குள்" இலங்கை ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகப்பட்டனர் அதேநேரத்தில் வெளியுலகுக்கு "இறந்தவர்களில் ஒரு பொதுமக்களும் இல்லை" எனும் உத்தி அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அவ் ஊடக செய்தியில் கோர்டன் வைஸ் அவர்களின் வாக்குறிதியின் படி தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்தால் இலங்கை அரசு எவ்வளவு மக்கள் தங்களால் கொல்லப்படுவதை ஏற்கவும் தயாராக இருந்தார்கள் .அப்படி பார்க்கும் போது சிங்கள இனவெறி அரசு மீண்டும் மீண்டும் தமிழர்கள் மீது திட்டமிட்ட இனப்படுகொலையை நடாத்திவருகின்றது .

அவ் வகையில் எமது அன்பான யேர்மன் வாழ் தமிழ் உறவுகளே ,

இலங்கை இனவாத அரசின் இனப்படுகொலையின் ஓரங்கமான "கறுப்பு யூலை" 28 வது ஆண்டு நினைவாக யேர்மனியில் பல நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .எம் இனத்தின் விடுதலைக்காக , எம் தமிழின அடையாளத்திற்காக , எம் உறவுகளின் உரிமைக்காக , உயிர்களுக்காக தொடர்ந்தும் போராடுவோம் . கறுப்பு யூலை 23 ம் நாளில் மற்றும் அதை அடுத்து தொடரும் நாட்களிலும் நாம் பெரும்திரளாய் ஒன்று கூடி எம் உறவுகளுக்காக குரல் கொடுப்போம் வாருங்கள் .

சுதந்திரம் இல்லாமல் நாள் தோறும் சாவினில் வாழும் எம் சொந்தங்களை காக்க ஒன்றாக திரள்வோம் வாருங்கள்.

உரிமைகளுக்காக ஒருமித்துக் குரல் கொடுப்போம்.

சர்வதேசத்திடம் தொடர்ந்து தளராமல் நீதி கேட்போம் வாருங்கள் !!!

பின்வருமாறு நிகழ்வுகள் நடைபெறும் இடங்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது .

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

தொடர்புகட்கு : 0176 21 75 14 46

karuppu.jpg

blackjuly20111.jpg

நன்றி - பதிவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=89048

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.