Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊட்டியில் பயிற்சி ரத்து: திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை வீரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் 25 இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படவிருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டு, அவர்கள் கொழும்புவுக்கு திரும்பிச் சென்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி்க் கழகத்தில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 25 பேருக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கப்போவதாக செய்திகள் வந்தன. இலங்கை வீரர்கள் குன்னூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இது பற்றிய தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. இதயைடுத்து நாம் தமிழர் இயக்கத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் மாலை குன்னூர் லெவல் கிராசிங் மற்றும் ஊட்டி-குன்னூர் ரோட்டில் உள்ள பிளாக்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர்.

போராட்டம் நடத்த முயன்ற 220 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் பலதத் பாதுகாப்பு போடப்பட்டது.

இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டு ராணுவத்தினருக்கு இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் பயிற்சி அளிப்பதா என்று பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இதனால் இலங்கை ராணுவத்தினருக்கு மைசூரில் பயி்ற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கும் எதிர்ப்பு கிளம்பலாம் என்ற அச்சம் பரவியதையடுத்து, நேற்று காலை 7.15 மணிக்கு இலங்கை ராணுவத்தினர் குன்னூரில் இருந்து பேருந்து மூலமாக பெங்களூர் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ஈழ இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்கள இரணுவத்தினரிற்கு மைசூரில் பயிற்சி வழங்க இந்தியா முயற்சி! தொடரும் தமிழர்களின் போராட்டம்!!

தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தினரிற்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க முடிவெடுத்து தமிழர்களது தன்மானத்தை பரிசோதித்து பார்க்க நினைத்தவர்களிற்கு சரியான பாடத்தினை புகட்டியுள்ளனர் தமிழ்உணர்வாளர்கள்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்காக அழைத்துவரப்பட்டு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விரட்டியடிக்க களத்தில் குதித்த பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் நாம்தமிழர் கட்சி போராளிகள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் உறுதிமிக்க போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள்.

தமிழ் உணர்வாளர்களது போராட்டத்தின் விளைவாக பயிற்சிக்கு அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரை நேற்றிரவு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றிருந்தனர். பெங்களுரிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை விமானம் மூலமாக சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழக காவல்துறையினர் பாதுகாப்பாக சிங்கள இராணுவத்தினரை கர்நாடக மாநில எல்லைவரை கொண்டு சென்று விட்டுவந்துள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மைசூரில் அமைந்துள்ள இராணுவப்பள்ளியில் இந்த சிங்கள இராணுவத்தினரிற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இத்தகவல் அறிந்தஉடன் திரண்ட தமிழ்உணர்வாளர்கள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனியின் உருவப்பொம்மையினை எரித்து தமது எதிர்ப்பினை காட்ட முற்பட்டிருந்தனர். இடையில் வந்த காவல்துறை பலத்த சிரமத்திற்கு மத்தியில் போராட்டக்காரர்களிடம் இருந்து உருவப்பொம்மையினை பறித்து அகற்றியதுடன் அதில் கலந்து கொண்டவர்களையும் கைது செய்தது.

இதனிடையே தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்களனிற்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது என இந்துமக்கள் கட்சியின் சார்பில் இந்திய சனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு தந்தி அனுப்பும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து சிங்களவர்களை விரட்டியடித்த எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழர்கள் எண்ணிக்கையில் சில நூறுபேராக இருந்தாலும் உறுதியுடன் நின்று போராடியதன் விளைவாக சிங்கள இராணுவத்தினரை விரட்டியடிக்க முடிந்துள்ளது.

ஈழதேசம் செய்தியாளர் : புலிமறவன்.

http://www.eeladhesam.com/index.php?option=com_

தமிழ் உணர்வாளரின் செயற்பாடுகள் திராவிட, கட்சி அரசியல்களைத் தாண்டி மேலும் வலுப்பெறவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.