Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.வீ.சன் சீ கப்பலில் சென்ற அகதிகளில் ஒருவர் இலங்கையில் யுத்தக் குற்றம் புரிந்தவராம்: நாடு கடத்த உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.வீ.சன் சீ கப்பலில் சென்ற அகதிகளில் ஒருவர் இலங்கையில் யுத்தக் குற்றம் புரிந்தவராம்: நாடு கடத்த உத்தரவு

[Wednesday, 2011-07-27 09:43:14]

எம்.வீ.சன் சீ கப்பலில் சென்ற அகதிகளில் ஒருவர் இலங்கையில் யுத்தகுற்றம் புரிந்தவர் எனக் கூறி அவரை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு இவ்வாறான நாடு கடத்தல் தொடர்பான தீர்மானம் கடந்த வாரம் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என அகதிகள் சபை விசாரணைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் குறித்த நபர் யுத்த குற்றத்தினை செய்வதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என அவருக்கு கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையால் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் எதுவித பாதுகாப்பும் கோரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=47243&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சன் சீ கப்பலில் சென்ற ஒருவர் நாடுகடத்தப்படுகிறார்!

Published on July 28, 2011-10:23 am

கனடாவின் மேற்குக் கரையோரப் பகுதிக்கு கடந்த வருடம் எம்.வி.சன்சீ கப்பலில் வருகைதந்திருந்த தமிழர் ஒருவர் போர்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் திரும்பிச் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

அந்தக் குடியேற்றவாசி யார் என்பது வெளிப்படையாக அடையாளம் காட்டப்படவில்லை. கடந்த ஏப்ரலில் குடிவரவு மற்றும் அகதிகள் சபை முன்னால் அவர் ஆஜராக்கப்பட்டிருந்தார்.

அவரை இலங்கைக்கு நாடு கடத்தும் தீர்மானம் இந்த வாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால், அவரை நாடு கடத்தும் தீர்மானத்தில் அவருக்கு எதிரான விசேடமான குற்றச்சாட்டுகள் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், போர்க் குற்றத்தை ஏனையோர் இழைப்பதற்கு அவர் ஆலோசனை கூறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சன்சீ கப்பலில் வருகைதந்திருந்த சுமார் 500 பேரில் இவரும் ஒருவராவார். இவர்களில் அநேகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குடியேற்றவாசி உட்பட எட்டுப்பேர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

http://www.saritham.com/?p=27989

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.