Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தார்மீகப் பொறுப்பு என்ன?

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தார்மீகப் பொறுப்பு என்ன?

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-28 12:25:18| யாழ்ப்பாணம்]

தமிழர் பகுதிகளில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடைந்தமைக்கான காரண காரியங்கள் பற்றி ஆராய்ந்த நாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்த மகத்தான வெற்றியின் தாற்பரியம் குறித்தும் ஆராய்வது தக்கார் தொழில் பாற்படும்.

அவ்வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்துகொண்ட மகத்தான வெற்றி என்பது அந்தக் கட்சிக்கான வெற்றியன்று.

மாறாக தமிழ் மக்கள் தம் இனத்திற்கு ஈனம் இழைத்த ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க முடிபு செய்தனர். அப்படியானால், யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி எழுகின்றது. இங்குதான் தந்தை செல்வநாயகம், தளபதி அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் பலரின் தியாகமும் அறிவியலும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி முன்னெழுகிறது.

தமிழரசுக் கட்சி ஒரு நல்ல நோக்கில் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழர்களின் உரிமை பற்றி கதைப்பதற்கான கட்சி என்பதாக உருவகமமைக்கப்பட்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதே ஒரே வழியென்ற முடிபைத் தமிழ் மக்கள் எடுத்துக்கொள்கின்றனர்.

தமிழ் மக்களின் இத்தீர்மானத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக, தியாக சிந்தனையோடு, உணர்வுபூர்வமாகச் செயற்படுகின்றது என பொருள் கொள்வது மகாதவறு.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு தடியை வேட்பாளராக நிறுத்தி அதற்குக்கீழ் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) என்று எழுதப்பட்டிருந்தால் அதற்கு தங்களின் வாக்கை அளித்திருப்பார்கள். எனவே நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தல் முடிவுகளில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அனைவரும் நேர்மையானவர்கள், அவர்கள் எவரிடமும் பதவியாசை, சுயநலம் எதுவும் இல்லை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அத்தனை பேரும் உத்தமர்கள். இப்படியானதொரு முடிபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் எவரும் தயவுசெய்து எடுத்துவிடக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் அரச பக்கம் சார்ந்து நிற்போர், அரசுக்காகக் குரல் கொடுப்போர், வடக்கில் ஒன்று தெற்கில் இன்னொன்று என்று வாலையும் தலையையும் காட்டுவோர் எனப் பலர் இருக்கின்றனர்.

தமிழ் மக்களின் எத்தனையோ பிரச்சினைகளை சுட்டிக்காட்ட வேண்டிய நிலைமைகள் இருந்தும் சின்னத்தனமான அரசியல் நடத்தும் சிறுமைத்தனங்களும் கூட்டமைப்பில் இல்லாமல் இல்லை. இத்தனையிருந்தும் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் உரிமைக்காக போராடியவர்கள் அல்லர். இவர்களின் கோரிக்கைக்காக அரசு எந்தவிதமான தீர்வையும் தரப்போவதும் இல்லை. மாறாக வன்னியிலும் அதற்கு முன்பும் உயிரிழந்தவர்களின் தியாகமும் அதனூடான சர்வதேசத்தின் அழுத்தமுமே எமக்கான தீர்வைப் பெற்றுத்தரும்.

எனவே எங்கள் இனத்தின் குருதி நனைந்த மண்ணில் நின்றுகொண்டு அரசே! எதையாவது தா! நாங்கள் பெற்றுக்கொள்வோம் என்ற மிகமோசமான செயலை மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யாதிருந்தால் அதுபோதும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=21136

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.