Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவான தீர்க்கமான செய்தியும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய மீள்ஆணையும்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவான தீர்க்கமான செய்தியும்,

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய மீள்ஆணையும்!

அச்சுறுத்தல் அடாவடித்தனங்களுக்கு மத்தியில் அமைதியாகப் பதில் அளித்த மக்களை தமிழர் நடுவம் பாராட்டி வாழ்த்துகின்றது.

தமிழ் மக்கள், கடந்த பல தசாப்தங்களாக, வெளிப்படுத்தி வந்த தமது தேசிய நிலைப்பாட்டை, மீண்டும் ஒரு முறை மிகத் தெளிவாகவும், தீர்க்கமாகவும் நடந்துமுடிந்த உள்ள+ராட்சித் தேர்தலின்மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.

நடந்து முடிந்தது உள்ள+ராட்சித் தேர்தல் என்று பொத்தாம் பொதுவில் கருதப்பட்டாலும், அது தமிழ் மக்கள் தமது தேசிய நிலைப்பாட்டில் கொண்டிருக்கும் ஈடுபாடு தொடர்பான அளவிடுதல் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.

வன்னி மண்ணில், மிகமோசமான, காட்டுமிராண்டித்தனமான இனஅழிப்புக் கொடுமையை நடாத்திமுடித்த, சிங்கள அரசு, சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவும், நற்பெயர் ஈட்டவும் கிடைத்த சந்தர்ப்பமாக இதனைக் கருதிச் செயற்பட்டது.

தமிழ்மக்கள் தன்னோடு இருக்கின்றார்கள் என்ற செய்தியை, இத்தேர்தலின் ஊடாக பெற்றுக்காட்ட, சிறீலங்கா சனாதிபதி பெரிதும் முயன்றார். அதற்காக, தன் அடிவருடிகளை நன்கு பயன்படுத்தினார். அரச வளங்களும், பலம்களும் இதற்காக கட்டுப்பாடின்றிப் பயன்படுத்தப்பட்டன.

சிறீலங்கா சனாதிபதி உட்பட, அமைச்சர்கள், அதிகாரிகள் என, தமிழர் தாயகத்தில் முகாமிட்டு, பொருளாதார அபிவிருத்தி, புனர்வாழ்வு என, ஆசைவார்த்தைகளாலும், தடல்புடல் ஆர்ப்பாட்டங்களாலும், தமிழ்மக்களைத் தம்பால் ஈர்க்கமுனைந்த திருகுதாளங்களுக்கு, மக்கள், அமைதியான முறையில் பதிலளித்திருக்கின்றார்கள்.

நெருக்கடிகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அரசியல் விழிப்புணர்வுடன், பொறுப்புணர்வுடன், சரியான நேரத்தில் சரியான பதிலை, சனநாயக வழிமுறையில் அமைதியாக வெளிப்படுத்திய எங்கள் தாயக மக்களை, பிரான்ஸ் தமிழர் நடுவம் மனம்நெகிழ வாழ்த்துகின்றது.

தண்டிக்கப்படுவோம் வஞ்சிக்கப்படுவோம் என்று நன்கு தெரிந்தபின்பும், மக்கள் மிகவும் துணிவுடன், இந்தச் செய்தியை ராஜபக்ஸ்ச அரசிற்குத் தெரிவித்திருக்கின்றனர்.

புனரமைப்பு, பொளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை வசதி, இவையே தமிழ் மக்களின் தேவையேயன்றி, வேறேதும் அல்ல எனக்கூறிவரும் சிங்கள அரசிற்கு, இவையல்ல, தமிழ் மக்களின் தேவை விடுதலை வாழ்வு மட்டுமே என்ற செய்தி ஓங்கி உரைக்கப்பட்டிருக்கின்றது.

சிங்கள சமூகத்திடம், இன்னமும் வெற்றிநாயகனாக வலம் வரும், ராஜபக்ஸ்சவை வேண்டாத விருந்தாளியாகவும், தமிழர்களின் மறக்கவும் மன்னிக்கவும் முடியாத சிங்களப்பேரினவாதக் கொடுங்கோலனாகவுமே தமிழர் தாயகம் பார்க்கின்றது என்ற செய்தியும் இதனூடு பகிரப்படுகின்றது.

இலங்கைத்தீவில், இரண்டு தேசிய இனங்கள், இருவேறு நிலைப்பாடுகளுடன், சேர்ந்துவாழச் சாத்தியமற்ற இருவேறு சூழலில் வாழ்கின்றன என்ற பேருண்மையை, சர்வதேச சமூகத்திற்கு புலப்படுததுதலின்; தொடர்ச்சியாகவும் இத்தேர்தலைக் கொள்ளமுடியும்.

இந்தத் தேர்தலில், தமிழ்த்தேசியத் தளம் சிதைவுறாமல் பாதுகாக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யவேண்டும் என, புலம்பெயர் சமூகம் அக்கறையுடன் செயற்பட்டமை வரவேற்கத்தக்கது. பல புலம்பெயர் அமைப்புக்கள், ஊடகங்கள், தனிநபர்கள் என, பல தரப்பாலும் ஒண்றிணைந்த இந்தத் தேசியப்பணி ஆற்றப்பட்டிருக்கின்றது மகிழ்விற்குரியது. பாராட்டப்படவேண்டியது.

பொருளாதார நன்மை பெற்றுத்தருவார்கள், புனரமைப்புக்கு வழிசமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்புக்கள் எள்ளளவும் இன்றி, தாயகம், தேசியம் தன்னாட்சி உரிமை என்ற தமிழர்தம் அடிப்படைத் தேசியக் கொள்கையில் தடுமாற்றம் ஏதுமின்றிப் பயணித்து, தமிழ்மக்களிற்கு, சுதந்திரமான வாழ்வைப் பெற்றுத்தர, உளசுத்தமாகவும், உறுதியாகவும் பாடுபடுவார்கள் என்ற ஒற்றை நம்பிக்கையில் மாத்திரம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்திருக்கின்றனர் தமிழ்மக்கள். இதன்பொருட்டே, புலம்பெயர் தமிழ்ச்சமூகமும், இதுவிடயத்தில், முழுஈடுபாட்டைக் காட்டியிருக்கின்றது.

தமிழ்மக்கள் வழங்கிய ஆணையை தலைமேற்கொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பயணப்படட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்..eelamwebsite.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.