Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி – காங்கேசன்துறையில் இந்திய – சிறிலங்கா கூட்டு நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jul 30, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

பலாலி – காங்கேசன்துறையில் இந்திய – சிறிலங்கா கூட்டு நடவடிக்கை

காங்கேசன்துறை கடற்படைத் தளம், துறைமுகம், பலாலி விமான நிலையம், படையினர் முகாம் ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டங்களை இந்திய மத்திய அரசு பொறுபேற்றுள்ளது. காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மீளவும் இயக்கப்படவுள்ளது. தமிழகத்தின் பிரபல சீமெந்து தொழில் நிறுவனம் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளது.

யூலை 22ம் நாள் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் நிறைவேறிய புரிந்துணர்வின் படி (M.O.U) காங்கேசன் துறைமுக விரிவாக்கப் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளது. யூலை 26ம் நாள் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, சிறிலங்கா அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, டக்கிளஸ் தேவானந்தா, இரு பக்கப் கடற்படை அதிகாரிகள் இதில் பங்கு பற்றினர்.

விடுதலைப் புலிகளின் தாக்குலில் முழ்கடிக்கப்பட்ட ஆறு பாரிய கப்பல்கள் துறைமுக வாயில் கிடக்கின்றன. இவற்றை அகற்றும் பணி உடனடியாகத் தொடங்கிவிட்டது.

முதலாவது பெண் கரும்புலி அங்கயற்கண்ணி, கடற்புலிகளின் தாக்குதல் தளபதி நரேஷ் ஆகியோர் மூழ்கடித்த கப்பல்கள் இதிலடங்கும்.

காங்கேசன் துறை முகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் இந்திய அரசு இவ்விடத்தில் கால் பதித்துள்ளது. விசேட கட்டுமானங்கள் செய்யப்படவுள்ளதாகவும் அவை இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் மாத்திரம் இருக்கும் மென்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

சீன அரசு அம்பாந்தோட்டையில் செய்த ஒழுங்குகளுக்கு நிகரானவற்றை இந்திய அரசு காங்கேசனில் செய்ய உத்தேசித்திருப்பதாக பெயர் குறிப்ப்பிட விரும்பாத இந்திய கடற்படை அதிகாரி தெரிவித்தார். யாழ் குடா நாட்டை இந்திய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முதற் கட்டமாகவும் இந்தப் பணியைப் பார்க்க முடியும். பலாலி விமான நிலைய ஓடு பாதை ஏற்கனவே இந்திய அரசினால் செப்பனிட்டு விரிவாக்கப்பட்டுள்ளது.

காங்கேசன் துறை வைபவத்தை முடித்துக் கொண்டு இந்திய உயர் ஸ்தானிகள் அசோக் கே.காந்தா பலாலி விமான நிலையத்தைப் பார்வையிட்டார். சுற்றுப் பயணிகளுக்கான விமான சேவையைத் தொடங்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது. இந்தியாவின் தனியார் விமான சேவைகளின் விமானங்கள் வந்து செல்லக் கூடிய வசதிகள் பலாலியில் அமைக்கப்படுகின்றன. சுருக்கமாகக் கூறுவதாயின் குடா நாட்டின் வளமிக்க பகுதிகள் நிரந்தரமாகப் பறிபோகும் நிலை தோன்றிவிட்டதாக யாழ் நிருபர் சிவபாலன் கருத்து தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரச படைகளின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தால் ஈழத் தமிழர்கள் 26 கிராமங்களை இழந்துவிட்டனர். அவை பலாலி – காங்கேசன்துறை பகுதிக்குள் முடங்கியுள்ளன.

http://www.pathivu.com/news/17711/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Jul 30, 2011 / பகுதி: செய்தி /

முதிரைக் கற்கள் இந்திய சரக்குக் கப்பல்களில் ஏற்றப்படுகின்றன!

காங்கேசன் சீமெந்துத் தொழிற்சாலைத் தேவைக்காக களஞ்சியத்தில் வைக்கப்பட்டடிருந்த பல கோடி பெறுமதியா முதிரைக் கற்கள் இந்திய தொழில் நிறுவனத்திற்கு விற்பனையாகி உள்ளது யூலை 26 தொடக்கம் பல வருடமாகப் பூட்டிக் கிடந்த களஞ்சியங்கள் திறக்கப்படுகின்றன.

பார ஊர்திகளில் ஏற்றப்பட்ட சீமெந்து தயாரிப்பில் மூலப் பொருளாகப் பயன்படும் இந்தக் கற்கள் இந்திய சரக்குக் கப்பல்களில் ஏற்றப்படுகின்றன. இந்த விற்பனைப் பொறுப்பை ராஜபக்சவின் தம்பியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச ஏற்றுள்ளார்.

இந்த விற்பனையில் பெரும் மோசடி நடப்பதாகவும் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் பசில் ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் நிதிக் கணக்கை விசாரிக்கும் வலு எவருக்கும் இல்லாத படியால் ராஜபக்ச குடும்பத்தினரால் துணிவாக ஊழல் செய்ய முடிகிறது.

ஈழத் தமிழர்களின் உரிமைகளை மீளப்பெற முடியும் ஆனால் ஏற்றுமதியாகும் மண்ணையும் கல்லையும் இழக்க முடியுமா என்று புலம்புவோருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.

http://www.pathivu.com/news/17712/57//d,article_full.aspx

கூட்டமைப்பு இதை இந்திய அதிகாரிகளுடன் பேச முயலவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.