Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிமைகள் புறக்கணிக்கப்பட்டால் மீண்டும் ஆயுதத்தை ஏந்தவேண்டி வரும்

Featured Replies

உரிமைகள் புறக்கணிக்கப்பட்டால் மீண்டும் ஆயுதத்தை ஏந்தவேண்டி வரும்! -

போராளி குறிப்பிட்டதாக நெதர்லாந்து ஊடகம் செய்தி

தமது உரிமைகளும், அபிலாசைகளும் மதிக்கப்படாது தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டால், தான் ஆயுதத்தை மீண்டும் ஏந்தவேண்டி வரும் என விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் தெரிவித்ததாக நெதர்லாந்தின் வானொலி நிறுவனமான RADIO NETHERLANDS WORLDWIDE செய்தி வெளியிட்டுள்ளது.

இப்போராளி போரை விரும்பவில்லை எனவும், ஆனால் தமக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என இப்போராளி கருதுவதாகவும் இவ்வூடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் வளாகத்திற்குள் வைத்து விடுதலைப் புலிகளின் போராளிகள் ஒன்பது பேரிடம் இவ்வூடகம் செவ்வி கண்டுள்ளது. இவர்களில் ஆறு ஆண் போராளிகளும், மூன்று பெண் போராளிகளும் உள்ளடங்கியிருந்தனர்.

இப்போராளிகள் போரும், தமது இன்றைய வாழ்வியல் குறித்துவிளக்கமாகவும், வெளிப்படையாகவும் தமது

கருத்துக்களைத் தெரிவித்ததாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இவ்வூடகம் குறிப்பிட்டுள்ள முக்கியமான பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

'இலங்கையில் அமைதியும், சமாதானமும் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகின்ற போதிலும், வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்கள் தற்போதும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். சிங்கள மக்கள் பெற்றிருக்கும் உரிமைகளைப் போன்று தமிழ் மக்களாகிய தாமும் சமவுரிமைகளைப் பெற்று வாழவில்லை என உடலாலும், மனதாலும் காயப்பட்ட இப்போராளிகள் கூறுகின்றனர்.

போரின் வடுக்களைத் தாங்கியவாறு காணப்பட்ட இப்போராளிகளில் இருவரைத் தவிர ஏனையோர் தமது சுய விருப்பத்தின் பேரில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தார்கள். வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது இப்போராளிகளில் சிலர் சிறலங்கா படைத்தப்பினரிடம் தாமாகவே சரணடைந்திருந்ததுடன், ஏனையோர் படைத்தரப்பினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் பின்னர் சிறிலங்கா படைத்தரப்பினரால் தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அத்தடுப்பு முகாமில் சித்திரவதைகள் இடம்பெற்றதாகவும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இத்தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்ட இப்போராளிகளில் உள்ளடங்கியிருந்த மூன்று போராளிகள் தமது எதிர்கால வாழ்வின் உறுதியற்ற தன்மை குறித்து கவலை தெரிவித்தனர்.

இவர்களில் பெரும்பாலான போராளிகள் தாமும் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். தாங்கள் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்த போதிலும், சுதந்திரமாக வாழவில்லை எனக் கூறுகின்றார் ஒரு போராளி.

இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் படிவம் ஒன்றில் மாதாந்தம் கையெழுத்திட வேண்டும். சிறிலங்கா பொலிஸார் இப்போராளிகளை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றனர். தனது வீட்டுக்கு கடந்த வாரம் வந்த சிறிலங்கா பொலிஸார் வீட்டை சோதனையிட்டதாக ஒரு போராளி கூறுகின்றார்.

தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் சிங்கள் மக்களை விட தமிழ் மக்கள் பல நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். தமிழ் மக்களின் பிரதேசங்களில் காணப்படும் அரச திணைக்களங்களில் தொழில் வாய்ப்பைப் பெற முயற்சிக்கும் தழிழர் ஒருவர் சிங்கள மொழி நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, வடக்குக் கிழக்குப் பகுதிகள் சிறிலங்கா அரசாங்கத்தால் திட்டமிட்டு சிங்கள மயப்படுத்தப்பட்டு வருவதாக இப்போராளிகள் தெரிவிக்கின்றனர். தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர்.

சிறிலங்கா படைத்தரப்பினர் தமிழ் மொழியில் பேசுவதற்கு மறுக்கின்றனர். சிறிலங்கா பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமிழர் ஒருவரை சிங்கள மொழியில் கேள்விகள் கேட்டதை நாம் நேரடியாகப் பார்த்தோம். அவருக்கு சிங்கள மொழி தெரியாததால் ஆங்கிலத்தில் பேசுமாறு சிறிலங்கா பொலிஸார் பணித்தனர்.

சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு அறிக்கை போன்றன சர்வதேச சமூகத்தின் கவனத்தை இலங்கை மீது திருப்பியுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற போதிலும், சமாதானத்திற்கான போரில் இலங்கை இன்னும் வெற்றி பெறவில்லை என சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் தமது உரிமைகளும், அபிலாசைகளும் மதிக்கப்படாது தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டால், தான் ஆயுதத்தை மீண்டும் ஏந்தவேண்டிவரும் என ஒரு போராளி கூறுகின்றார்' என இவ்வூடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={E811DF79-1154-4FCA-AAA8-73EF3DDD3DFE}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.