Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு யூஎன்பிக்குள் கடும் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு யூஎன்பிக்குள் கடும் எதிர்ப்பு

Posted by: on Jul 29, 2011

கொழும்பு, பொறல்லை அரச மரச்சந்தியில் UNP கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் படுமோசமாகக் கேலி பண்ணும் பாடல்கள் அடங்கிய ஒலி நாடாக்கள் விற்பனையாகின்றன. இவருடைய தலைமைக்கு எதிராகக் கிளம்பியுள்ள கட்சி உறுப்பினர்கள் இந்த ஒலி நாடாக்களைத் தயாரித்திருக்கின்றனர்.

1949ல் பிறந்த ரணில் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர். குடும்பச் சொத்து நிறைய இருப்பதால் வழக்கறிஞராகச் சித்தி பெற்றாலும் நீதி மன்றம் செல்லும் தேவை அவருக்கு ஏற்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் மருமகன் என்ற பலமும் இவருக்கு இருக்கிறது.

1977ல் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் தெரிவு செய்யப்பட்டார். 1994ல் காமினி திசநாயக்காவின் அகால மரணத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அன்று தொட்டுக் கட்சியின் வீழ்ச்சி ஆரம்பித்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கட்சியை மக்களிடம் எடுத்துச் செல்லத் தவறியவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்படுகிறது. கட்சியின் மூத்த உறுப்பினர்களின் ஒற்றுமையைக் குலைப்பது, அதன் மூலம் தனது தலைமையைப் பலப்படுத்துவது போன்ற குற்றச் சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

சூழ்ச்சி, துரோகம், முதுகில் குத்துதல் போன்றவை அவருடன் கூடப் பிறந்த குணங்கள் என்று அவருடைய வரலாறு நிரூபிக்கிறது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் ரணில் விக்கிரமசிங்க ஒரு தீண்டத் தகாத மனிதர் என்பது வெளிப்படை.

தனது அரசியல் வாழ்வில் அவர் இரண்டாவது முறையாகவும் கடைசியாகவும் டிசம்பர் 2001ல் சிறிலங்காவின் பிரதமரானார். இனப்பிரச்சனையை அமைதி வழியில் தீர்க்கும் வசதி அப்போது அவருக்குக் கிடைத்தது. அவருடைய பதவியேற்புக்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஒருதலைப் பட்சமாகப் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.

இதை ரணில் அரசு ஏற்றுக்கொண்டது. இதன் பயனாய் நோர்வே அரசின் மத்தியட்சத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம் இரு பகுதிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க தனது சுயகுணத்தைக் காட்ட ஆரம்பித்தார்.

மார்ச் 2002ல் (CFA) அல்லது (Ceasefire Agreement) எனப்படும் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க இலங்கை இராணுவத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் உடனடியாக இறங்கிவிட்டார். 22 யூலை 2002ல் அவர் அமெரிக்கா பயணமானார்.

அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ் ரணிலை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார். இருவரும் நடத்திய இரகசியப் பேச்சு விவரங்கள் இன்று வரை வெளிவரவில்லை. ஆனால் சில முடிவுகளை ஊகிக்க முடிகிறது. ஓகஸ்ட் 2002ல் அமெரிக்க சீல் கொமான்டோ அணியினர் சிறிலங்காவுக்கு வந்தனர்.

இவர்கள் சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்தும் பயிற்சி, கடல் மார்க்கமாகச் சென்று தரையேறித் தாக்குதல் நடத்தும் பயிற்சி உட்பட வியற்நாம் போரில் கிறீன் பெறே (Green Beret) படையினர் நடத்திய தாக்குதல் பயிற்சிகளையும் வழங்கினார்கள்.

அதே ஒகஸ்ட் 2002ல் அமெரிக்கத் துணை இராஜங்கச் செயலர் றிச்சாட் ஆர்மிற்றே~; (Richard Armitage) கொழும்புக்கு வந்தார். ஆனால் உடனடியாக அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் சகிதமாக அவர் பலாலி படைமுகாமுக்குச் சென்று இரகசியப் பேச்சுக்களில் இறங்கினார். அவர் முகமாலை வரை சென்றார்.

செப்ரம்பர் 14, 2002ம் நாள் தாய்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் முதலாம் சுற்றுப் பேச்சுக்கள் நடந்தன. ஆரம்ப நாளன்று நடந்த நிகழ்ச்சிகளில் தாய்லாந்துக்கான அமெரிக்க தூதர் டறல் ஜாக்சன் (Darrel Jackson) நேரடியாகப் பங்கு பற்றினார்.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் விடுதலைப் புலிகளின் பேச்சு வார்த்தைக் குழுவினரை நோட்டம் விட்டனர். ஒரு சிங்களப் பெண் புலனாய்வாளர் கருணாவுடன் நெருங்கி உறவாடினார். மேற் கூறியவை அனைத்தும் விடுதலைப் புலிகளைப் பதற்றமடையச் செய்தன.

முதலாவது பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு நான்கு நாட்கள் இருக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்றார். உயர் மட்ட அமெரிக்க அதிகாரிகளும் ரணிலுடன் சென்ற இராணுவ அதிகாரிகளும் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

ஆறு சுற்றுப் பேச்சுக்கள் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்தன. ரணில் வழங்கிய வாக்குறுதிகள் ஒன்றையும் அவர் நிறைவேற்றவில்லை. அவர் விடுதலைப் புலிகளின் வலுவைக் குறைத்து அவர்களைச் செல்லாக் காசாக்குவதில் முனைப்பாக இருந்தார். அவரை வெறுப்பதற்கும் வைத்திருந்த நம்பிக்கையை இழப்பதற்கும் இதுவே காரணம்.

ஈழத்தமிழர் வரலாற்றில் மாபெரும் இழப்புக்களும் திருப்பங்களும் காலப்போக்கில் ஏற்படுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் குணக் குறைபாடுகள் வரலாற்றுக் காரணங்களாக அமைகின்றன.

அவருடைய முதுகில் குத்தும் இயல்பிற்கு மேலும் இரு உதாரணங்களைக் கூறலாம். அவர் புது டில்லியுடன் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்ய முயற்சித்தார். அதற்கு புது டில்லி அரசு சம்மதிக்கவில்லை. ஆனால் அப்படியான ஒப்பந்தத்திற்கு நிகரான உதவிகளை வழங்க புது டில்லி ஒத்துக் கொண்டது.

UNP கட்சி உறுப்பினர் அலி சாகீர் மௌலானா ஊடாக அவர் கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து மார்ச் 2004ல் பிரித்தெடுத்தார். கருணாவின் போராட்ட வரலாறு முடிவுற்றதோடு ஈழத்தமிழரின் தாயக ஒற்றுமையும் தற்காலிகமாகச் சிதைக்கப்பட்டது.

முற்பகல் செய்யப் பிற்பகல் விளையும் என்பார்கள். இன்று சிறிலங்காவின் மிகப் பழமை வாய்ந்த அரசியல் கட்சி சுக்கு நூறாக உடைந்து கிடக்கிறது. வெளியேறு அல்லது வெளியேற்றப் படுவாய் என்று UNP உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கட்டளையிட்டுள்ளனர். தனது தலைமைத்துவத்தை தக்க வைப்பதற்காக அவர் அரசின் உதவியை நாடினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

சஜித் பிரேமதாச போன்ற துடிப்பான இளைஞர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றால் அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு UNPக்கு இருக்கிறது. அத்தோடு சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து ராஜபக்ச சகோதரர்களை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தவும் முடியும்.

http://www.tamilkathir.com/news/5161/58//d,view.aspx

எம்மை பொறுத்தவரையில் அல்ல தலைமைகளும் ஒன்றே, பாம்புகள், சாரையோ, நாகமோ இல்லை புடையனோ...

ஆனால் அவை தமக்குள் மோதிக்கொள்வது எமக்கு நன்மையே, முடிந்தால் நாமும் உதவி செய்யவேண்டும். மோதல்கள் பெருக்க.

சிறிய பாம்பு என்றாலும் பெரிய தடி கொண்டு அடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.