Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“புலிகளுக்காக மேலதிக நேரவேலை செய்கின்றன“ - பிரித்தானிய ஊடகங்கள் மீது பாய்கிறார் சவீந்திர சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“புலிகளுக்காக மேலதிக நேரவேலை செய்கின்றன“ - பிரித்தானிய ஊடகங்கள் மீது பாய்கிறார் சவீந்திர சில்வா

[ திங்கட்கிழமை, 01 ஓகஸ்ட் 2011, 00:18 GMT ] [ கார்வண்ணன் ]

பிரித்தானிய ஊடகங்கள் சிறிலங்கா அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களின் உத்தரவுக்கு அமையவே பிரித்தானியா ஊடகங்கள் அவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இராஜதந்திர முனையில் சிறிலங்கா மீது நெருக்கடி கொடுப்பதற்காக விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களால் சனல் -4 தொலைக்காட்சி குத்தகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்காக மேலதிக நேர வேலைகளை செய்யும் சனல்-4 வலையமைப்பு தன்னிடம், பெறப்பட்ட செவ்வியை முழுமையாக ஒளிபரப்ப முடியுமா என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சவால் விடுத்துள்ளார்.

அந்தச் செவ்வியை நாங்கம் பதிவு செய்வோம் என்றோ அல்லது சிறிலங்கா வலையமைப்புகள் ஊடாக வெளியிடுவோம் என்றோ அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கூறிய அவர், தற்போது அது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பணியகம் செல்லும் வழியில் அவர்கள் தன்னைத் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்ததால், அந்த இடத்தில் செவ்வியை ஒளிப்பதிவு செய்ய தயார் நிலையில் இருந்ததாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.

சரணடைவோரின் கதையை முடித்து விடுமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எனக்கு உத்தரவிட்டதாக கூறிய அந்த இராணுவ அதிகாரியின் அடையாளத்தை வெளிப்படுத்துமாறும் சனல்4 தொலைக்காட்சியின் வெளிவிவகார செய்தியாளர் ஜொனாதன் மில்லரிடம் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சவால் விடுத்துள்ளார்.

மரபுவழி இராணுவப் பலத்தை இழந்துள்ள நிலையிலும், விடுதலைப் புலிகளின் குழுக்கள் தமது இலக்குகளை அடைவதற்கு பிரித்தானிய ஊடகங்கள் மேலதிக நேரத்தை ஒதுக்கி பணியாற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சனல்-4 தொலைக்காட்சியின் தகவல்களை வைத்துக் கொண்டு போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் நாடுகள், அவர்களுக்குத் தகவல் வழங்கியவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துமாறு கோர வேண்டும் என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக் கூறும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் ஏனைய குற்றங்கள், 40,000பேரின் கொலைகள் தொடர்பாக உண்மையிலேயே கரிசனை கொண்டிருந்தால், அனைத்துலக சமூகத்தின் முன்பாக அவர்கள் தமக்கு தகவல் வழங்கியவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முகம் தெரியாதவர்களின் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு தம்மால் பொறுப்புக் கூற முடியாது என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110801104393

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.